இடைநிலைப் பள்ளி மாணவிக்கு மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்கம்  மடிக்கணினி அன்பளிப்பு

சூன் 30, இடைநிலைப் பள்ளியில் பயிலும் மாணவி புவிசா கிருசுணன் அவர்களுக்கு (ம.கா.க) முன்னாள் மாணவர் சங்கம் மடிக்கணினி ஒன்றை அன்பளிப்பு வழங்கியது.

மகாத்மா காந்தி கலாசாலைய் முன்னாள் மாணவியான திருமதி ஏமா தேவியின் மகள் புவிசா அவர்களின் நீண்ட நாள் கனவும் தனது பாட பயிற்சிக்கு தேவையுமான மடிக்கணினியை முன்னாள் மாணவர் சங்கம்  வழங்கி உதவியது.

சங்க தலைவர் உயர்திரு பாலகிருசுணன் கருப்பையா பிள்ளை அவர்களின் பார்வைக்கு வந்த இந்த மாணவியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய சில நல்லுள்ளங்கள்  உதவியுடன் இக்கணினி வழங்கப்பட்டது.

தற்போது ஒரு மாணவிக்கு வழங்கியது போல் வறுமையில் சிறந்து விளங்கும் தமது தமிழர் சமூதாய மாணவர்களுக்கு படிப்படியே இயன்ற வரையில் உதவ சங்கம் முன்வரும் என்றார் துணை தலைவர் திரு பாலமுருகன் வீராசாமி.

மடிக்கணினி பெற்ற மாணவி புவிசா மற்றும் அவரின் தாயார் திருமதி ஏமா தேவி அவர்கள் சங்கத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், சங்க தலைவர் உயர்திரு க.பாலகிருசுணன், சதீசு தலைவர் திரு வீ.பாலமுருகன், பொருளாளர் திரு லெட்சுமணன், செயலாளர் திருமதி லதா, துணை செயலாளர் திரு கு.தென்னரசு, செயலவை உறுப்பினர்கள் திரு ராமமூர்த்தி, திரு கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.