“காணிகளை விடுவித்தல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழுள்ள வழக்குகளை தீர்த்தல் உள்ளிட்டவற்றை செயற்படுத்துவதில், இலங்கையில் போதுமான முன்னேற்றங்கள் இல்லை” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹூசைன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியனவற்றை ஊக்குவிப்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்ந்தும் முக்கிய பங்கை ஆற்றவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37வது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் 23ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தொடர் தொடர்பில் அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-4tamilmedia.com