நிலக்கடலையில் உடல் நலத்திற்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன.
100 கிராம் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட்- 21 மி.கி, நார்சத்து- 9 மி.கி, கரையும் கொழுப்பு – 40 மி.கி, புரதம்- 25 மி.கி, ட்ரிப்டோபான்- 0.24 கி, திரியோனின் – 0.85 கி, ஐசோலூசின் – 0.85 மி.கி, லூசின் – 1.625 மி.கி, லைசின் – 0.901 கி, குலுட்டாமிக் ஆசிட்- 5 கி, கிளைசின்- 1.512 கி, விட்டமின்கள் – B1- B6, காப்பர் – 11.44 மி.கி, இரும்புச்சத்து – 4.58 மி.கி, மெக்னீசியம் – 168.00 மி.கி, மேங்கனீஸ் – 1.934 மி.கி, பாஸ்பரஸ் – 376.00 மி.கி, பொட்டாசியம் – 705.00 மி.கி, சோடியம் – 18.00 மி.கி, துத்தநாகச்சத்து – 3.27 மி.கி, நீர்ச்சத்து – 6.50 கிராம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
நிலக்கடலையில் உள்ள மருத்துவ நன்மைகள்
- நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாது.
- பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நிலக்கடலையில் உள்ள மாங்கனீஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள், எலும்புத்துளை நோய் வராமல் தடுக்கும்.
- தினமும் 30 கிராம் அளவுக்கு நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்கும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்தது.
- நிலக் கடலை சாப்பிட்டால் எடை எடை குறையும். இதில் உள்ள ரெஸ்வ ரெட்ரால் எனும் சத்து, இதய வால்வுகளை பாதுகாத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
- நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் எனும் ஆன்டி-ஆக்ஸிடென்ட், நம் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, என்றும் இளமையோடு இருக்க உதவுகிறது.
- நிலக்கடலையில் உள்ள விட்டமின் மற்றும் நியாசின் சத்துக்கள், மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் உதவுவதுடன், ரத்தோட்டத்தை சீராக்குகிறது.
- நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் உள்ளது. இது செரட் டோனின் என்ற மூளையின் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது.
- நிலக்கடலை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை சீராக்க உதவுகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படும்.
- -lankasri.com