கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியா இந்து கழக (சங்கம்) தலைவர் டத்தோ மோகன் சாண் தலைமையில் இந்திய வட்டத்தில் ஒருங்கிணைந்திருக்கும் ஏழு இன இயக்கங்கள் ஒன்றிணைந்து தலைமை(பிரதமர்) அமைச்சின் தே(சி)ய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு சிறப்பு ஆலோசகர் டத்தோ எங் சாய் கெய் அவர்களிடம் ஏப்ரல் 14- ஐ இந்து புத்தாண்டு அல்லது இந்திய விழா என்ற பெயரில் பொதுவிடுமுறை கேட்டும் தே(சி)ய நாள்காட்டியிலும் பதிவு செய்ய கோரியும் வேண்டலீடு (மகசார்) அளித்தனர் என்று குமுக ஊடகங்களில் வெளியாகியது.
இந்த பொதுவிடுமுறை சாத்தியம் பற்றி கடந்த ஆண்டு மே மாதத்தில் டத்தோ எங் சாய் கெய் அவர்கள் இந்து கழகத்திடம்(சங்கம்) தெரிவித்துள்ளார். இந்து கழகம் அதன் ஆலோசக மன்றத்துடன் கலந்தாலோசித்து இருக்கிறார்கள்.அதன் பிறகு, இந்து கழக ஆலோசகர் மன்றம், அர்ச்சகர் சங்கம் மலேசியா, திவாய்ன் லைவ் சோசாயிட்டி, இராமகிருட்டிணன் மிசன், ஐசுகோன் மற்றும் இந்து அறிஞர்கள் சிவசிறி முத்துக்குமார சிவச்சாரியார், சிவசிறி நித்தியானந்த குருக்கள், பேராசிரியர் முனைவர் டத்தோ இராசேந்திரன் முனைவர் திலகாவதி கலந்தாலோசித்து ஏப்ரல் 14- ஐ இந்து புத்தாண்டு அல்லது இந்திய விழா பொதுவிடுமுறை என்று ஒருமனதாக முடிவு செய்தனர். இந்தத் தீர்மானத்தை உடனடியாக டத்தோ எங் சாய் கெய் பணிமனைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து கடந்தாண்டு நவம்பரில் டத்தோ எங் சாய் கெய் பணிமனையில் மலேசியா இந்து கழகம் சந்திப்பு நடத்தியிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து பெட்டாலிங் செயாவில் அமைந்திருக்கும் இந்து கழக தலைமை பணிமனையில் மலேசியா தெலுங்கு கழகத் தலைவர் டத்தோ அச்சையா இராவ், எல்லா மலேசியா மலையாளி கழகத் தலைவர் டத்தோ சுசீலா மேனன், மலேசியா பெங்காலி கழகத் தலைவர் முனைவர் சென் குப்தா, மகாசுத்ரா மகாமண்டல் தலைவர் திருமதி சில்ப்பா தங்கசேல் மற்றும் இந்து கழகத் தலைவர் டத்தோ மோகன் சாண் தலைமையில் கூட்டம் நடத்தி ஏப்ரல் 14- ஐ இந்து புத்தாண்டு அல்லது இந்திய விழாவாக பொதுவிடுமுறை தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர் அதோடு கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத சிந்தி கழகத் தலைவர் டத்தோ சா இலச்சன் இராய், குசராத்தி கழகத் தலைவர் டத்தோ புபத்ராய் மற்றும் மலேசியா குரு வார்ட்சு பேரவைத் தலைவர் சர்தார் சகீர் சிங்கும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். மலேசியாவில் இந்தியர் ஒருங்கிணைப்பில் தங்கள் இனத்திற்கு வெவ்வேறு புத்தாண்டுகள் இருந்தாலும் பெரும்பான்மையாக தமிழர்களாக இருப்பதால் ஏப்ரல் 14-ஐ பொதுவிடுமுறையாக முன்மொழிகிறோம் என்று டத்தோ சுசிலா மேனன் மலையாள கழகத் தலைவர் கூறுகிறார்.
டத்தோ மோகன் சான் டத்தோ என் சாய் கெய்யுடன் சந்திப்பை பற்றியும் மற்றும் இந்து கழகம் தலைமை பணிமனையில் ஏற்பாடு செய்த இன கழகங்கள் அமைப்பு கூட்டத்தைப் பற்றியும் மலேசியா தமிழர்களுக்கும் மற்றும் இயக்கங்களுக்கும் தெரிவிக்காமல் மலேசியாத் தமிழர்களுக்கு கீழிருப்பு செய்திருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
ஏழு இனக் கழகங்களை அந்தந்த இனத்தின் பதிலாளாக(பிரதிநிதி) அழைத்த டத்தோ மோகன் சாண் எந்த ஒரு தமிழர் இன இயக்கங்களையும் அழைக்காமல் தான் தோன்றித் தனமாக தனக்குத் தானே தமிழர் இனத் தலைவராக முடி சூடிக்கொண்டு தமிழர் இனம் சார்பாக வேண்டலீடில் (மகசார்) கைப்பொமிட்டுள்ளார். இந்திய ஒருங்கிணைப்பில் தமிழர்கள் 75% பெரும்பான்மை என்பதாலும் இந்து கழகத்தில் உறுப்பினர்களில் 85% தமிழர்கள் உறுப்பினர்களாக இருப்பதாலும் மலேசியா இந்து கழக 29 இயக்குநர்களில் 24 பேர் தமிழர் என்பதால் மலேசியா இந்து கழகம் தமிழர்களுக்கு பதிலாளாக (பிரதிநிதிப்பதற்கு) உரிமை உண்டு மற்றும்
