வெள்ளை சர்க்கரை: 5 தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்

sugarஇனிப்பு விரும்பாத எவரும் இருக்க முடியாது. இந்த விருப்பந்தான் வெள்ளை சர்க்கரையின் அதிக பயன்பாட்டிற்கு வழி வகுக்கின்றது. வெள்ளை சர்க்கரைஅதிகம் பயன்படுத்துவதால் அது சர்க்கரை நோயை வரவழைக்கும் என்பது பொதுவாக கூறப்படும் ஒன்று.

ஆனால் உணவு வகைகளில் வெள்ளை சர்க்கரையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் கடுமையான உடல் உபாதைகள ஏற்படுத்தும் என்பது பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வெள்ளை சர்க்கரை அதிக அளவு பயன்படுத்துவதால் நமது உடலுக்கு ஏற்படும் 5 தீமைகள் குறித்து பார்க்கலாம்:

இருதயத்தை பாதிக்கின்றது

வெள்ளை சர்க்கரையில் அடங்கியுள்ள குளூக்கோஸ் மெற்றபோலைட் குளூக்கோஸ் 6-பாஸ்பேட் எனும் மூலக்கூறு நமது இதயத்தை சிறுகச்சிறுக பாதிக்கின்றது. இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு இருதயத்தின் நிலை பாதிப்புக்குள்ளாகும், மேலும் இருதய வால்வுகளுக்கு கடுமையான சிக்கலை ஏற்படுத்துகிறது.

உடல் எடை அதிகரிப்பு

வெள்ளை சர்க்கரை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் வயிற்றிக்கு இரு பக்கமும் குழுப்பு சேர்வதால் உண்டாகும் அதிக உடல் எடை உருவாகும். இது பின்னர் கடுமையான உடல் உபாதைகளை உருவாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

தற்போது சந்தைப்படுத்தப்பட்டிருக்கும் அனைத்துவகை குளிர்பானங்களிலும் அளவுக்கு அதிகமான சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதிக அளவு குளிர்பானங்கள் பயன்படுத்துவதும் உடல் எடை அதிகரிக்கச் செய்கிறது.

புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம்

சர்க்கரை அதிகம் பயன்படுத்துவதால் உடல் உறுப்புகளின் இயக்கத்தில் மாறுதல் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவும், இது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கல்லீரல் பாதிப்பு

வெள்ளை சர்க்கரை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் அது கல்லீரலை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கின்றது. அதிக மது அருந்துவதால் கல்லீரலுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படுத்துமோ அதே அளவு பாதிப்பை வெள்ளை சர்க்கரை கல்லீரலுக்கு ஏற்படுத்துகின்றது.

இதனால்தான், தொடர்ந்து குளிர்பானங்கள் பயன்படுத்துபவர்களுக்கு திடீரென்று கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் பொலிவை இழக்கும்

சர்க்கரை அதிகம் பயன்படுத்துவதால் உடல் பொலிவை இழக்கும். இது உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

-lankasri.com