உடலில் முக்கியமான ஒன்று உமிழ் நீர். இந்த எச்சையானது நாம் உண்ணும் உணவினை செரிக்க செய்வது மற்றும் உடலில் பாக்டீரியா தன்மையை கட்டுப்படுத்த உதவுகிறது.
வாயில் உமிழ்நீரான எச்சை குறைந்தால் நாக்கு வறட்சி, ஈறுகளில் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
உமிழ்நீர் குறைவதற்கான காரணங்களை காண்போம்
சர்க்கரை வியாதி, அம்மை, முடக்குவாதம் போன்றவற்றாலும், அதற்கு உட்கொள்ளும் மருந்துகளாலும் ஈரத்தன்மை குறைந்து நா வறட்சி ஏற்படுகிறது. மன அழுத்தம் கொண்ட நபர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கு தரப்படும் ரேடியோ தெரபியால் கூட உமிழ்நீர் சுரப்பி பாதிக்கப்பட்டு நாவறட்சி ஏற்படும்.
விபத்து அல்லது அறுவை சிகிச்சையினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அதன் காரணமாகவும் நாவறட்சி ஏற்படலாம்.
தண்ணீர் சரியான அளவில் குடிக்காமல் இருப்பவர்களுக்கும் நா வறட்சி ஏற்படும். வாந்தி, காய்ச்சல் மற்றும் இரத்தப் போக்கு காரணமாகவும் இந்த பிரச்சனை வரலாம்.
வாயை திறந்து மூச்சு விடுபவர்களுக்கும் மற்றும் அதிகளவில் சிகரெட் போன்ற புகையிலையை பயன்படுத்துவோருக்கும் உமிழ்நீர் சுரப்பி பாதிக்கப்பட்டு நாவறட்சி ஏற்படும்.
-lankasri.com