இந்திய பாராளுமன்றத் தேர்தலில் தமிழக நாம் தமிழர் கட்சியின் வாக்கு அதிகரிப்பு – உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள்

17வது இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த மே 23 வெளியானதை தொடர்ந்து தமிழக நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளதை, உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் தமது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என அதன் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார். 

இந்திய வரலாற்றில் இதுவரை எந்த கட்சியையும் செய்ய துணியாததை, செந்தமிழ் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி 20 ஆண்கள் 20 பெண்கள் என சமமாக வேட்பாளர்களை நிறுத்தி, இரண்டாவது முறையாக சமரசமின்றி தனித்து போட்டியிட்ட புரட்சியவாதிகள் இவர்கள் என்றார். 

அரை நூற்றாண்டுகாலமாக தமிழகத்தை ஆண்டு வந்த பெரும் கட்சிகள் கூட இதுவரை தனித்து நின்று போட்டியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுதத்தை ஏந்தினாலும் அறத்தின் வழி நின்ற, உலக தமிழினத்தின் உன்னத ஒப்பற்ற தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் கற்பித்த இனம், மொழி, வீரம், அறம், மானம், மண் விடுதலை என வழிதடப் பாதையில் அறிவாயுதத்தை ஏந்தி தமிழர் அரசியல் விடுதலைக்காக கடந்த 2010ஆம் ஆண்டு செந்தமிழன் சீமான் தலைமையில் வெறும் 4 ஆயிரம் பேயரை கொண்டு தொடங்கப்பட்டது தமிழக நாம் தமிழர் கட்சியின் பயணம். 

இதுவரை எந்த ஆரிய திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லாமல், பணம் கொடுத்து வாக்கு பெறாமல், பெரும் பொருளாதார சிக்கல்களை தாண்டி, சற்றும் ஊடக பலம் இன்றி, காவல் துறையின் பல இடர்பாடுகளுக்கு இடையில், அதிகார அடக்குமுறைகளுக்கு நடுவில், சின்னம் மறுக்கப்பட்டு பின்னர் மறைக்கப்பட்ட நிலையில் எளிய பிள்ளைகளாக  கடந்த 2016ரில் முதல் சட்டமன்றத் தேர்தலில் 1.1 சதவீத வாக்கை பெற்று, இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் 4 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்று முன்னேறி வருகின்றனர். 

உலகத் தமிழர்களுக்கு தனது அடையாளத்தை அறியவைத்து, தமிழர் தேசிய சிந்தனை எழுச்சியை எழ வைத்து, அன்னை தமிழக மண்ணின் எதிர்கால நலனுக்காக அந்த மண்ணின் மக்கள் உரிமைக்காக அனைத்து உயிருக்குமான அரசியலை கட்டியெழுப்பி, தமது இனம், மொழி, சமயம், தொன்மை, வரலாறு, பண்பாடு, கல்வி, அறிவியல், வாழ்வில், மண்வளம், மலைவளம், காடுவளம், கனிமவளம் காத்து, சாதிமத போதமற்ற, பெண்ணியடிமையற்ற, பாலியல் வேறுபாடற்ற தூய தமிழர்கள் என்ற அடையாளத்துடன் வாழ போராடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும், அவருக்கு தம்பிகளாக தன்னலமற்று உழைக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் நம்பி வாக்களித்த 16,68,042 மானத்தமிழனுக்கும் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் புரட்சிகர வாழ்த்துக்களை பதிவு செய்கிறோம் என்றார் 
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலிலும் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தது போல் என்றும் தமிழர் தேசிய கருத்தியலில் தமிழக நாம் தமிழர் கட்சிக்கு பக்கபலமாக நிற்கும் என அதன் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி கூறினார் 

புரட்சி வாழ்த்துக்கள்..! நாம் தமிழர்..!