வேண்டலீடில் (மகசர்) தமிழர் இனத் தலைவராக கையொப்பம் இட டத்தோ மோகன் சாணை ஏற்றுக்கொண்டணர் என்று இந்து கழக செயலாளர் திரு கணேசன் தங்கையா விளக்கம் அளித்துள்ளார், இது மாபெரும் ஒரு பித்தலாட்ட தனமாகும்! இதை மலேசியா இந்து கழகம் தன் முகநூலில் 8.2.17ல் இடுக்கையிட்டிருக்கிறது.கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து 5.2.18 வரை தமிழர் இயக்கங்ளுக்கு எந்த தகவலை அளிக்காத டத்தோ மோகன் சாண், அவர் மீது தமிழர் தே(சி)ய செயல்பாட்டாளரும் தஞ்சோங் மாலிம் பேராங் இந்திய குமுக பொறுப்பாளர் திரு மைத்ரேயர் டத்தோ மோகன் சாணுக்கு எதிராக தலைமை(பிரதமர்) அமைச்சகத்திடம் தான் தான் தமிழர் இனத்தின் தலைவர் மற்றும் சுய தமிழர் என பொய்யுரைத்தார் என்று முதல் காவல்துறை புகாரை டத்தோ மோகன் சாணுக்கு எதிராக 07.02.18ல் செய்தப் பிறகே 9 மாதக் கால பொதுவிடுமுறை களப்பணிகளை இந்து கழக முகநூலில் வெளியிட்டிருக்கிறார்கள். தன்னை தமிழர் இல்லை என்று புகார் செய்துவிட்டார் என்பதால் இந்து கழகமும் அதன் தலைவர் டத்தோ மோகன் சாணும் இந்த தமிழர் இனச் சிக்கலை இந்து மத சிக்கலாக மடை மாற்றி அவரின் அரசியல் பணிக்கும் திரு மைத்ரேயருக்கும் அழுத்தத்தை கொடுப்பது கண்டிக்கதக்கது. மலேசியாத் தமிழர் பேரவை திரு மைத்ரேயர் அவர்களுக்கு அரணாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
தான் தமிழர் இனத்தின் தலைவர் என்றும் தமிழும் மதமும் இரு கண்கள் என்று கூறிக்கொள்ளும் டத்தோ மோகன் சாண் தமிழர் நலனுக்கு இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் அவர் என்ன செய்திருக்கிறார்? தமிழ்ப்பள்ளிகளை அழிவுக்கு வித்திடும் இருமொழி பாடத்திட்டத்திற்கு வாய் திறக்காதது ஏன்? மூன்று இலக்கம் (இலட்சம்) தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோதும், இனப்படுகொலையான் இராச பக்சேவும், உடந்தையாக இருந்த மைத்திரி சிறிசேனாவும் மலேசியா வருகையின் போதும் மலேசியாத் தமிழர்களும் இயக்கங்களும் எதிர்த்தனர், போராட்டம் செய்தனர் அப்போதெல்லாம் மௌன சாமியராக இருந்துவிட்டு இப்போது நான் தான் திடீர் தமிழரினத் தலைவர் என்பது வேடிக்கையானது! மற்றும் இந்தியர் ஒருங்கிணைப்பில் 75% பெரும்பான்மையாக தமிழர்கள் இருக்கும் போது ஏன் கோவில்களில் தமிழில் வழிப்பாடு இல்லை? இந்து கழக கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை? தமிழ் என் கண் என்று ஏமாற்றும் வேலையா? இந்து கழகத்தில் 85% உறுப்பினர்கள் என்பதால் தான் சுய தமிழன் என்று கூறும் டத்தோ மோகன் சாண் அவருடன் இணைந்து கையொப்பமிட்ட ஏழு இன கழகங்களில் இந்துக்கள் இல்லையா என்பதை விளக்க வேண்டும்!
அந்தந்த இன அமைப்புகளுக்கு அந்தந்த இனத்தை சேர்ந்தவர்கள் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் போது தமிழராக அல்லாத டத்தோ மோகன் சாண் எவ்வாறு தமிழர் இனத்திற்கு தலைவராக முடியும்?
26.01.18ல் மை தைம்சு எனும் முகநூல் நேரலை பேட்டியில் தன் தந்தை மலையாளி என்றும் தாய் தெலுங்கர் என்றும் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார், இருந்த போதும் தன்னை தமிழர் என்று இன மறைப்பு செய்வதையும் உண்மையை கூறிய மைத்ரேயரை உளவியல் அழுத்தத்தை கொடுப்பதையும் மலேசியாத் தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது, எதிர்க்கிறது என்பதை பதிவு செய்கிறோம்.அதே நேரலையில் இந்து கழகம் நிறுவனம் (சுதாபனம்) என்றும் ஏன் இந்து மத துறை தனியாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் வினா எழுப்புகிறார்? ஆக இந்து கழகம் என்பது இந்து மத நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒன்றே தவிர தமிழர் இனத்திற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு கிடையாது என்பது தெரிகிறது அதே வேலை எந்த மத அமைப்புகளும் இனத்திற்கு தலைமை வகிக்க முடியாது மற்றும் ஒரு இனத்தில் எல்லோரும் ஒரே மதத்தில் இருப்பவர்கள் இல்லை, ஆக இது சாத்தியமற்றது.டத்தோ மோகன் சாண் தமிழர் அமைப்புகளை அணுகாமல் தான் தோன்றித் தனமாக தமிழர் இன தலைவராக கையொப்பமிட்டதில் உள் நோக்கம் இருப்பதாகவே உணரமுடிகிறது.தமிழர் அமைப்புகளை அழைத்தால் இவரின் முன்னெடுப்பிற்கு தடைகல்லாக இருக்கும் என்று தயங்கியிருக்கலாம்.தீபாவளிக்கு இந்து, இந்தியர்களுக்கு பொதுவிடுமுறை உண்டு அதேப்போல் தைப்பூசத்திற்கு ஒன்பது மாநிலங்களில் விடுமுறையும் உண்டு! இவ்விடுமுறைகளும் இந்து இந்தியர்களுக்கான விடுமுறையாகவே இருக்கிறது.
