காய்கறிகளை விட.. சத்துக்கள் அதிகம்: வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்

முளைக்கட்டிய தானியத்தில் புரதச்சத்து, விட்டமின் A, C, E, B-காம்ப்ளக்ஸ், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அவசியமான கொழுப்புகள் போன்றவை உள்ளது.

முளைகட்டிய தானியங்களை சாப்பிடுவதன் நன்மைகள்?
  • முளைக்கட்டிய தானியங்கள் உடல் எடையைக் குறைத்து, செரிமானத்தை சீராக்க உதவுகிறது.
  • உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் பெரிதும் உதவுகிறது.
  • முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால், நம் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களின் சுரப்பு சீராக கிடைக்க உதவுகிறது.

முளைக்கட்டிய தானியத்தை எப்படி சாப்பிடலாம்?

ஒரு நாளைக்கு எதாவது ஒரு வேளை முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். அதுவும் பாதி உணவு மற்றும் முளைகட்டிய தானியங்களை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.

ஆனால் முளைகட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. காலை உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

அதுவே தானியங்கள் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால், முளைகட்டிய தானியங்களை வேகவைத்து சாப்பிட வேண்டும்.

முளைகட்டிய தானியங்கள் சில நேரத்தில் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு வேகவைத்து கொடுக்க வேண்டும்.

தினமும் ஒரு வகையான தானியங்களை எடுக்காமல், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான தானியங்களை சாப்பிட வேண்டும்.

குறிப்பு

தானியத்தை முளைகட்ட வைக்க சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். கடைகளில் கிடைக்கும் முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடக் கூடாது.

-lankasri.com