சுங்கை சிப்புட் மண்ணின் போற்றுதலுக்குறிய தமிழிய மைந்தர்கள் உயர்திரு ஆ.வீராசாமி தேவர் (துன் டாக்டர் வீ.தி.சம்பந்தன் அவர்களின் தகப்பனார்) மற்றும் உயர்திரு அ.மு.சுபாப்பையா பிள்ளை (சங்கநதி தமிழ்ப்பெரியார் அ.மு.சு.பெரியசாமி பிள்ளை அவர்களின் தகப்பனார்) வழி செயல்பாட்டில் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளி கருவானது.
அரசு நிலம் கிடைக்காததால் இவ்விரு குடும்பத்தினரும் 2.5 ஏக்கர் நிலத்தையும் தலா 25.000. வெள்ளியும் வழங்கினர்.
சுங்கை சிப்புட் வட்டாரத் தோட்ட மக்கள் 7,000 வெள்ளியும் வழங்கி உதவினர்.
19.06.1952 = அடிக்கல் நாட்டப்பட்டது
இதற்கு இந்தியாவின் புகழ்பெற்ற யோகி சுத்தானந்தா பாரதியார் வந்தார்
இவரே இப்பள்ளிக்கு மகாத்மா காந்தி கலாசாலை என்ற பெயரும் இட்டார்.
மேலும் பள்ளிக்கு வாழ்த்துப் பாடலையும் இயற்றினார்
அதுவே இன்றளவும் இப்பள்ளியில் பாடப்படுகிறது.
பின்னர் பள்ளி மண்டப நடுவில் மகாத்மா காந்தியின் சிலையும் வைக்கப்பட்டது.
14.08.1954 = பள்ளி திறக்கப்பட்டது
அப்போது ஐக்கிய நாட்டுச் சபை தலைவியாக இருந்த விஜயலெட்சுமி பண்டிட் (இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தங்கை) அவர்கள் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
1953 மே = கட்டிடப் பணிகள் பூர்த்தியாகி, வகுப்பு நடத்த தயாரான சமயத்தில் சண்முகாந்த வித்தியா சாலை, நகரத் தமிழ்ப் பள்ளி, ஈவுட், கெமிரி, கமுனிங் மற்றும் வீராசாமி தோட்டப் பள்ளிகளும் கலாசாலையில் இணைந்தன.
மற்றொரு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதற்கு தவயோகி சித்ரமுத்து அடிகளார், அன்றைய கல்வி அமைச்சர் கீர் ஜொகாரி அவர்கள் தலைமையேற்று, சுங்கை சிப்புட் வீராசாமி குடும்பத்தினர், அ.மு.சுப்பையா பிள்ளை குடும்பத்தினர், பினாங்கு வள்ளல் என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை குடும்பத்தினர் மற்றும் வட்டார பொது மக்கள் நன்கொடையால் வகுப்பறைகள் கட்டப்பட்டன.
துன் டாக்டர் வீ.தி.சம்பந்தன் அவர்கள் சமூகநலத் துறையின் மூலம் நிதியை பெற்று, பள்ளிக்கென பேருந்து ஒன்றை வாங்கி மாணவர்களின் போக்குவரத்துக்கு உதவினார்.
1993 = மூன்று மாடி கட்டிடமாக நிறுவப்பட்டதுடன் அதை கணினி மயமாகவும் பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்தி மாபெரும் உதவியாக இருந்தார் அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.சாமிவேலு அவர்கள்.
28.10.2009 = இணை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதற்கு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு, தோ புவான் உமாசுந்தரி சம்பந்தன் மற்றும் மாரியாயி அம்மாள் அமுசு பெரியசாமி பிள்ளை ஆகியோர்கள் தலைமையேற்றனர்.
09.10.2011 = இணை கட்டிடம் திறக்கப் பட்டது
ம.இ.கா – வின் தேசியத் தலைவர் அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.சாமிவேலு அவர்களால் அதிகாரப் பூர்வமாக திறப்பு விழா கண்டது.
1988 = பள்ளியின் முதலாவது மலர் “கலாசாலை ஒளி” எனும் பெயரில் வெளியீடு கண்டது
2014 = இரண்டாவது மலர் “கலாசாலை ஒளி மணி விழா என்ற பெயரில் வெளி வந்தது.