ஏப்ரல் 14 விடுமுறை கிடைத்தால் மகிழ்ச்சி அடையப்போவது யார்? இந்துக்கள் மட்டுமே! இதே சுறவம்(தை) 1ல் பொங்கலுக்கு விடுமுறை கிடைத்தால் இந்திய ஒருங்கிணைப்பில் இருக்கும் எட்டு இனங்களும், கிருத்துவ மதத்தில் இருக்கும் தமிழர்களுக்கும் 97% இந்தியர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதை இந்து கழகமும் அதன் தலைவர் டத்தோ மோகன் சாணும் மற்ற இன கழகங்களும் ஏன் சிந்திக்கவில்லை? வெறும் இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து பிற சிறுபான்மையாக பிற மதத்தில் இருக்கும் தமிழர்கள் இந்தியர்கள் நலனை புறந்தள்ளும் மலையாளியான டத்தோ மோகன் சான் ஒரு காலமும் தமிழர் இனத் தலைவராக முடியாது என்பதே உண்மை!
“நல்லாண்மை என்பது ஒருவதற்கு தான் பிறந்த
இல்லான்மை ஆக்கிக் கொளல் – குறள் 1026″
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும் என்று திருவள்ளுவர் கூறுவதுப் போல தமிழர் இனத் தலைமையை தமிழர் பேரவை நாங்கள் மட்டுமே முடிவு செய்வோம்.
“தன் ஆயுதமும் தன்கைப் பொருளும் பிறர்கை கொடுக்கும் பேதையும் பதரே”
தன்னுடைய ஆயுதத்தை, பொருளை பிறர் ககையில் கொடுத்துவிட்டு பேதலித்து நிற்பவர் பேதை என்றால், தன் இதயத்தை எண்ணும் சத்தியை இன்னொருவரிடம் தந்துவிட்டு ஏமாந்த இளிச்சவாயர்களாக வாழ்வது எத்தனை ஏமாளித்தனமானது என்று நறுந்தொகை கூறுவதுப் போல இனியும் தமிழர்கள் ஏமாற போவதுமில்லை. 11.02.2018 அன்று தமிழர் அமைப்புகள் ஒன்று கூடி ஒரு மனதாக, தமிழர் இனப் பதிலாலாக (பிரதிநிதி) தமிழர் பேரவை என்று முடிவு செய்யப்பட்டது, இந்த தமிழர் பேரவை அமைப்பது என்பது கடந்த ஆண்டு ஆறாம் மாதத்திலிருந்து தொடங்கப்பட்ட பணியாகும் மற்றும் பேரவையின் தலைமை பொறுப்பாளராக அ.ஆ தமிழ்த்திரு அவர்களை ஏற்று அறிவிக்கின்றோம். இனி எந்த தமிழர் சார்ந்த சிக்கலானாலும் தமிழர் பேரவையே முடிவெடுக்கும். அதே வேளையில், டத்தோ மோகன் சாண் தமிழர் இனத் தலைவர் அல்ல என்பதனையும் அந்த விடுமுறை ஆவணத்தில் தமிழர் இன பதிலாலின் கையொப்பம் இல்லை என்பதனையும் டத்தோ எங் கெய் கவனத்திற்கு தமிழர் பேரவை கொண்டுச்செல்லும்.
இனிமேலும் டத்தோ மோகன் சாண் இதுப் போன்று இனமறைப்பு செய்து தமிழர் இனத்தின் தலை மீது மிளகாய் அரைக்க பார்க்க வேண்டாம் மற்றும் டத்தோ மோகன் சாண் செய்த தவற்றை பொறுப்பேற்று மலேசியாத் தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் அதோடு இந்திய ஒருங்கிணைப்பில் இருக்கும் பிற இன தலைவர்கள் இது போன்ற தவறான செயலுக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.திரு மைத்ரேயர் செய்த புகாரை தொடர்ந்து மலேசியா தமிழர்களும், இயக்கங்களும் டத்தோ மோகன் சாணுக்கு எதிராக காவல்துறை புகார் செய்திருக்கின்றனர் மேலும் புகார்கள் செய்யப்படும்.
தமிழர் இனம் பிற இன மக்களுக்கு எதிரிகளோ பகையாளிகளோ அல்ல ஆனால் தமிழர் என்றப் பெயரில் தமிழர் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டாம் என்று தான் கூறுகின்றோம். அவரவர் இன அடையாளங்களோடும் உரிமைக்காகவும் ஒன்று சேர்ந்தே ஒற்றுமையாக போராடுவோம்.
மலேசியா தமிழ்நெறி வாழ்வியல் இயக்கம், தமிழ் வாழ்வியல் இயக்கம் பேரா, மகாகவி முத்தமிழ் கழகம் சொகூர், மலேசியா நாம் தமிழர் இயக்கம், மலேசியா தமிழர் களம், தமிழர் கழகம் மலேசியா, தமிழர் ஒற்றுமை இயக்கம் கோலாலம்பூர் & சிலாங்கூர், மலேசியா வள்ளுவம் இயக்கம், கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கம், மலேசியா வீரத்தமிழர் முன்னணி மற்றும் மலேசியா தொழில்திறன் மேம்பாட்டு கழகம் போன்ற அமைப்புகள் நேரில் கலந்துக்கொண்டும், காலச்சூழலால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் போன தமிழ் காப்பகம், மலேசியாத் தமிழர் சங்கம், உலகத் தமிழர் தொல்காப்பிய மன்றம் மற்றும் தமிழ் வளர்ச்சி கழகம் சார்ந்த அமைப்புகளும் பேராதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு மோகன் சான் தமிழர்களை
கொக்கெனநினைத்தாயா
கொங்கணவா?
