விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதை – மலேசிய நாம் தமிழர் இயக்கம் கண்டிக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக பினாங்கு மாநில துணை முதல்வர் டாக்டர் பி.இராமசாமி மற்றும் சதீசு முனியாண்டி அவர்கள் மீது வீண்பழி சுமத்தி விசாரிக்கவே திட்டமிட்டு 50-கும் மேற்பட்ட காவல் துறை புகார்கள் செய்திருப்பதை மலேசிய நாம் தமிழர் இயக்கம் கண்டிப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியும் மாற்று இனத்தின் நம்பிக்கையை இழிவுபடுத்தி வரும் சர்ச்சைக்குரிய மதப்போதகர் ‘சாக்கிர் நாயக்கை’ தமது பல்லினம் ஒற்றுமையாக வாழும் மலேசிய திருநாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என எதிர்கட்சியாக இருந்த போதிலிருந்து தற்போது ஆளுங்கட்சியாக ஆனமுதல் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் சாக்கிர் நாயக்கின் ஆதரவாளர்கள் இவர்கள் மீது வீண்பழி சுமத்துகிறார்கள் என்றார்.
மேலும் மக்கள் உணர்ச்சி வசப்பட்டவர்கள் என்பதை நன்கறிந்து, சர்ச்சைக்குரிய மதப்போதகர் சாக்கிர் நாயக் விவகாரத்தை திசைதிருப்பவே திட்டமிட்ட சதிச் செயலாக இந்த வீண்பழி சுமத்தப்படுகிறது என்றார் திரு பாலமுருகன்.
பினாங்கு மாநில துணை முதல்வர் பி. இராமசாமி மற்றும் சதீசு முனியாண்டி அவர்கள், அறத்தின் வழி சுதந்திரத்திற்கு போராடும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள். தங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழமக்களை நேசிக்கும் மனித நேயவாதிகள் அவ்வளவுதான்.
அப்படியென்றால் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களை தலைவராக ஏற்று, அவர் போதித்து தத்துவத்தை வழிகாட்டியாக கொண்டு, அவர் விதைத்த தமிழர் தேசிய சிந்தனையை இலக்காக எண்ணி இயங்கிக் கொண்டிருக்கும் “மலேசிய நாம் தமிழர் இயக்கத்தை” என்னவென்று சொல்வது என்றார்.
தமிழர் தேசியத்தை கருவறுக்க வேண்டும் என கூறிய தமிழக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாய்டுவை அழைத்து மாநாடு செய்வது போன்ற சில விவகாரத்தில் எங்களுக்குள் கருத்துவேறுபாடு இருக்கலாம் அதற்காக கொள்ளைப் புற வழியாக ஒரு தமிழரை வீழ்த்துவதை இன்னொரு தமிழன் ஒருபோதும் அனுமதிக்க மாட்டான். அது முறையும் அல்ல என்று தனது அறிக்கையில் மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.