தலைமையாசிரியர்கள் விபரம்
- திரு. சு.முத்து ரெட்டியார்
திரு. வி.அருள்ராயன்
திரு. ந.ஆனந்ராஜ்
திரு. சு.கல்யாணசுந்தரம்
திரு கு.இராமலிங்கம்
திரு. சு.கல்யாணசுந்தரம்
திரு. ரா.முனியாண்டி
திரு. சு.பூர்ணசந்திரன்
திரு. மு.கிருஷ்ணன்
திரு. மு.சாகுல் அமிட்
திரு. சு.சுப்பையா
திரு. அ.சுப்ரமணியம்
திரு. பொன்.சுப்ரமணியம்
திரு. ந.மணியம்
திரு. சி.சுப்ரமணியம்
திரு. சி.சிவராமன்
திரு. க.சின்னசாமி
திரு. சி.வீரமுத்து
திருமதி. சி.சாந்தகுமாரி
திரு. த.முத்துச்செல்வன்
முன்னாள் மாணவர் சங்கம்
தமிழ்ப் பெரியார் அமுசு பெரியசாமி பிள்ளை அவர்கள் ஆலோசனையில் முன்னாள் மாணவர் திரு கோ.காளிமுத்து அவர்கள் வழி முன்னாள் மாணவர் சங்கம் ஒருங்கிணைப்பு பணி தொடங்கியது.
1964 = சங்கம் தோற்றுவிக்கப் பட்டது
அதன் முதன் தலைவராக திரு. க.பாலகிருசுணன் அவர்களும், கெள.செயலாளராக திரு. பூ.அருணாசலம் அவர்களும், பொருளாளராக திரு. இல.கோபால் அவர்களும், ஆலோசகர்களாக திரு. ஆசிரியர் சி.பூரணசந்திரனி, ஆசிரியர் தமிழ்மணி, மற்றும் ஆசிரியர் திரு. க.லோகநாதன் அவர்களோடு சங்கம் உணர்வுப்பூர்வமாக செயல் பட்டது.
1966 = சங்கம் சார்பில் நகர மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது
நகரிலுள்ள இளம் பாடகர்கள், நடனமணிகளைக் கொண்டு நடந்த நிகழ்ச்சியை, பொதுப்பணி அஞ்சல் தந்தித்துறை அமைச்சர் துன் வீ.தி.சம்பந்தன் அவர்கள் தலைமையேற்றார்
அதில் சேர்ந்த நிதியை கொண்டு, கலாசாலையில் படிக்கும் வசதி குறைந்த நூற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு ஆண்டுதோரும் புத்தகம், காலணி, சீருடை, புத்தகப்பை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது
மண்டபத்தின் முன்பகுதியை சங்கம் அழகாக கட்டிக் கொடுத்தது.
பிரபல நாவலாசிரியர் அகிலன், திரைப்பாடலாசிரியர் கா.மு.சாரிப், தமிழத்தின் அறநிலையத் துறை பொறுப்பாளர் பேராசிரியர் மணிவண்ணன் உள்ளிட்ட பலரை சங்கம் வரவேற்று நிகழ்வுகளை நடத்தியுள்ளது.
அதன் வழி வழியே நகர்ந்து, பலர் தலைமையேற்று தவழ்ந்து, படிப்படியே நலிவுற்றது.