வணக்கம், தமிழர் தலைமையில், தமிழர்களை மட்டும் உறுப்பினராகக் கொண்ட, அமைப்புகளுக்கு மட்டுமே ஒத்துழைப்பு தந்து, தமிழர் களம் மலேசியா இக்கண்டன அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது. மாறாக தமிழர் அல்லாதார் இனமறைப்பு செய்து தன்னை தமிழராக பொய்யுரைத்து, தமிழருக்கான தலைமையை களவாடிவரும் எந்த அமைப்புடனும் தமிழர் களம் மலேசியா சமரசம் கொள்ளாது. இது தமிழரினத்தின் மீட்சிக்கான தமிழர் தேசிய கருத்தியல்மீது உறுதி. ஆக இதில் இடம்பெற்ற அனைத்து அமைப்புகளும் பற்றி தமிழர் களம் மலேசியா முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை. குறிப்பாக தமிழ்நெறி கழகம் இதில் இடம்பெறுவது பற்றி தமிழர் களம் மலேசியா தலைமைக்கு எவ்வித தகவலும் தெரியாது. ஆக மோகன்சான் சர்ச்சையில் தமிழர் களம் இப்பேரவைக்கு ஆதரவு வழங்கியதே தவிர, பேரவையில் இடம்பெற்ற இயக்கங்கள் அனைத்துடன் தமிழர் களம் ஒருங்கிணைந்ததாக மலேசிய தமிழர்கள் தவறாக பொருள் கொள்ள வேண்டாம் என்பதை இவ்வேளையில் கேட்டு கொள்கிறேன்.
தமிழ்ப்புகழ் குணசேகரன்
தலைமையகம்
தமிழர் களம் மலேசியா.
வணக்கம், தமிழர் தலைமையில், தமிழர்களை மட்டும் உறுப்பினராகக் கொண்ட, அமைப்புகளுக்கு மட்டுமே ஒத்துழைப்பு தந்து, தமிழர் களம் மலேசியா இக்கண்டன அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது. மாறாக தமிழர் அல்லாதார் இனமறைப்பு செய்து தன்னை தமிழராக பொய்யுரைத்து, தமிழருக்கான தலைமையை களவாடிவரும் எந்த அமைப்புடனும் தமிழர் களம் மலேசியா சமரசம் கொள்ளாது. இது தமிழரினத்தின் மீட்சிக்கான தமிழர் தேசிய கருத்தியல்மீது உறுதி. ஆக இதில் இடம்பெற்ற அனைத்து அமைப்புகளும் பற்றி தமிழர் களம் மலேசியா முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை. குறிப்பாக தமிழ்நெறி கழகம் இதில் இடம்பெறுவது பற்றி தமிழர் களம் மலேசியா தலைமைக்கு எவ்வித தகவலும் தெரியாது. ஆக மோகன்சான் சர்ச்சையில் தமிழர் களம் இப்பேரவைக்கு ஆதரவு வழங்கியதே தவிர, பேரவையில் இடம்பெற்ற இயக்கங்கள் அனைத்துடன் தமிழர் களம் ஒருங்கிணைந்ததாக மலேசிய தமிழர்கள் தவறாக பொருள் கொள்ள வேண்டாம் என்பதை இவ்வேளையில் கேட்டு கொள்கிறேன்.
தமிழ்ப்புகழ் குணசேகரன்
தலைமையகம்
தமிழர் களம் மலேசியா.
/////….
தமிழ்நெறி கழகம், தமிழ்நெறி வாழ்வியல் இயக்கம். ஒரே மாதிரியாக பெயரில் இருப்பதால், கடந்த பதிவில் குறிப்பிட வேண்டி வந்தது. ஆக தமிழ்நெறி கழகம் இதில் இல்லாதது சிறப்பு. மேலும் மேற்கண்ட பதிவின்படி அனைத்து இயக்கங்களும் தமிழரை மட்டுமே கொண்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். காரணம் பல இயக்கங்கள் புதிய அமைப்பாக இருக்கக்கூடும்.
மேலும், தமிழர் களம் மலேசியா, மோகன் சான் இழைத்த குற்றத்தினை ஒருபோதும் மன்னிக்கவோ, இதையே இப்படியே விட்டுவிடவோ எண்ணம் கொண்டிருக்கவில்லை. தொடர்ந்து அதற்கான பல முன்னெடுப்புகளை தமிழர்கள் நடுவே கொண்டு செல்லும். இவ்வேளையில் மலேசியாவில் உள்ள பல தமிழர் அமைப்புகள் மோகன் சான் சர்ச்சைக்கு கண்டனம் தெரிவித்து வருவது, மகிழ்ச்சியளிக்கிறது. அப்படித்தான் இப்பேரவை அறிக்கையையும் பார்க்கிறோம். சிறப்பு “தமிழர் வெல்வது உறுதி”.
கூமுட்டை .தமிழ்புகழ் , செய்தியை முழுமையா படி
படித்து நானே அதை திருத்தியும் உள்ளேன். தமிழ்நெறி கழகம், தமிழ்நெறி வாழ்வியல் இயக்கம். இருவேறு அமைப்பும் ஒரே பெயர் போல் இருந்ததால் என்றும் குறிப்பிட்டு உள்ளேன். எதிர் கருத்தோ அல்லது, மாற்றுக் கருத்தோ, சொந்த அடையாளத்துடன் வந்து பின் கூமுட்டை அழுகிய முட்டை என்ற மற்றவருக்கு பெயர் சூட்டுங்கள். 😀 முகமூடி அணிந்து கொண்டு அலறல் கூடாது. பண்பாக பதிவிட பழக்கமில்லாதவர்க்கே போலி முகம் தேவைப்படும்.
