நகராண்மை கழக உறுப்பினராக பதவி கிடைத்த உயர்திரு க.பாலகிருசுணன் அவர்களுக்கு வாழ்த்துகள்

நகராண்மை கழக உறுப்பினராக பதவி கிடைத்த உயர்திரு க.பாலகிருசுணன் அவர்களுக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கமும் மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்கமும் தங்களது புரட்சி வாழ்த்துகளை பதிவு செய்கிறது.

கடந்த 14வது பொது தேர்தலில் பாக்காத்தான் அரப்பான் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து சுங்கை சிப்புட் அமானா கட்சி தலைவர் மதிப்புமிகு திரு பாலகிருசுணன் கருப்பையா பிள்ளை அவர்களை நகராண்மை கழக உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டதற்கு மலேசிய நாம் தமிழர் இயக்கமும் முன்னாள் மாணவர் சங்கமும் தங்களது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அதன் பொறுப்பாளரான திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

சுங்கை சிப்புட் வட்டார மக்களுக்கு நன்கு அறிமுகமான தொழிலதிபர் திரு பாலகிருசுணன் அவர்கள் தன்னால் இயன்ற வகையில் வட்டார மக்களுக்கு சேவையாற்றி வந்திருப்பதும், மலேசிய நாம் தமிழர் இயக்கம் முன்னெடுக்கும் அத்தனை தமிழிய பணிகளுக்கும் பலவகையில் உறுதுணையாக இருப்பது போற்றுதலுக்குறிய தன்னலமற்ற தேவையாகும். அவருக்கு இப்பதவி கிடைத்தது ஒரு மானத்தமிழருக்கு அளித்த அங்கிகாரமாகும் என பெருமை கொள்வதாக என்றார் இயக்க தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன்.

சுங்கை சிப்புட் மண்டலத்தின் பெரியத் தமிழ்ப் பள்ளியான மகாத்மா காந்தி கலாசாலையின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராக கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து மக்களால் தேர்வு பெற்ற சமூக சேவகருமான திரு பாலகிருசுணன் அவர்கள் தனது பள்ளி மேம்பாட்டிற்கும் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கும் அரும்பெரும் பங்காற்றி வருவதோடு எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய, செயலாற்றக்கூடிய துணிச்சல் மிக்க மாமனிதர் என்றார். எனவே தகுந்த ஒருவருக்குத்தான் இப்பதவி கொடுக்கப் பட்டிருக்கின்றது என்ற மனமகிழ்ச்சி கொள்ளும் வேளையில் தன் துறை சார்ந்து சுங்கை சிப்புட் பொது மக்களுக்கு நற்சேவை வழங்குவார் என மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க சார்பிலும் வாழ்த்துவதாக அதன் துணைத் தலைவருமான திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.