‘நியாயமான, சுதந்திரமான, முற்போக்கான மலேசியாவை உருவாக்கும் போராட்டத்துக்கு எப்போதும் துணை நிற்போம்’
கொகிடோ எர்கோ சம்: பத்திரிகைச் சுதந்திரம் விலை மதிக்க முடியாதது. எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் எங்களால் முடிந்ததைக் கொடுப்போம். நாளையே உதவி தேவை என்றால் மக்களை நீங்கள் நம்பலாம். மீண்டும் மீண்டும் கொடுப்பார்கள்.
மலேசியாகினி மக்கள் நலன்காக்கும் ஒரு கழகம். அது நம்பிக்கையளிக்கும் கலங்கரை விளக்கு, ஊக்கமளிக்கும் தாரக மந்திரம், தகவல் களஞ்சியம். அதிகாரமீறலால் பாதிக்கப்படுவோர் குறைகளை எடுத்துரைக்கும் மேடை. நீ நீடு வாழ்க, வளம் பெறுக.
ஜேக் எண்ட் ஜில்: மலேசியாகினி தலைமைச் செய்தியாசிரியர் ஸ்டீபன் கானுக்கும் தலைமைச் செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரனுக்கும் நன்றி.
நான் நாள்தோறும் மலேசியாகினியை வாசிப்பேன். மலேசியாகினி என்னில் ஒரு பகுதியாகிவிட்டது. அரசியல் உலகின் நடப்புகளை அறிந்துகொள்ள நீங்கள் செய்யும் உதவி அளப்பரியது.
உங்கள் நற்பணி தொடரட்டும். மலேசியாகினிக்கு ”இடர்கள்” வந்தால் தோள் கொடுக்கத் தயாராக உள்ளோம்.
பெயரிலி_1397613657: யாகூ! மலேசியாவின் இலக்கு (ரிம350,000 திரட்டுவது) அடையப்பட்டு விட்டது. புதன்கிழமை என் மகன் மூலமாக தெரிந்துகொண்ட நல்ல செய்தி இதுதான். செய்தி கேட்டு அகமகிழ்ந்தேன்.
பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் பணி. உங்கள் பின்னே உங்களுக்குப் பக்கபலமாக இருப்போம். 14வது பொதுத் தேர்தலில் நீதி நிலைநிறுத்தப்படுமாக.
பி.தேவ் ஆனந்த் பிள்ளை: அன்பு ஸ்டீபன், பிரமேஷ், தொடர்க உங்கள் பணி. நம் நாட்டில் இப்பணியைச் செய்வது எளிதல்லதான். ஆனாலும், எங்காவது தொடங்கத்தான் வேண்டும். முடிவில், முயற்சி வெற்றி தரும்.
சுதந்திர ஊடகங்களால் என்ன சாதிக்க முடியும் என்பதை மக்கள் இப்போது உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு என் முழு ஆதரவு.
தனி நட்சத்திரம்: பாராட்டுகள் ஸ்டிபன், பிரமேஷ். சூழ்ந்துள்ள இருளை விலக்க ஒளிவிளக்கைத் தொடர்ந்து எரிய விடுங்கள். 14வது பொதுத் தேர்தலுக்குப் பின் எங்கும் ஒளி பரவி நிற்கட்டும்.
எங்களுக்காக மலேசியாகினி இருப்பதுபோல் மலேசியாகினிக்காக நாங்கள் இருக்கிறோம்.
ஏன்? : நியாயமான, சுதந்திரமான, முற்போக்கான மலேசியாவை உருவாக்க நீங்கள் நடத்தும் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.
கிளியர்வாட்டர்: இதுதான் மலேசியாகினி, இப்படித்தான் இது தொடர்ந்து இருத்தல் வேண்டும்- மக்களின் சுதந்திரக் குரலாய்.
இன்றைய உலகில் இப்படி இருப்பது கடினம். அது அப்படியே இருத்தல் வேண்டும் என்பதற்காகத்தான் எண்ணற்றவர் முன்வந்து உதவியுள்ளனர்.
சுவாமி3: ஒரு நேரத்தில் செங்கல் ஆதரவாளன். இப்போது வாழ்நாள் ஆதரவாளன். மலேசியாகினி மீது வழக்கு தொடுக்கப்படுவதற்கும் மிரட்டப்படுவதற்கும் அதன் இரண்டு கொள்கைகளே காரணம் – உண்மைச் செய்தி, உடனடிச் செய்தி.
மலேசியாகினியர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். நன்றி.
பெயரிலி1058841433936091: நான் ஒரு நாளில் நான்கு தடவையாவது மலேசியாகினியை வாசிப்பேன். உண்மை உரைக்கும் உங்களுக்கு என் நன்றி. மீண்டும் உங்களுக்கு உதவி தேவையா, சொல்லுங்கள், நான் உதவத் தயார்.
We need Freedom of expression. Malaysiakini is doing it.Long Live Malaysiakini. Hope to see good news in the forth coming GE14 Malaysia.