இந்து சங்கத்தில் 90% தமிழர்கள் என்றால் நீங்கள் யார் மலேசிய தமிழர்களின் தலைவர் என்று கையொப்பமிட ? -மலேசிய நாம் தமிழர் இயக்கம் டத்தோ மோகன் சான் மீது பாய்ச்சல்
14 ஆம் தேதி 4-காம் மாதம் , இந்தியர் விழா அல்லது இந்து விழா என்ற அடிப்படையில் பிரதமரிடம் பொது விடுமுறை கோரும் முயற்சியில் மலேசிய இந்து சங்க தலைவர் டத்தோ மோகன் சான் , இறங்கிருப்பது , அவர் பிரதமர் துறையில் வழங்கிய மனு நகலின் வழி தெரிய வருகிறது என்றார் மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் செயலவை உறுப்பினரும் , சிலாங்கூர் மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளருமான மு. தமிழ்வாணன் . இந்த முயற்சியை எடுத்ததில் நாங்கள் எதிர்க்கவில்லை , மாறாக மலேசிய இந்து சங்க தலைவர் டத்தோ மோகன் சான் தன்னை தமிழர்களின் தலைவர் என்று அடையாளப்படுத்தி , அந்த கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டதைதான் எதிர்க்கிறோம் என்றார் தமிழ்வாணன் . அக்கடிதத்தில் மலேசிய சீக்கியர் , வங்காளியர் , குசராத்தியர் , தெலுங்கர் , மலையாளி, மாராட்டியர் போன்றோர்களின் இயக்க கையொப்பத்தை பெற்ற டத்தோ மோகன் சானுக்கு , தமிழர் இயக்கங்களை கண்ணுக்கு தெரியவில்லையா என்று வினவினார் . மலேசிய நாம் தமிழர் இயக்கம் , இதை எதிர்ப்பது இரண்டு காரணங்களுக்காக, அதாவது ,மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் சான் தமிழரே அல்ல , இது அவர் பேசிய நேர்காணலின் கோணோளியை மலேசிய நாம் தமிழர் இயக்கம் அம்பலபடுத்தியதிலிருந்து உணரலாம் .ஆகையினால் , தமிழர் பூர்வீக இல்லாத ஒருவர் தன்னை தமிழர் என்று கூறிக்கொண்டு கையொப்பமிட்டது ஒரு ஏமாற்று வேலையே என்று சாடினார் . இரண்டாவது , ஒரு வேலை மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் , ஒரு தமிழராக இருந்தாலும் , கூட மலேசிய இந்து சங்கம் மலேசிய தமிழர்களை பிரதிநிதிக்க முடியாது , தகுதியும் இல்லை , மலேசிய இந்து சங்கம் , இந்து மதத்தை மட்டுமே பிரதிநிதிக்க முடியும் என்று விளக்கமளித்தார் தமிழ்வாணன் . மலேசிய இந்து சங்கம் , இந்து மதத்தை தழுவியிருக்கும் பல்வேறு இனங்களை கொண்டவையாகும் , அப்படியிருக்கையில் தமிழர் என்ற தேசிய இனத்தை பற்றி இவருக்கு என்ன தெரியும் என்றார் . தமிழர்களின் பண்டிகை என்னவென்று தெரியுமா ? தமிழர்களின் மறை என்னவென்று தெரியுமா ? தமிழர்களின் இலக்கன இலக்கியங்கள் தெரியுமா ? இப்படி தொடர்ந்து கேள்விகளை எழுப்பி கொண்டே போகலாம் என்றார் தமிழ்வாணன்.
இந்த சர்சைக்கு பிறகு அனைவரிடமும் எழும் கேள்விகள் என்னவென்றால் , யார் தமிழரின் தலைவர் என்பது ? , நாங்கள் என்ன சொல்ல விரும்புகிறோம் என்றால் , யார் தமிழர்களின் தலைவர் என்பதை விட , தமிழர் தேசிய சிந்தனையில் உள்ள பல தமிழர் இயக்கங்கள் இங்கு சிறப்பாக இயங்கி கொண்டு வருவது , இக்கேள்விகளை கேட்பவர்களுக்கும் சரி, அல்ல டத்தோ மோகன் சானுக்கும் தெரியாதா ?