#டத்தோ மோகன் சாணுக்கு எதிராக 07.02.18ல் செய்தப் பிறகே 9 மாதக் கால பொதுவிடுமுறை களப்பணிகளை இந்து கழக முகநூலில் வெளியிட்டிருக்கிறார்கள்.#
இந்த 9 மாத களப்பணியில் தனி நபர் என்னும் அடிப்படையில் ஈடுபட்ட தமிழர்:
சிவ. முத்துக்குமார சிவச்சாரியார்;
சிவ. நித்தியானந்த குருக்கள்;
பேராசிரியர் முனைவர் டத்தோ இராசேந்திரன்;
முனைவர் திலகவதி.
இந்து சங்கம் எப்பொழுதுமே தமக்குச் சார்பாக உள்ளவர்களை மட்டும் அழைத்து களப்பணியென்றும், பத்திரிக்கை அறிக்கையென்றும் விடுவது உலகறிந்த விசயம். கடந்த தைபூச விழாவையொட்டி மூக்கறுந்ததும் அப்படிதான்.
பொங்கல் என்னும் அறுவடை விழா இந்தியர் அனைவராலும் மத இன பேதம் பாராது கொண்டாடப்படக்கூடிய மற்றும் கொண்டாடப்பட வேண்டிய கலை, கலாச்சார பண்பாட்டு விழா. இதை முத்துக்குமார சிவச்சாரியார்; நித்தியானந்த குருக்கள்; பேராசிரியர் முனைவர் டத்தோ இராசேந்திரன்;
முனைவர் திலகாவதி ஆகியோர் அறியவில்லையா அல்லது இந்நாட்டு இந்தியரில் பெரும்பான்மையோராகிய தமிழரின் உரிமையைத் தற்காக்க முதுகெலும்பில்லையா? கற்றோர் என்று மதிப்பு வேண்டுவோர் அதற்குறிய வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
இவர்கள் தை பொங்கலை இந்தியர் கலை பண்பாட்டு விழா நாளாக ஏற்றுக் கொள்ளாமல் போனது எதனால்? இந்தியர் விழா என்பதை சித்திரை முதல் நாள் வைப்பதில் அது சோதிட நாட்காட்டி படி வருட முதல் நாள் என்ற ஒரே காரணம் மட்டுமே. தமிழர் இந்நாளை பண்டைய நாள் தொட்டு கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கு இந்து சங்கத்தால் தரவுகளைக் கொடுக்க முடியுமா? அல்லது மேற்கூறிய கற்றோராவது தரவுகளைக் கூற முடியுமா?
தமிழனுக்குச் சோதிட போதை ஏறிய பிறகே சித்திரை முதல் நாளை வருடப் பிறப்பாகக் கொண்டான். அதுவும் இப்போதையை திட்டமிட்டு தமிழர்கள் மீது ஏவி தமிழரை அறியாமையில் ஆழ்த்துவது என்பது இன்றைய ‘இந்துத்துவாவின்’ நிலை.
இப்படிப்பட்ட காலத்தில் கற்றோர் என்பவரும் தமிழர் உரிமைக்கும் பண்பாட்டிற்குப் புறம்பாக நடந்து கொள்வது அவரவர் வகிக்கும் பொறுப்புகளுக்குக் களங்கத்தை ஏற்படுத்துகின்றது என்றே கூற வேண்டும்.
தமிழ் புகழ் நீ xxxxxxxxxx ? ஏன் xxxxx அடையாளத்தை மறைத்து xxxxxxxxx என்று அடையாளப்படுத்துற
தேவை இல்லாமல் xxxxxxxxx இழுத்து எழுதிய வேங்கை ஒரு xxxxxxxxxx. xxxxxxxxxxxxxxxxஅவர் என்ன சொல்லவருகிறார் அவற்றுக்கான பதில் சொல்ல பாரு. xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
சிவ. முத்துக்குமார சிவச்சாரியார், சிவ. நித்தியானந்த குருக்கள்,
பேராசிரியர் முனைவர் டத்தோ இராசேந்திரன், முனைவர் திலகவதி ஆகிய நால்வரும் அவர் அவர் துறையில் நன்கு படித்தவர்கள் . கல்விமான்கள் வேதாந்திகள். வருடப்பிறப்பிற்க்கான அணைத்து விஷயங்களையும் ஆராய தகுதியானவர்கள் . இருந்தாலும் ஒரு சாரார் ஒத்துக்கொள்ள மாட்டார்கல் , காரணம் பொறாமை ! உழவனே இல்லாத ஊருல ….. , மாடுகள் எல்லாம் கொண்டோமினியும்ல குடியிருக்கிற ஒரு காலத்துல …… , அவன் அவன் facebook ல பொண்ணு பார்க்கிற காலத்துல ……. பொங்கலை வருட பிறப்பா கொண்டாடியே தீரணும்னு இருக்காய்ங்க ஒரு பிரிவினர். உண்மை யாதெனில் வருடம் நாழிகையை கொண்டது . சாரியாக கணக்கிட்டால்தான் LEAP year சரியாக வரும் . எனவே அதன் ஆரம்பம் மிக முக்கியம் . Equinox என்ற நாளில் சரியாக இரவும் பகலும் சரிசமமாக கால நேர அளவை கொண்டு வருடத்தை ஆரம்பிக்கும் ! இந்த தேதியை தான் சித்திரை ஒன்று என்று முன்னோர்கள் நிர்ணையித்தனர் ! பிறகு விஞ்ஞானிகள் இதனை மார்ச் 20 பதிலும் , September 23 றிலும் வருகிறது என்று கண்டு பிடித்தனர் . இதில் தை 1 ஒன்றுக்கு, எந்த வித சம்பந்தமும் இல்லை இந்த அண்ட சராசரத்தில் ! இருந்தாலும் பொறாமையின் காரணமாக , தமிழனை ஏமாத்துறானுங்க என்று கூறிவிட்டு , இவன் ஏமாத்துவான் ! புலியிடம் இருந்து தப்பித்து முதலையிடம் மாட்டுவார்கல் தெரியாதவர்கள் ! கண்டித்தால் , நான் தமிழனே இல்லை என்பர் ! ஆனால் பூமி சுற்றுவது உண்மைதானே ? முழு விவரமும் தருகிறது விக்கிப்பீடியா. இதோ இங்கே : https://en.wikipedia.org/wiki/Equinox
தமிழனாக பிறந்து தமிழனகாவே இறந்து போவோம். இதில் நாம் மற்ற மதங்களை தழுவி சென்றாலும் தமிழ் என்ற உனர்வு இருக்கவே செய்யும். அதை யாராலும் தடுக்க முடியாது.
