தமிழீழத்திற்கு ஆதரவான ஐயா பழ. நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்திற்கு – மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் கண்டனம்

உலக தமிழர்களின் இரண்டாவது தாயகமான தமிழீழத்திற்கு ஆதரவாக எழுதப்பட்ட, தமிழர் தேசிய இயக்க தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் புத்தகங்களை அழிக்குமாறு உத்தரவு பிரப்பித்த சென்னை உயர்நீதிமன்றத்தை மலேசிய நாம் தமிழர் இயக்கம் கண்டிப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு போர் நடந்துக் கொண்டுருந்த தருணத்தில் தமிழீழ தாயகத்திற்கு ஆதரவாக “தமிழ் ஈழம் சிவக்கிறது” என்ற புத்தகத்தை வெளியிட்டதாக எங்கள் ஐயா பழ. நெடுமாறன் அவர்களை கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்த அனைத்து புத்தகங்களையும் பறிமுதல் செய்தது குறிப்பிட்டத்தக்கது.

இவ்வழக்கில் கடந்த 2006ஆம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்ட உடனையே  தம்மிடம் பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்பத்தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைப் பதிவு செய்தார்.

நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர், நேற்று முன்நாள் விசாரணைக்கு வந்த ஐயா பழ. நெடுமாறன் வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமின்றி, இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக அப்புத்தகங்களை அழிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது என்றார் திரு வீ. பாலமுருகன்.

தமிழீழத்தை இனி எவரும் ஆதரிக்கக் கூடாது என முழுக்க முழக்க திட்டமிட்ட செயலாகவே மத்திய அரசுக்கு கைப்பாவையாக சென்னை உயர்நீதிமன்றம் செயல்ப்பட்டிருக்கிறது  என கண்டித்தார். மேலும் தமிழர்களை வஞ்சிப்பதே வாடிக்கையாக கொண்டிருக்கின்றன இந்த இந்திய மத்திய மாநில அரசுகள் என மலேசிய நாம் தமிழர் இயக்கம் தமது கோபத்தை பதிவு செய்கிறது என அதன் தேசிய வீயூக இயக்குநரும் தகவல் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான திரு பாலமுருகன் வீராசாமி கூறினார்.