கீரை வகைகளில் சிறந்த பொன்னாங்கண்ணி கீரையை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள்?
- பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு மற்றும் உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
- துவரம் பருப்பு, நெய் ஆகியவற்றை பொன்னாங்கண்ணி கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் வலிமையாகி, உடல் எடை அதிகரிக்கும்.
- பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கடுமையான வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், இதயம் மற்றும் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
- பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால், மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்கள் குணமாகுவதுடன், கண் பார்வை கூர்மையாகும்.
- பொன்னாங்கண்ணி கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
- பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால், சருமத்தின் அழகு அதிகரிக்கும்.
- -lankasri.com
நல்ல பொன்னாங்கண்ணி கீரை எங்கு கிடைக்கிறது?