யார் யார் தகுதி என்னவென்று தெரியாது வெறுமனே வாய் அளந்தால் செம்பருத்தியில் அவமானப்பட வேண்டுமென்று நெற்றியில் எழுதி ஒட்டப்பட்டிருக்கின்றது போலும்.
சிவ. முத்துகுமார சிவாச்சியார் மற்றும் சிவ. நித்தியானந்த சிவாச்சியார் இருவருமே சைவ தீக்கைப் பெற்ற சைவ சமய ஆச்சாரியார் ஆவர். அதன் காரணமாகவே சிவாச்சியார் என பட்டப்பெயர் பெற்றனர். இவர் வேதாந்திகள் அல்லர். இதுவும் அறியாமல் பிறருக்குப் பாடம் கற்பிக்க வேண்டாம்.
முனைவர் திலகவதி அம்மையார், அவருடைய மற்ற கல்வித் தகுதிகளைத் தவிர்த்து, சைவ சித்தாந்த தேர்ச்சி பெற்று கோலாலம்பூர் அருள்நெறி திருக்கூட்டத்தின் தலைவராக இருந்து சைவ சமயத்திற்கு பல் வகையில் தொண்டாற்றி வருபவர். இந்து சங்க ஆலோசகருமாவார்.
முனைவர் டத்தோ இராசேந்திரன் அவர்கள் சமயம் சாராத பிற கல்வித் துறைகளில் பட்டம் பெற்றவர். சமயத் துறையில் அவர் எவ்வித சிறப்பான ஞானத்தையும் பெற்றவர் இல்லை. அவர்தம் சமய அறிவு என்பது மலேசிய இந்து தர்ம மாமன்றத் தலைவர் பொறுப்பு வகித்து வழி நடத்தியது மட்டுமே. பின்னர் அம்மன்றத்தின் ஆலோகராக இருந்தவர். சிறந்த முருக பத்தர்.
இவர்கள் பின்னணி வெவ்வேறு தரமுடையது.
அவர்களுடைய சொந்த கருத்துக்களோ அல்லது அவர்தம் விருப்பு வெறுப்புகளோ மலேசியத் தமிழர்களின் ஒட்டு மொத்த கருத்தாகாது என்பதை நினைவில் வைக்கவும்.
கூடிய விரைவில் தமிழர் இயக்கங்கள் கோலாலம்பூரில் ஒன்றிணைந்து ஒரு கூட்டத்தை நடத்தி பொது அறிக்கை விட இருக்கின்றார். அது வரை பொறுத்திருங்கள். முந்திரிக் கொட்டையாக இருக்க வேண்டாம்.
நான் தெளிவாக எழுதி உள்ளேன் : “…..ஆகிய நால்வரும் அவர் அவர் துறையில் நன்கு படித்தவர்கள் . கல்விமான்கள் வேதாந்திகள். வருடப்பிறப்பிற்க்கான அணைத்து விஷயங்களையும் ஆராய தகுதியானவர்கள் .” என்று ! யார்வெடுமானாலும் உலகியல் விஷயத்தை ஆராயலாம் , முடிவு தனிமனிதனை சார்ந்தது காரணம் ! தனி மனித சுதந்திரத்தை பட்ரி நாம் என் கவலை பட வேண்டும் தேனீ அவர்களே ? எனக்கு மார்ச் 20 தமிழர் புத்தாண்டு …. இதில் உங்களுக்கு என்ன கஷ்டம் ? மேலும் நான் எங்குமே அனைவரும் வேதாந்திகள் , அனைவரும் கல்விமான்கள் என்று எழுதவில்லையே. சும்மா பொறாமையில் பொய்களை எழுதி தள்ள கூடாது ! எனக்கு தெரிந்து, வாயாலே வடை சுடும் யாரையும் இதுவரை ஒட்டு மொத்த தமிழ் மக்கள் பிரதிநிதியாக நியமிக்கவில்லை ! யார் வேண்டுமானாலும் அறிக்கை விடலாம், சண்டை போடலாம் , வாயாலே வடை சுடலாம் ! அது எல்ல தமிழர்களையும் பிரதி பலிக்காது ! அதை எதிர்த்து மாற்று கருத்துக்கள் வந்து கொடுத்தான் இருக்கும், அது காலத்தின் நியதி ! காரணம் குருடன் பின்னால் எவனும் போகமாடடான். தேனீ அவர்களே, உங்களுக்கு வேறு சரியாக விளங்காது, எனவே வேறு விதமாகதான் சொல்லவேண்டும் என்றால் : தெலுங்கர்களின், மலையாளீலின் சீக்கியர்களின் அல்லது வேறு ஒரு இந்திய இன பிரிவினர்களின் வீழ்ச்சியில் தான் தமிழர்கள் உங்களை தலைவர்களாக பார்ப்பார்கள் என்று கனவு காணாதீர்கள் ! காரணம் நம் இந்திய ஒற்றுமையை குலைத்தெறிந்து சிரிக்கின்ற நேரம்தான், உங்களை போன்ற முதலைகளையும் விழுங்கும் பெரிய இனத்து மலைப்பாம்பு. இதற்க்கு ஒரு நல்ல உதாரணம்: துரோகத்தால் வீழ்ந்த நீதியட்ற தமிழர்கள் !
