சுங்கை சிப்புட் மணிக்கூண்டு வளாகத்தில் கோலாகல தேசிய நாள் கொண்டாட்டம்

சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாட்டில் மூவின மக்களும் படைசூழ தேச தந்தைகளான துன் வீ.தி. சம்பந்தன் அவர்களால் நிறுவப்பட்டு, துன் அப்துல் ரக்மான் அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மணிக்கூண்டு வளாகத்தில் வண்ண விளக்குகள் அலங்கரிப்பட்டு முதன் முறையாக தேசிய நாள் கொண்டாடப்பட்டது.

முன்னாள் மாணவர் சங்க தலைவரும் நகராண்மை கழக உறுப்பினருமான உயர்திரு. பாலகிருசுணன் கருப்பையா பிள்ளை தலைமையில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில் சுங்கை சிப்புட் காவல் படை உயர் அதிகாரி, சாலோங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு லோ, கோலகங்சார் நகராண்மை கழக உறுப்பினர் உயர்திரு ஏலன், அமானா கட்சி பொறுப்பாளர் திரு யுசினி மற்றும் மூவின சமூக தலைவர்களும் வருகையளித்தனர்.

வரவேற்புரையாற்றிய முன்னாள் மாணவர் சங்க துணை தலைவரும் மலேசிய நாம் தமிழர் இயக்க தேசிய வீயூக இயக்குநருமான திரு பாலமுருகன் வீராசாமி, மூவின மக்கள் ஒற்றுமை, நாடு கடந்த வந்த பாதை மற்றும் தேசிய நாள் எழுச்சி கவிதை வரிகளோடு பகிர்ந்தார்.

கலாசாலை பெற்றார் ஆசிரியர் சங்க  பொறுப்பாளர் திரு. சரவணன் நெறியாளராக வழி நடத்த, முறையே தலைவர் திரு க. பாலகிருசுணன் அவர்கள் தலைமையுரையாற்ற, மாண்புமிகு திரு லோ, உயர்திரு ஏலன் மற்றும் திரு. யுசினி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பின்னர் விடுதலை நாளை வரவேற்று வானவெடிகள் வெடிக்கப்பட்டதுடன், நாட்டுபண் பாடல் இசைக்க காவல் துறை உயர் அதிகாரி தேசிய கொடியும் சட்டமன்ற உறுப்பினர் மாநில கொடியும் ஏற்ற  அனைவரும் ஒன்றிணைந்து பாடி மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் வழங்கப்பட இலவச தேசிய கொடியுடன் வந்திருந்த சுமார் 700-கும் மேற்பட்டோர் “மெர்டேகா – மெர்டேகா” என முழக்கமிட்டனர்.

கொண்டாட்டத்தில் ஒளியேற்றப்பட்ட  வரலாற்று காணொளிகளை கண்டு களித்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தோம்பலும் பெற்று எழுச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.