இரண்டு மூன்று நாட்களாக மலேசிய நண்பனில் அறவாரியத்தின் மீதான நியாயமற்ற தாக்குதலில் இன்று மக்கள் ஓசையும் இணைந்துக்கொண்டது வியப்புதான். ஒரு தமிழ்மொழி இனமீட்சி தொண்டனாக இந்த கண்டனத்தை எழுத வேண்டிய சூழலில் நியாயங்கள் மக்களுக்கு விளங்க வேண்டும் என்பதால் எழுதுகிறேன்.
தனியார் வாரியங்கள் எவை என விளக்கினால் எல்லோருக்கும் புரியும். தமிழ்ப்பள்ளிகளின் வாரியத்துக்கும் அரசு சார்பற்ற வாரியத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் இந்த இரண்டு பத்திரிக்கைகளும் உளறிக்கொண்டு அடுக்கடுக்காக குற்றம் சுமத்துவது பத்திரிக்கை தர்மத்துக்கு சுத்த அய்யோக்கியத்தனமாக உள்ளது.
நாட்டில் தமிழ் கல்விச் சார்ந்த ஒரே அறவாரியம் மலேசிய தமிழ் அறவாரியமாகும். மாநில அரசிடமும் மத்திய அரசிடமும் குறிப்பாக சிடிக்கிடம் நிதி பெற்று ஆசிரியர்களும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளிவாரியங்களுக்கும் பயிற்சி அளிப்பது மட்டும்தான் தமிழ் அறவாரியத்தின் வேலையாகும்.
கட்டடம் கட்டுவது, பள்ளிகளின் நிதிகளில் கைவைத்து பயிற்சி அளிப்பதெல்லாம் தமிழ் அறவாரியத்தின் வேலையல்ல என்பதை பத்திரிக்கை நிபுணர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு நிதிகளுக்கு வரவு செலவு கணக்குக் காட்டி சமுதாயத்தின் அடுத்த பயிற்சி திட்டங்களுக்கு நிதி கேட்பது தமிழ் அறவாரியத்தின் உரிமையாகும். இதுவரை மலேசிய கல்வியமைச்சு தமிழ் அறவாரியத்துக்கு நிதி கொடுக்கவில்லை என்ற உண்மையை மக்களுக்கும், பத்திரிக்கை மர மண்டைகளுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
இதில் முன்னாள் தலைமை ஆசிரியர்களுக்கோ, இந்நாள் ஆசிரியர்களுக்கோ, இயக்கங்களுக்கோ ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை. காரணம் இவர்களும் செய்வதில்லை, செய்வபவர்களையும் விடுவதில்லை. தமிழ்மொழியில் வாழ்வாதாரம் வாழும் “இதுகளால்” தமிழ்ப்பள்ளிக்கோ, இனத்துக்கோ, தமிழ்மொழிக்கோ, ஒரு கை மண்ணளவுகூட பயனில்லை … அரசு கொடுக்கிற மானியங்களுக்கு வக்காலத்து வாங்கி கோடுபோடுகிற கூட்டம் பத்திரிக்கையில் பத்தினி வேஷம் போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் தமிழர் குரல் இயக்க துணைத் தலைவர் பொன் ரங்கன் வழியுறுத்துகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணையமைச்சரை மக்கள் பிதிநிதிகள் சந்திப்பதை அநாகரீகமாக விமர்சனம் செய்ய வேண்டியதின் அவசியம் என்ன?
நண்பனைத் தவிர, மக்கள் ஓசையை தவிர நாட்டில் பிறர் தமிழ்கல்விக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் போராடக்கூடாதா ?
கேள்விப்பட்டவரை அப்பாவி வாசகர்களின் படத்தையும் பெயரையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு மக்கள் கருத்து, செய்தி என்ற பெயரில் போடும் செய்திகள் எத்தனை காலத்திற்கு எடுபடும்?
ஏவுகணையில் ஒளிந்துக்கொண்டு ஆசிரியர் தொழிலில் வலம்வந்து கொண்டும் கட்டுமானத் தொழிலையும் கைவசம் கொண்டு கலைமகளையே கைக்குள் போட்டு இயக்கம் என்ற பெயரில் அவள் பெயரில் செடிக்கிலிருந்து பெற்ற 20 லட்சம் மானியத்திற்கு கணக்கு காண்பிக்க தடுமாறும் நடிகர் ஜெயமக்குழி அன்பரின் ஆழமில்லா செய்திகள் அமைச்சர் மெச்சிக்க மாமியாருக்கு மாவு அரைத்த கதையாகியுள்ளது.
வாங்கிய நிதிக்கு வெளிச்சம் காட்ட தெரியாதவர்… செடிக்கை ஏமாற்றியவர். தாமே சமூக ஒற்றுமை துறை அமைச்சில் அமர்ந்து செடிக்குள் அமர்ந்து கொண்டு மற்றவர்களுக்கு நிதி வழங்கி வெளிச்சம் காட்ட போகிறாராம்.
வேலியே பயிரை மேயப்போகுதாம். பள்ளிகளையும் தங்களின் வியாபார நோக்கத்திற்காக பகடைக் காய்களாக பயன்படுத்த நினைக்கும் இவர்களின் செய்திகளை மக்கள் இனி ஆராய்ந்து அளந்து பார்த்துதான் உள்வாங்க வேண்டும்.
ஏவுகணை என்று முன்பு பாரிசான் நேஷனலை அடித்து துவைத்தவர் இன்று பாக்கத்தான் கல்வியமைச்சுக்கு சமூக ஒற்றுமை துறை அமைச்சுக்கு ஆப்பு அடிக்க நண்பனின் ஏவுகணை அடுப்பில் ஊதுதல் வெலை தொடங்கியுள்ளது. இவனைத்தவிர தவிர தமிழ்ப்பள்ளிகளையும் தமிழ்மொழியையும் வாழ்விக்க மலேசிய திருநாட்டில் வேறு நாதியில்லை என்ற மமதையில் இந்த முன்னாள் “ஆசி” சிரியன் செயல்படுவது சமூக துரோகமாகும்.
நாட்டில் தமிழர்களையும், இந்தியர்களையும் ஒண்ட விடாமல் மஞ்சள் பத்திரிக்கைக்கு நாரதர் வேட்டு வைக்கும் இந்த கருவண்டு, இனத்தயும் மொழியையும் துளைத்து வட சாப்பிடும் நரியாக வளம் வருவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
சமூக ஒற்றுமை துறையில் இதுபோன்ற சந்தர்ப்பவாதிகள், பச்சோந்திகள் இருந்தால் நாடும் அமைச்சரும் நாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
பொன் ரங்கன்
சிலாங்கூர் தமிழர் குரல்
பி கே ஆர் உறுப்பினர்