நீங்கள் எந்த புத்தாண்டையம் கொண்டாடுங்கள். அதுவும் நாள் தோறும் கொண்டாடுங்கள். அதில் தமிழர்கள் எங்களுக்கு வருத்தம் இல்லை. நாங்கள் தமிழர்கள் எங்களை வைத்து மோகன் ஷன் இன்னும் தலைமை இடத்தில் இருப்பது வேடிக்கையாக உள்ளது. தமிழர்களயே குறி வைத்து எழுதும் ஒருவருக்கு அப்படி என்ன தமிழன மேல் கோபம். நீங்கள் சொல்வது எழுதுவது ஒரு தேறு ஓர பொருக்கி போல் உள்ளது. யார் எந்த கருத்தை கூறினாலும் அதில் உன்மைகள் இருப்பினும் நான் சொல்வதே உன்மை என வாதிடும் வக்கன புத்தி உள்ளவரிடம். நல்லது எதுவுமே அவருக்கு ஒத்து வராது. அவர் சொல்வதே சரியான ஒன்று. தமிழ் தமிழனை எப்படி குறைகளை சொல்வது எழுதுவது என அவர் இருகாகிறார். பொறுமைக்கு அளவு உண்டு என மறந்து விட வேண்டாம்.
mmm.. meendum intha pirachanaiyaaa… poi vera velayai paarunggappa.
கிரிகோரியன் காலண்டர் 1582 ஆம் ஆண்டுதான் முடிவடைந்தது. எனவே திருவள்ளுவர் ஆண்டு 2041 என்பது தவறு, கிரிகோரியன் காலண்டர் வந்த பின்பே நம்மவர்கள் மாதிரி கொண்டு வந்தார்கள் என்று ஆதாரத்துடன் நிரூபித்தேன் ! உடனே நான் அதிமேதாவி தனத்தை காட்டுகிறேன் என்றார்கள் ! தை முதல் நாள் எந்த வித பங்கும் புத்தாண்டுகளுக்கு தரவில்லை என்று நிரூபித்தேன் , WIKIPEDIA குறிப்புகளை காட்டினேன் , உடனே நான் தமிழன் இல்லை என்றனர் . தெலுங்கர்களையும் மலையாளீகளையும் சீக்கியர்களையும் இந்தியர்களில் இருந்து பிரித்தால் , நாம் 4 வது சிறும்பான்மை இனமாக கருத படுவோம் , அரசாங்கம் கண்டு கொள்ளாது என்றேன் , உடனே நான் தமிழர்களுக்கு எதிர்பானவன் என்று சேட்ரை வாரி இறைத்தீர்கள் ! யாராக இருந்தாலும் தாயை பட்ரி பேசவேண்டாம் என்றேன் , சன்மானமாக என் தாய் தந்தையரை பழித்தனர் ! சாமி வேலு என்ற திருட்டு தமிழன் , இந்தியர்களின் 30 வருட வளர்ச்சியை கொள்ளை அடித்தான் என்றேன் ! அறிவுகெடட தானமாக பேசுகிறேன் என்றார்கள் சாமி வேலு ஜால்றாக்கால் ! எல்லாவற்றயும் பார்த்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை போல் சிரித்து கொண்டு இருக்கிறேன் …..
வழக்கம் போல வழ வழன்னு பேச்சு. இந்நாட்டு மத இன பேதம் பாராது இந்தியர் விழாவைக் கொண்டாட அறுவடை நாளாகிய தைப்பொங்கல் சிறந்தது. அது அனைவரின் பண்பாட்டு கலை கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நாளாக அமையும். இத்தோடு நின்றால் போதும்.
தமிழருக்கு எது வருடப் பிறப்பு என்பதை தமிழரே முடிவு செய்து கொள்வார். நமக்கு எது வருடப் பிறப்பு என்று முடிவு செய்ய மோகன் சான் போன்ற ஆட்கள் தேவைப்படவில்லை.
மேலும் மோகன் சான் தன்னை தமிழர் தலைவர் என்பதை நிறுத்திக் கொள்ளட்டும். எந்த காலத்திலும் தமிழர் அவரை தம் தலைவராக ஏற்றுக் கொண்டதில்லை. அவ்வாறு கூறிக் கொள்வதற்கும் அவர்க்கு தகுதி இல்லை. இதை புரிந்து கொள்ளாமல் வெறுமனே செம்பருத்தியில் வம்படித்துக் கொண்டிருந்தால் தன்னை கற்றோர், முனைவர் என்று பட்டம் போட்டுக் கொள்வதெல்லாம் கேளிக்கூத்தாகி விடும். அப்புறம் வேலை வெட்டியில்லாதவன் பட்டியலில் சேர்த்துப் பேச வேண்டிவரும்.
தமிழர் எவ்வளவு சிறுபாண்மையினரானாலும் பரவாயில்லை. எல்லாவற்றையும் ‘இந்தியன்’ என்ற பெயரால் இழந்தோம். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. அந்த இந்தியன் இந்து என்ற மூதேவி தொலைந்து போகட்டும். இனி தமிழர் என்ற சீதேவியோடு வாழ்வோம். சுகப்படுவோம்.
முதலில் மோகன் சன் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதே மிக சிறந்தது. அப்போது தான் இந்த நாட்டு தமிழர்களுக்கு ஒரு நல்ல தமிழ் தலைவர் பொருப்பு ஏற்று இதற்கு ஒரு தீர்வு கானா முடியும். அதுவரையில நல்ல தீர்வு வராது. நாம் எதிர் பார்ப்பது ஒரு தமிழனை.
hinthuvai avamaanamaaga pesuvathai theni niruththik kollavendum. tamil enbathu inam. athu matham alla. tamilukku nallathu seigiren enru tamilai izhivu seiyaathir nanbare.
