குழந்தைகளின் உயிரை காப்பாற்றும் சூப்பர் வாழைப்பழம்

வளர்ந்து வரும் நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் 7,50,000 குழந்தைகள் விட்டமின் ஏ குறைபாடால் உயிரிழக்கின்றனர்.

அதுமட்டுமின்றி விட்டமின் ஏ குறைபாடு குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக திகழ்கிறது.

மேலும் கடுமையான தொற்றுநோய்களையும் உருவாக்குகிறது, இதை சமாளிக்கும் வகையில் அவுஸ்திரேலியா விஞ்ஞானிகள் விட்டமின் ஏ நிறைந்த ஒரு புரட்சிகர புதிய வகை வாழைகளை உருவாக்கியுள்ளனர்.

10 ஆண்டுகளாக புதிய வகை வாழைகளை உருவாக்கி வரும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இதற்கு நிதி அளித்த பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

பப்புவா நியூ கினியாவில் காணப்படும் ஏராளமான வாழையிலிருந்து மரபணுக்களைப் பயன்படுத்தி இந்த புதிய வகை வாழை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குமறை சோதனைக்கு பின் ஆறு ஆண்டுகளுக்குள் உகாண்டாவில் சாப்பிடுவதற்கு பழம் கிடைக்கும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

-lankasri.com