மலேசியாவில் தமிழர்கள் நிம்மதி இழந்தோம்! மலேசிய ஏஜி தோமி தோமாசுக்கு ஒரு திறந்த மடல்.

மலேசியாவில் எல் டிடிஇ இல்லை ! தமிழின மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமே உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு எனும் பெயரில் இதுவரை 12 மலேசியத் தமிழர்கள் கைதாகியிருக்கின்றனர். இதனால் சமூக வலைத்தளத்தில் புலம்பெயர் தமிழர்களும் மலேசியத் தமிழர்களும் தங்களின் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் தெரிவித்து வருவதை தொடர்ந்து காண முடிகிறது.

ஈழத்தில் நடந்தேறிய இனப்படுகொலைக்கு நீதி கோரியும், படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு மனித நேய நினைவேந்தல் செலுத்தி வருவது உலகத் தமிழர்களின் உணர்வின் வெளிப்பாடாகும்.

ஆனால் இச்செயல்பாடுகளை தவறாக கருதி, புலிகள் அமைப்பை புதுப்பிக்க முயல்வதாக சித்தரிப்பது அவதூறான குற்றச்சாட்டாகும். மேலும் இது தொடர்பாக இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 தமிழர்களை SOSMAவின் கீழ் கைது செய்திருப்பது துளியும் ஏற்புடையதாக இல்லை.

ஆயினும் மலேசிய காவல்துறையின் விசாரனைக்கு ஒத்துழைக்க வேண்டியது நமது பொறுப்பு என்பதை உணர்ந்து, நாம் முறையாகவும் சரியாகவும் நம் தரப்பிலான நியாயத்தை முன் வைத்திட வேண்டும் என்பதே எம்மினச் சொந்தங்களிடம் எமது வேண்டுகோளாக இங்கு முன் வைக்கப்படுகிறது.

நமது வெளிப்பாடுகள் யாவும், விசாரனையின் முடிவில் சம்பந்தப்பட்ட 12 தமிழர்களும் குற்றவாளிகள் அல்ல என அவர்களை விடுவிக்க உதவ வேண்டும். 2009 ஈழப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

காலத்துக்கு ஒவ்வாத பழையப்படங்களை, தினித்த வீடியோக்களை காட்டி இபோது நடந்தது போல் மக்களை, புதிய அரசு, அமைச்சர்களை, அரசியல் தலைவர்களை முட்டாளாக்குவது நிறுத்தப்பட வேண்டும்.

விடுதலை புலிகளால் மலேசியாவில் இது வரை எந்த விபதீரமும் நடக்கவில்லை. நிதி உதவி என்பது மனிதாபிவித அறமேயன்றி தீவிரவாத அமைப்பு க்கு அல்ல என்பதை அதிகாரிகள் உணரவேண்டும். மலேசிய அரசு பல உலக நாடுகளுக்கு இத்தகு உதவி செய்துள்ளது. இலங்கைக்கும் 3.2 மில்லியன் உதவியை குறிப்பா வட மாநில தமிழ் மக்களுக்கு வழங்கியதை நன்றியுடன் பார்க்கிறோம்.

உலகம் முழுதும் 120 மில்லியன் தமிழர்கள் வாழ்ந்தும் இலங்கை சண்டையில் மூன்று லட்சம் தமிழர்களின் மரணத்தை உலகம் வேடிக்கைப் பார்த்து ஊமையானது. 2.5 மில்லியன் தமிழர்கள் வாழும் மலேசியாவும் நடு நிலைக்காத்தது.

உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும், வரலாற்று அறிவின்மையுடன் கூடிய அரசியல்தன புரிதலற்ற போக்கினாலும், கைதான 12 தமிழர்களுக்கும் நம் கருத்துகள் மூலம் பாதகத்தை உண்டு செய்வதாக அமைந்துவிடக்கூடாது என்பதை இங்கு வலியுறுத்திக் கொள்கிறோம்.

சம்பந்தப்பட்ட 12 பேருக்காக அறிவார்ந்தும், சட்டப்படியும் உதவ முன் வந்த அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், வழக்கறிஞர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றி கூறி, தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பை வழங்கி நம் உறவுகள் விடுவிக்கப்பட துணை நிற்குமாறு உரிமையுடம் கேட்டுக்கொள்கிறோம்.

ஜாமின் இல்லா சோக்ஷ்மா என்றாலும் 28 நாளுக்குப் பிறகு சட்ட நடவடிக்கைக்கு சட்டத்தில் வாய்ப்புண்டு என்பதால் பொறுத்து பார்ப்போம் என்பதே நம் நிலையாகும்.

எனினும் இன்று எல்டிடிஇ பற்றிய கைதும் ஊடக மிரட்டல்களும் கேட்டு பளித்துப்போன பழைய வரலாற்றுப்பிழை என்பதை ஏஜி அவர்களுக்கும் ஐஜிபிக்கும் உள்துறை அமைச்சுக்கும்,பிரதமருக்கும் தெரிவிப்பது நமது கடமையாகும்.

எல் டி டி இ இப்போது உலக நாடுகளில் இல்லை. அய்ரோப்பிய யூனியனும் எல்டிடி இயை தீவிரவாத இயக்கம் இல்லை என்பதாக அறிவித்து ஆண்டுகள் பல ஆயிற்று.

இங்கு ஏன் பழைய பட்டாசை எடுத்து குப்பையில் போட்டு கொழுத்தி, உப்பும் புகை மண்டல மோப்பம் புதுப்பித்தல் சாயம் ?

மலேசியாவில் தமிழர்கள் நிம்மதி இழந்தோம்!

Pon Rangan.pjk
Advisor Naam Tamilar Association