கடந்த 22 சூன், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக் கூட்டம் தாமான் துன் சம்பந்தனிலுள்ள சங்க அலுவலகத்தில் நடந்தேறியது.
கூட்ட தொடக்கப் பிராத்தனையும் தமிழ் வாழ்த்தையும் திரு வீ.பாலமுருகன் அவர்கள் பாட முறையே தொடங்கி, சங்க தலைவர் உயர்திரு க.பாலகிருசுணன் அவர்கள் தலைமையுரை, செயலாளர் திருமதி லதா அவர்கள் செயற்பாட்டின் தெளிவுரை மற்றும் பொருளாளர் திரு லெட்சுமணன் அவர்கள் கணக்கறிக்கை உட்பட ஆண்டறிக்கை விபரம் பகிரப்பட்டதுடன் புதிய செயலவை உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.
அதில் 4வது தடையாக சங்கத்தின் தலைவராக உயர்திரு பாலகிருசுணன் துணைத் தலைவராக திரு பாலமுருகன் ஏகமனதாக தேர்வு பெற்ற நிலையில் பெருளாளராக திரு லெட்சுமணன், செயலாளராக திருமதி லதா, துணைச் செயலாளராக திரு தென்னரசு மற்றும் செயலவை உறுப்பினர்களாக திரு சுந்தரம், திரு ராமமூர்த்தி, திரு கணேசன், திரு ரமேசு, திருமதி மாரியம்மாள் ஆகியோர் முறையே பங்கு பெற்றனர்.
1964ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் பல தலைமுறைகளை தாண்டி, 2014ஆம் ஆண்டிலிருந்து உயர்திரு பாலகிருசுணன், திரு பாலமுருகன் தலைமையில் பள்ளி மேன்மைக்கும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கும் மற்றும் தமிழிய விடயங்களுக்கும் உன்னத பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.