நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கைது – மலேசிய நாம் தமிழர் இயக்கம் கடும் கண்டனம்

தமிழக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை கைது செய்த தமிழக அரசை மலேசிய நாம் தமிழர் இயக்கம் வன்மையாக கண்டிப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

தமிழ் நாடு, செலத்திலிருந்து சென்னை வரை 8 வழி சாலை திட்டம் என்று பல ஆயிரம் ஏக்கர்கள் விவசாய நிலங்கள் அபகரிப்பால் வாடும் பதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் நேற்று முன்நாள் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டது, சனநாயகத்திற்கு தொடுக்கப்பட்ட போர் என்றார்.

தமிழக மண்ணில் பல அபயகர மற்றும் தனிபெரும் முதலாளிகள் மட்டும் பயன்பெறும் தீய திட்டங்களை அனுமதித்து, நாள்தோறும் தமிழக தமிழர்களே வஞ்சிப்பதே இந்திய மத்திய அரசின் வாடிக்கையாகி விட்டது. அதற்கு முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு துணை நிற்பது தொடர்கதையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரை நூற்றாண்டுகளாக நயவஞ்சக திருட்டு திராவிட கட்சிகளை ஆளவிட்டு அடிமைகளாக நம்பி நம்மி நாசமாய் நாதியற்ற நிலையில் ஏமார்ந்து, இனி நாமே நமக்கு வழியாக நம்மை நாமே ஆள ‘நாம் தமிழர் கட்சி’ என்று தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் வழிகாட்டியாக துவங்கப்பட்டு, தன் மண்ணையும் மக்களையும் உளமார நேசித்து மக்களின் வாழ்வதார சிக்கலுக்கு ஆதரவாகவும் இயற்கை வளங்கள் அழிவுக்கு எதிராகவும் அனைத்து உயருக்குமான அரசியல் அடையாளமாகவும் அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு விடிவுகாக பற்பல செயற்பாடுகள் மற்றும் உரிமை உடமை போராட்டங்களை ஆரிய திராவிட சூழ்ச்சிகளுக்கிடையே மத்திய மாநில விரோத அரசுகளுக்கு எதிராக துணிந்து முன்னெடுத்து வருகிறார்கள் என்றார் திரு பாலமுருகன் தமக்கு எதிராக எவர் குரல் எழுப்பினாலும் தனது அதிகாரத்தின் வழி அடக்க நினைக்கிற  மத்திய மாநில அடக்குமுறை அரசுகளை மலேசிய நாம் தமிழர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது என்றார்.

மோடி அரசுக்கு வாலாட்டும் தமிழக காவல்துறையே, ஒருநாள் எங்கள் கை ஓங்கும் என்பதை மறந்து விடாதீர்கள். கைது செய்யப்பட்ட எங்கள் அண்ணன் சீமான் உட்பட அனைத்து உறவுகளையும் எந்தவித நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மலேசிய நாம் தமிழர் இயக்கம் தனது கண்டனத்தை பதிவு செய்கிறது என அதன் தேசிய வீயூக இயக்குநரும் செய்தி தொடர்பு பொறுப்பாளருமான திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.