பப்பாளியில் பழத்தில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், விட்டமின் A, C, மற்றும் E போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
எனவே இந்த பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நிறைய நன்மைகளை பெறலாம்.
பப்பாளி பழத்தின் நன்மைகள்?
- பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல், எலும்புகளின் வளர்ச்சி அதிகமாகுவதுடன், பற்களின் உறுதி மேம்படும்.
- பப்பாளிக் காயை கூட்டாக செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அதிகப்படியான உடல் பருமன் படிப்படியாக குறையும்.
- பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரல் ஏற்படும் வீக்கம் குறையும்.
- பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி பிரச்சனைகள் குறையும்.
- பப்பாளி பழத்தை கூழாக பிசைந்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து, சுடுநீரில் கழுவினால், முகச்சுருக்கம் மறையும்.
- பப்பாளி பழத்தின் விதைகளை அரைத்து, அதை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
- பப்பாளிக் காயில் உள்ள பாலை எடுத்து வாய்ப்புண் மற்றும் மற்ற புண்கள் மீது தடவினால், புண்கள் விரைவில் ஆறும்.
- பப்பாளியின் இலைகளை அரைத்து, உடலில் ஏற்படும் கட்டி மீது போட்டு வந்தால், கட்டி உடைந்து விரைவில் குணமாகும்.
- பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் தடவினால், விஷம் இறங்கி, வலி குறையும்.
- பிரசவித்த பெண்கள் தங்களின் உணவில் பப்பாளிக் காயை சேர்த்து கொண்டால், பால் சுரப்பு அதிகரிக்கும்.
- -lankasri.com