வணிகம் செய்வோம் வாழ்வில் வளங்கள் பெறுவோம்

வணிகம் செய்வோம் வாரீர் என ஒன்றுக்கூடல் சந்திப்பு கடந்த 1 மே 2019 பத்துமலை ஆச்சி உணவகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

வணிகக்களம் Million STAR”S. என புலனக்குழு  சமூக சேவகர் திரு. இரா. முருகன் (கேமரன்மலை) அவர்களால் தொடங்கப்பட்டு  பலத்தரப்பட்ட வியாபாரிகளை இணைத்து, பொருளாதார மேம்பாடு மற்றும் வணிகத் தொடர்புகளை உருவாக்கும் களப்பணியை செய்து வரும் ஒரு தளமானது.

பல இடங்களில் கூட்டங்களை ஏற்பாடு செய்து, வணிகர்களின் சொந்த வியாபாரத்தை மற்ற வணிகர்களிடம் அறிமுகம் செய்து, அவர்கள் மத்தியில் வணிக தொடர்பை உருவாக்கி, நாம் அனைத்து வளங்களை பெற்று சிறப்புடன் வாழ வழி வகுக்கும் தளமே வணிக்க்களம் Million STAR”S என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பலதரப்பட்ட 63 வியாபாரிகள் கலந்து கொண்ட வேளையில், அதில் தனிசிறப்பாக 28 வணிக பெண்கள் துணிவாக தங்களை அறிமுகம் செய்தது நமக்கு பெருமையாகவும் இருந்தது.

மேலும் பல ஆலோசனைகளும், அனுபவங்களும் மற்றும் வழிகாட்டுதலும் பகிரப் பட்டது ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது.

பொருளாதார மீட்சியே, இனமீட்சி. இது போன்ற முன்னெடுப்பு நாடு தழுவிய  ரீதியில் தொடர ஏற்பாட்டாளர்கள் திட்டம் வைத்துள்ளனர் என தலைமை பொறுப்பாளரான திரு இரா. முருகன் தெரிவித்துக் கொண்டார்.

மேல் விவரங்களுக்கு;

*இரா.முருகன்: +60164213241

*திரு. சுரேசு: +60123153120

*திரு. ரவிந்திரன்: +60163810490

*இரா. நாவின்: +60149444741