தமிழ்ப்பள்ளிகளில் இன்னுமா குறை பிரவசம் !

தங்கத்தமிழர்களே ! தமிழ்ப்பள்ளிகளுக்கு மாணவர்களை அதிகரிப்பது யார் பொறுப்பு ? யோசித்தீர்களா!

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் பாலர் பள்ளிகள்.
எத்தனை?

தனியார் தமிழ்க்கல்வி பாலர் பள்ளிகள் போராட்டங்கள் தெரியுமா?

இந்த 2018 டில் முதலாம் ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை எத்தனை ? தயவு செய்து தகவல் தெரிந்த்தவர்கள் தரலாம்.

பாக்காத்தான் அரப்பான் அரசு பொறுப்பேற்று (9/5/18)நாளையோடு 6 மாதங்கள். இது ஏறக்குறைய குழந்தையின் ஆறு மாத குறை பிறவச காலம் எனலாம்.
ஆறு மாத குழந்தையை “இங்குபியேட்டர்” பெட்டியில் வழி முழுவளர்ச்சிக்கு கொண்டு வந்துவிடும் நவீனக் காலமிது!

பாரிசான் நேசனல்தான் 60 ஆண்டுகளில் சுமார் 150 பாலர் பள்ளிகளை நிறுவியது.

இன்னும் நாட்டில் 430 பள்ளிகளில் பாலர் பள்ளிகள் இல்லை. செடிக் அல்லது கல்வி அமைச்சு ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிக்கும் சுமார் 2 லட்சம் செலவில் தமிழ் பாலர் பள்ளிகள் அமைக்க திட்டமுள்ளதாக பத்திரிக்கை அறிவிப்புகள் ஆர்ப்பரித்தன! சுடச்சுட கோழி சூப்பு ஆறிப் போனால் கொழுப்பு போல பத்திரிக்கைகள் பிறகு நினைவூட்டவிலை. இது பற்றி கூட்டம் போட்டால் முதல் பக்க கலரோடு காணாமல் போகும் பத்திரிக்கைகள்!

இந்த சுருக்கமான அலசலோடு உச்சத்துக்கு வருவோம்.

சமீபத்தில் கல்வி அமைச்சு சொன்னது. நாட்டில் 350 தமிழ்ப்பள்ளிகளில் குறைந்த மாணவர்கள் இருப்பதால் பள்ளிகளை குறைத்து ஒன்றிணைக்கும் நிலை வரலாம் என்று சொன்னார்களே தவிர, மாணவர்கள் குறைய என்ன காரணம் என்று ஆராய ஆளில்ல்லை!

பி ஐ பி ஜியும் எல்பியெசும் பள்ளி நிருவாகத்திடம் பண, கட்டட போட்டா போட்டியில் கயிறு இழுக்க மாணவர்கள் சேர்க்கைக்கு திட்டமிடாத கபோதிகளாக அசுட்ரோ சீரியல் சிலப்பதிகாரமும் , பிக் ப்போக்ஷ் சோதனையும் சாம்பிராஜமாக உள்ளனர்.இதர பொது இயக்கங்கள் ஒன்று கூட கண்டுகொள்ளவில்லை ஏன்?

1970 கள் போல தலைமை ஆசிரியர்க்கோ தமிழ் ஆசிரியர்களுக்கோ தமிழ்ப்பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை பொறுப்புகள் எல்லாம் எதிர்வினைதான். கேட்டால் “எங்களுக்கு வேறு வேலை இல்லையா என்று அப்பட்டமாக பப்பட கேள்வி கேற்பார்கள்.”

அடுத்த 2019 ஆண்டுக்கு தமிழ்ப்பள்ளிக்கு இந்நாள் வரை பதிந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை மிக மோசமாக உள்ளதாம்.

நாட்டில் 530 தமிழ்ப்பள்ளிகளில் சுமார் 150 தமிழ்ப்பள்ளிகளில்தான் பாலர் பள்ளிகள் உண்டு.இந்த பாலர் பள்ளிகளில் சுழலும் சிக்கல்களை, போதனைகளை, ஆசிரியர்களை, தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வடைத்தன நிருவாக சீர்கேடுகளை வேரொரு ஆய்வில் விரைவில் பார்ப்போம்.