28.02.2014 = முடங்கி கிடந்த சங்கம் மீண்டும் உயிர் பெற்றது
தற்போதைய தலைவர் உயர்திரு. க.பாலகிருசுணன் அவர்கள் கடும் முயற்சியில் சங்கத்தை மீட்டெடுத்தார்
03.07.2014 = சங்கத்தின் ஆண்டுக்கூட்டம், விருந்து நிகழ்வாகவும் (பொங் மூன்) உணவகத்தில் நடத்தப்பட்டது
அதில் திரு. க.பாலகிருசுணன் தலைவராகவும் திரு. வீ.பாலமுருகன் துணைத் தலைவராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
01.02.2015 = தைப்பூசத்தை முன்னிட்டு சங்க சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, அதில் உறுப்பினர் பதிவும் நடைப்பெற்றது
ம.தி.க-வுடன் இணைந்து (UPSR) மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடத்தியது
சுமார் 180 மாணவர்கள் கலந்துக் கொண்டனர்
கலாசாலையில் இயங்கும் சினாரான் பாலர் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் அட்டை மற்றும் பதாகை வழங்கியது
05.01.2016 = வசதி குறைந்த 30 மாணவர்களுக்கு சங்கம் சீருடை வழங்கியது
14.01.2016 = THR – வாணொலி அலைவரிசை அறிவிப்பாளர்களை வரவழைத்து பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது
18.01.2016 = பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சங்கம் சார்பில் வாழ்த்து அட்டை வெளியிடப்பட்டது
02.07.2016 = கமுனிங் மன்றத்துடன் இணைந்து வர்ணம் தீட்டும் போட்டி நடத்தியது
05.08.2016 = ஆண்டுக்கூட்டம் நடந்தேறியது
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் இயங்கும் இயக்கங்களின் ஆதரவில் “தமிழ் பள்ளியே தமது தேர்வு” எனும் மிக பெரிய பதாகை பதித்தது
வட்டார இளைஞ்சர்களுக்கு காற்பந்து போட்டி சங்கம் நடத்தியது
சங்க வங்கி கணக்கு திறக்கும் முயற்சி இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்டது
யூபிஎசுஆர் தேர்வில் 3 “ஏ”கள் மேல் எடுத்த பாணவர்களுக்கு ரொக்கமும் மும்மொழி அகராதியும் சங்கம் வழங்கியது
17.06. 2017 ஆண்டுக் கூட்டம் நடந்தேறியது
23.06.2017 = சங்க ஆலோசகர் திரு பூ.அனுணாசலம் மறைவு
அவருக்கு புகழ் வணக்கம் கவிதை திரு. வீ.பாலமுருகன் இயற்றினார்
சங்க வங்கி கணக்கு திறக்கப்பட்டது
மலேசியாவின் 200-ஆம் ஆண்டு தமிழ்க் கல்வி நாள் விழாவை முன்னிட்டு, முன்னாள் மாணவர் சங்க சார்பில் திரு வீ.பாலமுருகன் அவர்கள் தமது பள்ளி மாணவர்களுக்கு தாய் மொழி “தமிழ் மொழியின்” சிறப்பை பற்றி விளக்கவுரையாற்றினார்
09.09.2017 = 64 ஆண்டுகளில் முதன் முறையாக பள்ளி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது சங்கம் துப்புரவு பணி மேற்கொண்டது
யூபிஎசுஆர் தேர்வு எழுதிய 94 மாணவர்களுக்கு சங்கம் 5 நாட்கள் 2 வேளை சத்துணவு வழங்கியது
10.12.2017 = தலைநகரில் நடைபெற்ற தமிழ்க் கல்வி மாநாட்டிற்கு சங்கம் இணைந்து பங்காற்றியது
தமிழ்ப் பள்ளியே தமிழர்கள் தேர்வு எனும் பரப்புரை மேற்கொள்ளப் பட்டது
வகாப் இடைநிலை தமிழர் மாணவர்களுக்கு மாதம் ஒருமுறை சங்கம் வரலாறு வகுப்பு நடத்தியது
17.03.2018 = ஈப்போ நகரில் நடைபெற்ற புத்தக வெளியிடு விழாவிற்கு சங்கம் நல்லாதரவை வழங்கியது
நமக்கு வேண்டியது சலுகை அல்ல, நமக்கான அடிப்படை உரிமை எனும் கருபொருளில் கடந்த 14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு மலேசிய தமிழர்களின் 14 அம்ச தேர்தல் கோரிக்கை வெளியீட்டிற்கு சங்கம் நன்கொடை வழங்கி துணை நின்றது
