அரசியல் ஆளுமை இல்லா மலேசிய இந்திய கட்சித் தலைவர்கள் !

பொன்ரங்கன் –அமானா தவிர இரண்டு கட்சிகளும் பல்லினக் கட்சிகளாகும். ஆக PH, BN, PN நாட்டின் முதன்மை அரசியல் ஆளுமை கூட்டணி கட்சிகள் யாவும் பல்லின அரசியல் நடத்தும் கட்சிகளாகும்.

நாட்டில் இந்தியர்களை 9 இன பிரிவாக 2011ல் நஜிப் பிரித்தார். யாரும் கொக்கரிக்கவில்லை ஏன்?

நாட்டில் மஇகா மட்டும்தான் இந்தியன் கட்சியாக BN கூட்டணியிலிந்து இப்போ அரசியல் வசதிக்காக PNல் ஆடுகிறது. மற்றது யாவும் உறவுப்பாலத்தில் கீழ் நின்று வடிகால் ஒட்டுண்ணிகள்.

நாட்டில் சுமார் 3 ஆயிரம் இந்தியர் அரசு சார்ப்பு இயக்கங்கள் “மானியத்துக்கு” முந்தி நிற்கிறது.பணத்துக்கும், பதவிக்கும் விலை போன இனமாக அரசியலில் சோறம் போன ஊனமான இனம்.

பேச்சாற்றலில் பல வழிகளில் பொருளாதாரத்திலும், மொழியிலும், சமூக ரீதியாகவும் கட்சி பதவி வழி சமூகத்தை அடகு வைத்த வை பிகள் மத்தியில் மலேசியாவில் இந்தியன் அரசியலிலும் தோற்றுப்போய் விட்டோம்.

அரசியல் என்றால் கட்சிக்குள் நின்று குடும்பியை பிடித்தும் ஆட்டும் ஆளுமை பிரதி நிதிகள் வேண்டும்.

கரையானுக்கு வீட்டை கொழுத்திவிட்டு “அரசியல், அரசு சார்பற்ற” மறுபடியும் 3 ஆயிரத்தில் இன்னொன்றாக புது விடு கட்டக்கூடாது.

இயக்கமாக முழங்கிய இண்டராப் வேதமூர்த்தியை பார்த்து விட்டோம், மக்கள் சக்தி தனேந்திரனை பார்த்துவிட்டோம்,இந்தியர் நீதிக் கட்சியை பார்த்து விட்டோம்,மிராவை பார்த்து விட்டோம்!

இந்தியர்கள் நாட்டில் சுமார் 10 அரசியல் கட்சிகளில் 3 ஆயிரம் இயக்கங்களில் பிளவுப்பட்டு கிடக்கிறோம்.

அரசியல் கட்சிகளில், இயக்கங்களில் பணத்துக்கும், கூடைக்கும், குடைக்கும் பிரித்து, பிரிந்து குடும்பத்தை மட்டும் பார்க்க வளர்க்க பக்குவப்பட்டுவிட்ட நெறி இழந்த தலைவர்களை இணைக்க முடியாது.

யாரேனும் கன்னியவான்கள் ஓரிருவர் இருக்கலாம். ஆனால் ஆதிக்க அரசியலில் தோற்றுப்போய் தலை வெடித்து வெட்கி பரிதாபமாக இருப்பார்கள்.

நாட்டில் எந்த இயக்குமும் அரசியல் இராஜாங்கத்தில் சமூக பொருளாதாரத்தில் வெற்றிப்பெறவில்லை!

எதுதான் நம் பலவீனம் என்று ஆய்ந்தால் தலைவர்கள் சரியில்லை என்ற முதன்மை பதில்தான் வரும்.

இங்கே நூறு பேர் பொது உடமை, புத்தி மதிகள், தத்துவங்கள் எல்லாம் பேசலாம்.

இன்று அரசியல் பண சாசனத்தில் அறிவுக்கு வேலையில்லை.

நீ யார் என்பது முக்கியமல்ல! உன்னிடம் என்ன உளது என்ற கணிப்புதான் முக்கியம். மக்கள் பலம், உன் கட்சி அல்லது இயக்கத்தோடு வட்டத்துள் முடிந்து விடும்.

ஒரு வைபியாக வேண்டுமானால் கையில் ஒரு லட்சமாவது இருக்க வேண்டும் என்பது நிதர்சன, பரிச்சயமான உண்மை.

இபோதெல்லாம் வானமே எல்லை என்று மேகத்தை காட்டி மக்களை (ஏ)மாற்ற முடியாது.

வேண்டுமானால் பாமர அரசியல் அறிதலில்லா வசூல் ஆவிகளோடு தத்துவம் போதிக்கலாம். கனவும் காணலாம்.

அரசியல் அரங்கம் என்றால், அரசியல் மீட்சி, இன மீட்சி, மொழி மீட்சி,பொருளாதர மீட்சி, வணிக மீட்சிக்கான திட்டத்தை கட்சிக்குள் கொடுத்து , பேசி மீண்டு வரவேண்டும்.

என் அனுபவத்தில் தனி இயக்கம் பத்தாக உடைந்து ஊடான் தோலாகி நாறியதுதான் மிச்சம்.

எல்லாக் கட்சியையும் இணைக்க இயக்க வேண்டுமானால் இது இங்கே மேடையல்ல!

கட்சித்தலைவர்களைஉங்கள் அபார வரைத்திட்டம் வைத்து பேச வேண்டும்.

சொம்மா தமிழ் மொழி வசப்பில் காற்றில் கவிபாடி, பிறகு புதுக் கவிதைக்கு கோடு போட இது சீரியலாக முடியக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் பதிவிடுகிறேன்.

சமுதாயத்தில் பல தலைவர்கள்… சுழி போட்டு, வட்டம் போட்டு, பட்டமும் விட்டு நூலறுந்த திசைத்தெரியா கிழிந்த காகிதத்தை தேடிக்கொண்டு இருக்காமல்…

நல்லதொரு final Blue print proposition நீள நிற நீண்டகால திட்டத்தை கட்சிக்குள் கொடுக்க முன் வாருங்கள்.

துணிந்து துணை நிற்போம்.