தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையில் மூம்மொழித் திட்டமாக கட்டாய இந்தி திணிப்பை மீண்டும் கொண்டு வர முயலும் இந்திய (பாஜக) அரசையும் அதன் விரோத செயலையும் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கடுமையாக எதிர்ப்பதாக அதன் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
1935-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் இந்தி திணிப்பு மெல்ல மெல்ல அரங்கேறியது. இந்தி திணிப்பால் தமது தாய்த் தமிழ்மொழி அழிந்து விடக்கூடாது என போராடி காக்க சுமார் 840 வீர மறவர்கள் தன்னையே நெருப்புக்கு இறையாக்கிய வரலாற்று வீர துயரச் சம்பவத்தை நாம் மறந்து கடந்து விட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த முன்னவர்கள் நினைவாக, விதைத்த உறுதிபாட்டின் புத்துணர்வாக ஒவ்வொரு ஆண்டும் ஐனவரி 25-ஆம் திகதி மொழிப்போர் ஈகையர் நாள் என்று வீரவணக்கம் செலுத்தி நெஞ்சுரம் ஏற்றி வருகிறோம் என்றார்.
தமிழ் மொழி தனித்துவமாக உலக நிலை பெற வேண்டும் என்ற பெருங்கனவோடு உலகத் தமிழர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். அதை அதி நுட்ப (scentific) மொழியாக வருங்காலத்தில் பதிப்பதன் மூலம் நமது பிள்ளைகளின் திறன், அறிவியல்,
கண்டுபிடுப்புகள், பொருளாதாரம் மற்றும் ஆளுமை தனித்துவம் அனைத்தும் காக்கும் கவசமாக தமிழ் மொழி வருங்காலங்களில் இருக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்றே.
இந்தி மொழியை ஏற்றால், தமிழகத்தில் தமிழர்கள் வடநாட்டவர்களுக்கு அடிமையாக மாறக்கூடும். இந்தி ஆங்கிலம் போல் உலக பயன்பாட்டு மொழி அல்ல. அதை கற்றால் வட மாநிலத்தில் மட்டுமே உபயோகிக்க முடியும். இந்தியத்தை ஏற்கும் தமிழகத்தின் சாப கேடுகளான பாஜக தலைவர் தமிழிசை செளந்தராசன் மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருசுணசாமி ஆகியோர் ஆதரிப்பதுபோல் இந்தி மொழியை பாலம் போட்டு இறக்குமதி செய்வோமானால், நமது தாய் மொழியான தமிழ் மொழி தனித்துவத்தை அழித்து அன்னியர் சூழ்ச்சிக்கு இறையாகி விடுவோம் என்றார் வீ.பாலமுருகன்.
தமிழகத்தில் இந்தி இல்லாத போதே தொடர்வண்டி பயணச்சீட்டு, அஞ்சல் சீட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர், மயில் கற்கள், பெயர் பதாகை, விளம்பரங்கள் போன்ற எண்ணிலடங்கா இடங்களில் உட்கொண்டு இருப்பதுடன் வடநாட்டவர்கள் தமிழகத்தின் வணிக துறை உட்பட எல்லா அரசு துறைகளையும் ஆக்கிரமித்து, இன்று தமிழகத் தேர்தலை நிர்ணயிக்கும் வாக்காளர்களாக உருமாறி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தமிழ் தாய் மன்னில் தமிழர்கள் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். நமது மொழிக்காக இன்னுயிரை தந்த மானமறவர்களின் இலட்சியத்தை தொடர்ந்து வேண்டும். உலகத் தமிழர்கள் நாங்கள் துணையாக இருக்கிறோம். நமது இனம், மொழி, சமயம், பண்பாடு, உரிமை, உடமை போன்ற மீட்சிக்கு இடையூறாக இருக்கும் எந்த திட்டத்தையும் நயவஞ்சக சூழ்ச்சியையும் முறியடிக்க வேண்டும் என்றார்.
உலகத்தின் மூத்த மொழி தமிழ். இந்தியாவிலேயே ஆக பின்னால் வந்த மொழி இந்தி. இதை தமிழக அரசு உணர்ந்து, மத்திய அரசு கொண்டு வரும் இந்தி திணிப்பை எதிர்க்க வேண்டும். தமிழக மண்ணில் தமிழே என்றும் கட்டாய பாடமாக இருக்க உறுதி செய்ய வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கோரிக்கை வைப்பதாக அதன் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி கேட்டுக் கொண்டார்.