தமிழ் சீன மொழிப் பள்ளிகள் தேவையில்லையென போராட்டம் நடத்துவேன் என்ற டத்தோ சிறி நசிரிக்கு நல்லாண்மை இருந்தால் போராடி பாரும் – மலேசிய நாம் தமிழர் இயக்கம் சவால்

கடந்த காரிக்கிழமை செமினியிலுள்ள பெரெனாங் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் போது மலாய்காரர்களின் சலுகைகளுக்கு சவால் விடுத்தால் தமிழ் சீன தாய்மொழி பள்ளிகளை மூடுவதற்கு நானே களமிறங்கி போரடுவேன், என்று இனவாதமாக பேசிய முன்னாள் அமைச்சர் நசிரி அப்துல் அசிசுக்கு உண்மையிலேயே நல்லாண்மை இருந்தால் போராடி பாருங்கள் என மலேசிய நாம் தமிழர் இயக்கம் சவால் விடுவதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

மலாய்காரர்களின் உரிமைகள் பற்றிய எந்த சூழலிலும் தமிழர்கள் நாங்கள் கேள்வி எழுப்பியதில்லை. அதற்கு எதிராக எந்த செயலும் புரிந்ததாக செய்தியில்லை. நிலைமை அப்படியிருக்க, அற்ப தேர்தல் பிரச்சாரத்திற்காக எங்கள் தாய்மொழி கல்வி கற்பிக்கும் தமிழ்ப் பள்ளியை மூட போராடுவேன் என்ற அம்னோ தலைமை செயலாளர் நசிரியின் பேச்சு அரைவேக்காட்டுத் தனமானது என்றார்.

தென்னகத்தில் இந்தி திணிப்பால் எங்கள் தாய்மொழி அழிந்துவிடாது காக்க போராடி, இறுதியில் நெருப்புக்கு இறையாக உயிர் நீத்த 840 வீரமறவர்களான எங்கள் முன்னவர்கள் இரத்த வழி வந்த தமிழர் தேசிய இனத்தின் பிள்ளைகளடா நாங்கள்.  எங்கள் இனத்தின் அடையாளமாக திகழும் தமிழ்ப் பள்ளியை காக்க, மலேசிய தமிழர்கள் நாங்கள் எதுவரைக்கும் செல்வோம் என மலேசிய நாம் தமிழர் இயக்கம் எச்சரிக்கிறது என அதன் தேசிய வீயூக இயக்குநரும் செய்தி பிரிவு பொறுப்பாளருமான திரு பாலமுருகன் வீராசாமி கூறினார்.