அப்படி என்ன தேனீ அவர்கள் தமிழையும் தமிழர்களையும் பற்றி தவறாக எழுதுகிறார். உண்மைகளை முன் எடுது வைக்கும் பொழுது சில குள்ள நரிகளுக்கு எரிச்சள் வருவது சகஜம்மோ. இந்து என்ற சொல் இருக்கட்டும் அது தமிழும் சேர்ந்து உள்ளது என்பது உண்மை. இதை பலமுறை சொல்லி விட்டோம். தேனீ, அவர்களே எழுதுங்கள் உங்கள் கருத்துகளை. நன்றி
ஆட்டைகடித்து,மாட்டைகடித்து,இப்போ
தைப்போங்கலையும் கடிக்குதா,
முனைவர் திலகவதி அவர்கள்
முன்னால் மலாயா பல்கலை
இந்திய பகுதி தலைவர் என்று
நினைக்கிறேன்,சித்திரை இந்துகள்
புத்தாண்டு என்பதற்கு ஆய்வு
கட்டுரை அல்லது நூல்கள் எழுதியுள்ளாரா? எத்தனை மொழி
பாண்டித்துவம் பெற்றுள்ளார்,மற்ற
மூவர்கள் ஆய்வு நூல்கள்
எழுதியுள்ளார்களா?முத்துகுமார்
சிச்சாரியாரை,நான் அவரின்
தங்கையின்வீட்டுக்கு போகும்போது
பார்த்துள்ளேன்,மறைமலைஅடிகள்
தலைமைல் பல பேறிஞ்சர்கள்
பச்சையப்பன் கல்லூரில் ஒன்று
கூடி விவாதித்து திருவள்ளுவர்
ஆண்டை முதலாகவைத்து பொங்கல்
பண்டிகைஒத்தக்கருத்தாக பிரகடணப்
படுத்தினார்கள், கருணாநிதி
ஆட்சிகுவந்தால் பொங்கலுக்கு
விடுமுறை,பாப்பாதி ஜெயா ஆட்சிக்கு
வந்தால் சித்திரைக்கு விடுமுறை!
மன்னர் மன்னா! இந்து என்பது சிந்துவின் திரிபு. சிந்து என்பது பண்டைய நாட்களில் இந்தியா – பாக்கிஸ்தான் எல்லையிலிருக்கும் சரசுவதி ஆற்றுப்படுகைக்கு கிழக்கே இருந்த நிலப்பகுதி.
அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களை சிந்து என்னும் உச்சரிப்பு கொண்டு அழைக்க இயலாத பார்சி மக்களின் மொழியில் இந்து என்று அழைத்தனர். கிரேக்கர்களும் அவ்வாறே அழைத்தனர்.
‘இந்து என்ற சொல்லுடன் சமசுகிரதத்தில் ‘ஸ்தான்’ என்னும் நிலப்பரப்பைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்து ‘இந்துஸ்தான்’ என்று இந்தியாவின் வடபகுதியில் ஒரு நிலப்பரப்பைக் குறித்தனர். இவ்வாறு இந்துஸ்தான் என்னும் பெயர் கொண்ட நிலப்பகுதி வட இந்தியா மக்களிடையே புழக்கத்திற்கு வந்தது கி.பி. 17-ம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் அல்லது 18-ஆம் நூற்றாண்டில். இந்த இந்துஸ்தான் என்னும் நிலப்பரப்புக்கும் தமிழருக்கும் என்ன தொடர்பு?
இவ்வாறு வடக்கே வாழ்ந்த மக்களை தெற்கே வாழ்ந்த தமிழர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரை சிந்து என்றும் சிந்து தேசம் என்றும் அழைத்து வந்தனர் என்பதற்கு வரலாற்று ஆவணம் உண்டு. அதன் இணையச் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.
மன்னர் மன்னா! இவ்வளவையும் தாங்களும் அறிந்துள்ளீர் என்பதில் எமக்கு ஐயமில்லை.
ஆனாலும் தான் கொண்ட கொள்கைக்கும், தாங்கள் பின்பற்றும் தென்புல வைணவ சம்பிரதாயம் தாழ்ந்து தனித்து விடப்படக் கூடாது என்பதற்காகவும் இந்துவை தாங்கிப் பிடிப்பது தங்கள் விருப்பம். ஆனால் அதில் நில்லாத தமிழர் மீது ஏத்துவது எவ்வகையில் நியாயம்?
தெளிவு பெற்ற தமிழரை இன்னமும் திசை திருப்பி வைத்திருக்கலாமென்று கனவு காண்பது கானல் நீர் போன்றதாகும்.
‘Dutch East India Company’ மற்றும் இராமேசுவத்தை ஆண்ட சேதுபதி அரசர் ஒருவருக்கும் 1684-ஆம் ஆண்டு செய்து கொண்ட வாணிப உடன்படிக்கையில், தற்கால இந்தியாவின் வடபகுதியை ‘சிந்து தேசம்’ என்று அவ்வுடன்படிக்கையின் 2-வது & 6-வது வரியில் (நூலின் பக்கம் 24) குறித்திருப்பதைக் காண்க. அந்நூலை தரவிறக்கம் செய்து முன்னுரையையும் அந்த உடன்படிக்கையின் சாரத்தையும் படிக்கவும்.
http://noolaham.org/wiki/index.php/A_Seventeenth_Century_Tamil_Document?uselang=en
பார்சி அகரமுதலியில் ‘இந்து’ என்னும் சொல்லுக்கு கொடுக்கப்படும் ஐந்து பொருள் விளக்கங்களில் மூன்று அவ்வினத்தை இழிவு படுத்தும் விளக்கமாகும். அத்தகைய இழிச்சொற்களால் எம்மைக் குறிப்பிட்டுக் கொள்ள எமக்கு விருப்பம் இல்லை. அறிவுடைய தமிழர் தம்மைத் தாமே இந்து என்று சொல்லிக் கொண்டு இழிவு படுவது அவர்தம் விருப்பம்.
kuripu en