இந்நாட்டில் தமிழர்களுக்காக பல போரட்டம் , இன மீட்சி மொழி மீட்சி பணியில் களமாடிய பல தமிழர் இயக்கங்கள் உள்ளன, உதாரணத்திற்கு மறைந்த தமிழறிஞர் ரா.நா.வீரப்பனார் தலைமையில் இயங்கிய உலக தமிழர் பண்பாட்டு இயக்கம் , மறைந்த மூதறிஞர் மு . மணிவெள்ளையனார் தலைமையிலான மலேசிய தமிழ் இலக்கிய கழகம் , மறைந்த தமிழ் நெறி அறிஞர் அ.பு . திருமாளனார் தலைமையிலான மலேசிய தமிழ் நெறி கழகம் , தற்போது இயங்கி கொண்டிருக்கும் , மலேசிய தமிழ் நெறி வாழ்வியல் இயக்கம் , பேராக்கில் தமிழர்களுக்கு என்று தமிழ்க்கோட்டம் உருவாக்கிய தமிழ் வாழ்வியல் இயக்கம் (ஐயா திரு முருகையன் தலைமையில்) , மூலப்பெருந்தமிழ் அறிஞர் ஐயா திருசெல்வனார் தலைமையிலான தமிழியல் ஆய்வுக்களம் , 2012 ஆம் , ஆண்டு ஐயாயிரம் தமிழர்களை ஒருங்கிணைத்து உலக தமிழர் பாதுகாப்பு மாநாடு செய்த உலக தமிழர் பாதுகாப்பு செயலகம் , மலேசிய தமிழர் சங்கம் , தமிழர் குரல் , தமிழர் தேசிய இயக்கம் , தமிழ் காப்பகம் மற்றும் மலேசிய தமிழர்களின் ஆதவிலும் தமிழ் அறிஞர்கள் ஆசியில் பல போராட்டங்களை முன்னெடுத்து வரும் மலேசிய நாம் தமிழர் இயக்கம் , இன்னும் பல தமிழர் சார்ந்த இயக்கங்கள் தமிழர் தமிழியல் சிந்தனையோடு இயங்கி வருகிறது , என்று மலேசிய நாம் தமிழர் இயக்க செயலவை உறுப்பினர் மு.தமிழ்வாணன் பதிலடி கொடுத்தார் . மேலும் இது போன்ற இனமறைப்பு , உருமறைப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் , மலேசிய நாம் தமிழர் இயக்கம் தொடர்ந்து எதிர்ப்போம் .
தமிழர்களை தலைமையேற்க்க வழிநடத்த தமிழ் பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம் , தேவையில்லாமல் இது போன்று மூக்கை நுழைப்பதை மலேசிய இந்து சங்க தலைவர் டத்தோ மோகன் சான் நிறுத்திக்கொள்ள வேண்டும் . இந்நாட்டில் தமிழர்கள் , தெலுங்கர்கள் , மலையாளிகள் தமிழ்மொழி குடும்ப அடிப்படையில் ஒற்றுமையாக இருக்கின்றனர் அதை மோகன் சான் போன்றோர்கள. அதை கெடுக்க முயற்ச்சிப்பது , தெளிவாக தெரிய வருகிறது என்றார் தமிழ்வாணன். 90% விழுக்காடு இந்து சங்கத்தில் தமிழர்களை பிரதிநிதித்தேன் என்று அசிங்கமாக மார்தட்டிக் கொள்ளும் டத்தோ மோகன் சான் , தமிழர் திருக்கோயில்களில் தமிழில் மந்திரங்கள் ஓதுவதற்கு வழி செய்தாரா ,அதிகாரத்திற்கு தமிழர்களை ஊறுக்காய் போடும் டத்தோ மோகன் சான் செயல் தெளிவாக வந்துள்ளது என்றார் . தமிழர்களாகிய எங்களுக்கும் சரி யாராக வேண்டுமானலும் , “தகப்பன் என்பவன் என்னை பெற்றவனாக இருக்க வேண்டும் , தலைவன் என்பவன் என் ரத்தவனாக இருக்க வேண்டும்” இதுதான் எங்கள் நிலைப்பாடு .
நன்றி செம்பருத்தி