சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாட்டில் மலேசிய விடுதலை நாள் வரவேற்கும் கொண்டாட்டம் வருகிற 30/08/2018 இரவு 11.00 மணிக்கு சுங்கை சிப்புட் மணி கூண்டு வளாகத்தில் நடத்த விருப்பதாக அதன் தலைவரும் வட்டார நகராண்மை கழக உறுப்பினருமான உயர்திரு பாலகிருசுணன் கருப்பையா பிள்ளை தெரிவித்தார்.
சுங்கை சிப்புட்டில், நாட்டின் 61வது சுதந்திர நாளை வரவேற்கும் தருணத்தில் வட்டார மூவின மக்களையும் ஒரே இடத்தில், ஒரே நோக்கத்தில் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் கொண்டாடவும், வளரும் இளைய தலைமுறையினருக்கு நமது நாட்டின் மீது மிகுந்த பற்றுதலை உருவாக்கவும், சக இனங்களிடையே மேன்மேலும் உன்னத புரிந்துணர்வு அதிகரிக்கவும் இந்நிகழ்ச்சி ஒரு வழிதட பாதையாக அமையும் என்றார்.
இக்கொண்டாட்டம் அரங்கேறும் சுங்கை சிப்புட் மணி கூண்டு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். அது நாட்டின் தேச தந்தையான துன் வீ.தி. சம்பந்தன் அவர்களால் 1957-ம் ஆண்டு காலகட்டத்தில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்கொண்டாட்டத்தின் போது நாட்டுபண் பாடல்களும், நாடு கடந்து வந்த சுதந்திர வரலாற்று காணோளிகளும், எழுச்சி உரைகளும் தேசிய கொடி விநியோகமும் மற்றும் விருந்தோம்பலும் நடைபெற விருப்பதால் வட்டார மூவின மக்களுக்கும் பொது அழைப்பு விடுப்பதாக சங்க துணை தலைவரும் ஏற்பாட்டு குழு பொறுப்பாளருமான திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.