தமிழர் தேசிய புத்தாண்டு வாழ்த்துகள் தமிழர்களே !
யாரெல்லாம் தமிழர்கள் ? இண்டியன் என்பவர்கள் யார் ?
சமீபத்தில் தமிழகத் தமிழ் தேசியப்பேரவை த்தலைவர் ஐயா பெ. மணியரசன் எழுதிய புத்தகம் “தமிழ்த் தேசக்குடியரசு ” படித்த போது ஒரு உண்மை தெரியவந்தது. அவர் எழுதிய வரிகளை அப்படியே எழுதுகிறேன்,
” இந்திய அரசமைப்புச்சட்டம் ”இந்தியர்” என்ற ஒரு தேசிய இனம் NATIONALITY இருப்பதாக கூறவில்லை. அந்நாட்டின் குடியுரிமை CITIZENSHIP பற்றி மட்டுமே பகுதி 2 டில் விதிகள் 3 முதல் 10 வரை கூறுகின்றனவாம். இந்தியாவின் குடிமகன் அல்லது குடிமகள் CITIZEN OF INDIA என்பது மட்டுமே அரசமைப்புச்சட்டம் பேசுகிறது. இந்தியாவின் பெருமுதலாளிய இந்தி ஆதிக்க பார்ப்பனிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் இந்தியன் என்ற ஒரு தேசிய இனம் இருப்பதுபோல சட்டவிரோதமாக பேசியும் எழுதியும் வ்ருகின்றனர்.”
அதுக்குமேல ஒரு படி சென்று ” இச்சக்திகள் இந்தியாவை ஒரு தேசம் என்றும் சட்டத்துக்கு புறம்பாக எழுதி வருகின்றனர். இந்தியாவின் அரசிலமைப்பு சட்ட விதி 1 இந்தியா அல்லது பாரதம் அரசுகளின் (STATES ) ஒன்றியம் என்றுதான் கூறுகிறதாம். இவையெல்லாம் சுரண்டல் சக்திகளும் ஆதிக்கசக்திகளும் கிளப்பிவிடும் இந்திய தேசிய வெறிப்பரப்பல் முறையாகும். அனைத்து இந்திய இடதுசாரிகளும் இந்தியன் என்ற ஓர் இனம் இருப்பதாக வதநதி பரப்புகின்றனர்” என்று எழுதியுள்ளார்.
இதற்கும் மலேசியத்தமிழரகளின் அரசியல் குழப்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் எகுறுவது புரிகிறது. சற்றே தொடருங்கள் என் அருமை தமிழர் உறவுகளே !
இந்தியாவின் தமிழர் ,தெலுங்கர் , வங்காளி இன்னும் பல மாநிலங்களின் இனங்களை இயற்க்கையான தேசிய இனங்களையும் இந்தியா அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடவில்லையாம். இந்திய குடியுரிமை என்று மட்டுமே அது கூறுகிறது.
தமிழர் போன்ற தொன்மையான இனத்தை இந்தியாவின் அரசியலைப்பு சட்டம் கூற வேண்டும் என்பது தமிழர் தேசியத்தின் கோரிக்கையாகும்.
இப்போது “தமிழர் தேசியம்” என்ற சொர்க்கோவையில் சில வேளைகளில் தமிழ் தேசியம் என்று மொழிக்கு முக்கியத்துவம் தருவது இயல்பாக இருந்தாலும் “தமிழ்” தேசியம் என்பவர்கள் வெறும் மொழியால் இணைந்தும். தமிழர் தேசியம் என்பதின் பொருள் தாயும் தந்தையும் தமிழராக இருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாகிறது. இங்கே சாதியமும்,சமயமும் முன்னிறுத்தப்படவில்லை என்பதை “தமிழர்கள் உணர வேண்டும்.”
தேசம் என்பது என்ன ? நீண்ட நெடுங்காலமாக ஒரு நிலப்பகுதியில் சேர்ந்து வாழ்ந்து அங்கே ஒரு பொது மொழி, பொது பொருளியல், பொதுப்பண்பாடு அந்த பண்பாட்டில் உருவான உளவியல் உறவில் உருவாக்கம் பெற்று வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகம் தேசமாக அமைகிறது.அந்த இனம் தேசிய இனமாக உரிமைப்பெறுகிறது.
தமிழகத்திலிருந்து மாலாயா வந்த தமிழர்கள் கடந்த 200 ஆண்டுகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். மலைவாழ் தமிழ்ப்பள்ளிகளின் வரலாறுக்குள் இன்று 2 மில்லியன் இந்தியர்களில் 85 சகிதம் தமிழர்கள் இருப்பதாக கணக்கியல் காட்டுகிறதாம்.