முதலாம் ஆண்டுக்கு போகும் மாணவரின் பாலர் பள்ளி தாயார் நிலை எவ்வளவு முக்கியமென்று தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை விட பெற்றேர்களுக்கு அதிகம் தெரியும். காரணம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களில் 95% தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு போடுவதில்லை என்பது நம் ஆய்வு.

இந்த ஆசாமிகள் ஐயாக்களுக்கும் ஐயைகளுக்கும் நாட்டில் ஏறக்குறைய எல்லா மலாய்ப்பள்ளிகளில் முழுக்க பாலர் பள்ளிகள் உண்டு,எனவே கைகாட்டி அங்கு அனுப்பி காரியத்தை மூடி விரல்களை முடக்கிக்கொள்கின்றனர்.

தமிழ் ஆசிரியர்கள் தன் பிள்ளையை மலாய்ப்பள்ளியில் சேர்க்க பத்து, காரணங்கள் இருக்கலாம் . இதில் முதல் காரணம் தன் பிள்ளை ஒழுங்கா படிக்கவில்லையென்றால் ஆசி ரியர்க்கு கௌரவ மயக்கம் பித்தமாக மண்டைக்கு ஏறும். இது தமிழ் பள்ளியில் நடந்தால் கேவளமாம்?

இப்போ அரசியல் அரசுக்கு போவோம்.

பாக்காத்தான் அரசு வழி இப்போது மூன்று முக்கிய பொறுப்புகளை இண்டியர்களுக்கு தந்துள்ளார்கள். மூவரும் ஓய்வூதிய கல்வி நிபுணர்கள். குறிப்பாக கல்வி அமைச்சில் ஆலோசக மன்றத்தில் 75 வயது இண்டியருடன் மற்றவர்களும் அகவை மிஞ்சிய மூத்தோர்கள்தான்.

பாக்காத்தானின் பிரதமர் வெளி நாட்டிற்கு போன நிபுணர் திரும்ப வரவேண்டும். இங்கு ஆள் பல தேவைகள் அதிகம் “டிமாண்டு” என்கிறார்.

பாக்காத்தானுக்கு அல்லும் பகலும் நாயா,,, பேயா அலைந்து திரிந்து உழைத்தவர்கள் பட்டதாரிகள் பலர் ரோட்டில் நிற்க! வேலிமீது ஆலோலோ பாடி வேடிக்கை பார்த்த பாரிசான் பழைய நிபுணர்கள் நுழைந்து, தமிழ்ப்பள்ளிகளின் பாலர் பள்ளிகளுக்குபுதிய கலங்கரை விளக்காகவா விளங்க போகிறார்களா?

அல்லது பதவி மவுசு பொறியில் காரணக்கோடுகளை போட்டு தமிழ்க்கல்விக்கு சிவப்பு சுத்தல் போடுவார்களா ?

இதற்கு நடப்பு “சங்கம” பாக்காத்தான் நம்பிக்கை அரசுதான் உதவி தும்பிக்கை நீட்ட வேண்டும்.

அல்லது இதுவும் விழாவுக்கு வந்து போகும் அரசியல் யானையாகுமா? என்று கேட்டு வைக்கிறோம்.

தமிழ்ப்பள்ளிகளில் ,,,தனியார்பாலர் பள்ளிகளின் அடிப்படை சிக்கல் அதிர்வுகள் தொடர்ந்து ஆராயப்படும். அரசு சிறப்பு பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்ந்தால் பள்ளி குறைப்பு என்ற நிபுணத்துவ தத்துவத்திற்கு வேலை இல்லை என்பது சாதாரண பாமரனுக்கும் தெரியும்.

தமிழ்ப்பள்ளி நமது தேர்வா? தமிழ்மொழி நமது தேர்வா? தேவையறிந்து பாக்காத்தான் கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம். இது விழிப்பல்ல! தமிழ்க்கல்வி விடியலுக்கு இரவில் சூரியனை தேடும் சூன்யன்.

-பொன் ரங்கன். 9/10/18