தமிழக காவிரி சிக்கலுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களாக மலேசிய இந்திய தூதரகத்தில் மனு வழங்கிய உறவுகளுக்கு சங்கம் உணவு அன்பளிப்பு செய்தது
15.07.2018 = ஆண்டுக் கூட்டம் நடந்தேறியது
தமது பள்ளியில் பயிலும் வசதி குறைந்த குறிப்பாக கல்வியில் மந்த நிலையில் இருக்கும் சில மாணவர்களுக்கு, வாரத்திற்கு மூன்று நாள் சங்கம் இலவசமாக சிறப்பு வகுப்பு நடத்தி வந்தது
31.08.2018 = நாட்டின் 61-வது தேசிய நாள் கொண்டாட்டத்தை துன் வீ.தி.சம்பந்தன் அவர்களுக்கு பிறகு அவர் நிறுவிய சுங்கை சிப்புட் மணிக்கூண்டில் 1000 பேர்கள் புடைசூழ சங்கம் கொண்டாடி வரலாறு படைத்தது
13.10.2018 = பள்ளியின் 66-ஆம் திடல்தட போட்டி விளையாட்டுக்கு சங்கம் பரிசு பொருட்கள் வழங்கியது
தீபாவளியை முன்னிட்டு விருந்தோம்பல் நிகழ்வை நடத்தி, 30 ஏழ்மை குடும்பங்களுக்கு சங்கம் அன்பளிப்பு வழங்கியது
12.12.2018 = தமிழ்ப்பள்ளி ஆயுளே தமிழர்களின் ஆயுள் என தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு வருடந்திர பரப்புரை செய்யப் பட்டது
01.01.2019 = ஆண்டு தொடக்க விழாவை அரெனா மண்டபத்தில் சங்கம் கோலாகலமாக சங்கம் கொண்டாடியது
10.03.2019 = கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுப்பில், கம்பார் தமிழ்ப் பள்ளி சுவர்களில் நமது முன்னோர்கள் ஒளிப்படமும் அவர்களது தத்துவ பொன்மொழிகளும் பதிக்க, சங்கம் நிதி உதவி அளித்தது
05.05.2019 = பள்ளியின் 67-வது திடல்தட போட்டி விளையாட்டுக்கு சங்கம் பரிசு பொருட்கள் அன்பளிப்பு வழங்கியது
கடந்த 10 ஆண்டுகளாக முடங்கி கிடந்த தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பு பாலர் பள்ளியை சங்கம் தத்தெடுத்து, சீரமைப்பு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது
இப்படி, குறிப்பில் வராத எண்ணற்ற தமிழிய பணிகளை சங்க செயலவை உறுப்பினர் செய்து வருகிறார்கள்
சுமார் 1000 முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து, பள்ளி மேன்மைக்கும், பள்ளியில் பயிலும் தம்பி தங்கையர் கல்வி வளர்ச்சிக்கும், அப்பள்ளியில் பயின்ற அனைத்து முன்னாள் மாணவர்களுக்கென சொத்துடமை உருக்கம் காண்பதற்கும் தற்போதைய முன்னாள் மாணவர் சங்கம் பெருங்கனவோடு இலக்கை நோக்கி நகர்கிறது
சங்க செயலவை உறுப்பினர்கள் விபரம்
ஆலோசகர் 1 = திருமதி சி.சாந்தகுமாரி
ஆலோசகர் 2 = திரு அமுசு ஏகம்பரம்
தலைவர். = திரு க.பாலகிருசுணன்
துணை தலைவர். = திரு வீ.பாலமுருகன்
செயலாளர். = திருமதி க.லதா
துணை செயலாளர் = திருமதி சம்சியா பேகம்
பொருளாளர். = திரு ஆ.லெட்சுமணன்
செ. உறுப்பினர் 1. = திரு சீ.ராமமூர்த்தி
செ. உறுப்பினர் 2. = குமாரன் லிங்கேசுவரன்
செ. உருப்பினர் 3. = திரு கணேசன்
செ. உறுப்பினர் 4. = திரு முருகன்
செ. உறுப்பினர 5. = குமாரி க.கீதா
செ. உறுப்பினர 6. = திரு லெட்சுமணன்
கணக்காய்வாளர் 1 = திரு க.அழகுசுந்தரம்
கணக்காய்வாளர் 2 = திரு ச.பார்த்திபன்
22.06.2019 = சங்கத்தின் ஆண்டுக் கூட்டம்
இனி சங்க வரலாறு தொடரும்…
தொகுப்பு :
பாலமுருகன் வீராசாமி
– துணைத் தலைவர்
முன்னாள் மாணவர் சங்கம்
– செயலவை உறுப்பினர்
பெற்றோர் ஆசிரியர் சங்கம்
(மகாத்மா காந்தி கலாசாலை)