ஆனால் நம்து மலேசியாவின் அரசியல் கட்சிகள் தமிழர்களை இந்தியன் பாட்டியலில் போட்டு 15 சகிதம் இந்தியர்களின் போர்வையில் நம்மை அமுக்கி அரசு அரசியல் உரிமைகளை பொத்திக்கொள்வதாக சொல்ல வருகிறேன்.
மலேசியாவின் இதர இந்தியன் காட்சிகளை ஒரு புறம் வைப்போம். காரணம் அங்கே தூயத்தமிழர்கள் இல்லை என்பதை நாம் அறிவோம். ம இ கா போன்ற அரசியல் கட்சியில் அதிகமாக தமிழர்கள் இருந்த்தாலும் பதவி ஆதிக்கம் என்பது சாதியமும் இதர அந்நியர்கள் அதிகம் ம இ கா பதவிகளில் இருக்க காரணம் இந்தியன் என்ற அமைப்பின் காரணம் என்பதை நாம் அறிய வேண்டும்.
மலேசியத்தமிழர்களுக்கு தமிழகத்தை போலவே அரசியல் ஆளுமை சக்தி கிடையாது. காரணம் நடுவண் அரசுகள் தமிழர்களை அரசியல் அமர்வில் வைப்பதில்லை அது இந்தியாவாகட்டும் மலேசியாவாகட்டும். இதன் அடிப்படை காரணத்தை நம்மால் ஆராய முடியவில்லை?
இது உலக அரசியல் ரகசியமாக இருக்குமோ என்றும் யோசிக்கிறோம். தமிழ் ஈழ தமிழர்கள் அடிப்பட்ட போது வல்லரசு நாடுகள் உதவவில்லை. நியாயம் பேசும் ஒபாமா கூட சமத்துவம் பேசி உள் நாட்டுப்போரை நிறுத்தவில்லை. பாங்கி முன் கூட இப்போது தன் உதவில்லை என்ற கோழைத்தன அவலத்தை வெளிக்காட்டியுள்ளார்.
நாட்டில் எத்தனையோ தமிழர் அரசியல் அறிவாளிகள் இருந்தும். இதை சீர் தூக்கி பார்க்க முன் வருவதில்லை. இருக்கும் அரசியல் வாதிகள் தமிழர்கள் என்ற அடையாளத்தில் அரசியல் நடத்தினால் வாக்குகள கிடைக்காது என்று இதரவர்களுடன் ஒட்டி உறவாடி நம் வாக்குகள மட்டும் வேண்டும் என்று ஏமாற்றுகிறார்கள்.
DAP, PKR என்ற முக்கிய எதிர்கட்சியிலும் இந்த பாகுபாடுகள்தாம் முந்தி நிற்கிறது. நல்ல தமிழர் இனம் காக்கும் தமிழர்கள் அரசியலுக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் அரசியல் தலைமைத்துவம் ஒரவஞ்சனையில் கேட்பர் பேச்சைகேட்டு காசுக்கும் பெட்டிக்கும் ஒநாய்க்கூடமாக மாறுகிறது.
எனக்குத்தெரிந்த தெரிந்த ஒருவரிடம் கேட்டபோது நல்ல தமிழர் அரசியவாதிகள் இந்த நாட்டில் இல்லாததால் நல்ல சமூக சேவையாளர்கள் அடையாளம் தெரியாமல் போகிறார்கள் என்றார்.
நல்லவர்களுக்கெல்லாம் சாட்சிகள் இரண்டு ஒன்று மனசாட்சி இன்னொன்று தெய்வதின் சாட்சி. ஆனால் மனிதர்கள் மயங்கி அரசியல் நடத்தும் காலம் இருக்கும் வரை தமிழர் சமுதாயம் இழப்புக்களுக்கு தயாராகி உடையும் என்பது நமது ஆய்வு.
நான் என் தமிழ் இனத்துக்காக அரசியல் போராளி.என்பதில் தெளிவாக உள்ளேன். வரப்போகும் PRU 14 பக்கம் வந்து விட்டது. இது வேறு மாதிரி அமையும் என்பது என் கணிப்பு தமிழர்கள் தயாராகலாம்.
மலேசிய அரசியல் தலைவர்களும் தமிழர்களின் உரிமையை இன்னும் உணராமல் இருப்பதும் இந்த இந்தியனால் என்பதை அறிவார்த்த புத்தாக்கம் அறிவிக்கும் காலம் வரை காத்திருப்போம்.
நெஞ்சமிருக்கு தெளிவாக நேரமிருக்கு நமக்காக !
-பொன், ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா