குமரன் வேலு | 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம், மனித உரிமை, சுதந்திரம், கல்வி உரிமை, தாய்மொழி உரிமை பற்றிய சிந்தனைகள் கல்விகற்ற ஆங்கிலேயர்களிடம் மேலோங்கிய தருணம். தொழிலாளர் உரிமைகள் பேசும் கம்யூனிச சிந்தனைகளும் கிளர்ந்த நேரம்.
1750-களில் அடிமைகள்போல் கடத்திக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்க கறுப்பின ‘குந்தா கிந்தே’ கூட்டம் போல்லல்லாது, 1800-களில் இந்தியா உட்பட மற்ற நாடுகளிலிருந்து ஒப்பந்தக் கூலிகள் எனும் கணக்கில் கொண்டுவரப்பட்ட மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மதிக்க வேண்டியக் கடப்பாடு, மதத்தோடு சேர்த்து அதிகாரத்தையும் திணித்த ஆங்கிலேய அதிகார மையத்திடம் இருந்தது.
மலேசியாவில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்ட நோக்கம் தமிழ்மொழியைத் தமிழர்க்கு அல்லது இந்தியர்க்குக் கற்பிக்கத்தான். அதுபோலத்தான், மற்ற மொழிப்பள்ளிகளும். தெலுங்கு மொழிப்பள்ளிகள், தெலுங்கு மொழி பேசும் இனத்தார்க்கு என்று ஏற்படுத்தப்பட்டவை. இது வரலாறு.
தாய்மொழியை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்? வெறும் தொடர்புக் கொள்வதற்கு மட்டும் என்றால், தொடர்பு கொள்வது மட்டுமே நோக்கம் என்றால், தாய்மொழி வேண்டாமே. எந்த மொழியும் கற்றுக்கொண்டு தொடர்பு கொண்டு பேசலாமே!
நமது தாய்மொழியைக் கற்காமலே கூட பேசலாமே! ஓர் இனத்தின் அனைத்து பரிமாணத்தையும் கடத்தி, அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் கடப்பாடு தாய்மொழியுடையது.
இலக்கியம், இசை, கலை, பண்பாடு, விழுமியம், மரபு, நம்பிக்கை, சிந்தனை, மெய்யியல் என்று பல பரிமாணங்களைக் கொண்டது ஓர் இனம். எனவே, இனப்பற்றின் தோற்றுவாய் மொழி. அந்தந்த இனமும் தன் தாய்மொழியைக் கற்றுக்கொள்ளும் உரிமையை அன்றைய ஆங்கிலேயர் ஆட்சி மதித்தது.
ஓர் இடத்தில் பத்து மாணவர்கள் இருந்தால் பள்ளிக்கூடம் அமைக்கவேண்டும் என்றது அப்போதையச் சட்டம். 1950-களில் நாடு தழுவிய நிலையில் 880-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் உருவாயின. நம்மவர்கள் குறைவாக இருந்தும், கிளந்தானில் கூட தமிழ்ப்பள்ளிகள் உருவாயிற்று.
ஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை அடைந்து விட்டது. ஆனால், தாய்மொழிப்பள்ளிகள் தொடர்கின்றன. இது விடுதலை நிமித்தம் ஏற்படுத்தப்பட்ட சமூக ஒப்பந்தம் (social contract). எனவே, தாய்மொழிப்பள்ளிகள் தொடரவேண்டும்.
அரசாங்க ஆதரவில் இயங்கும் அல்லது நிதிஉதவி பெற்று, கல்வித் திட்டத்திற்கு உட்பட்டு இயங்கும் இருவகைப் பள்ளிகள், தேசியப்பள்ளிகளும் தேசிய வகைப்பள்ளிகளும்.
தேசியப் பள்ளிகள் (மலாய்மொழிப் பள்ளிகள்) மலேசிய இனத்தின் தேர்வாக இருக்க வேண்டும் என்று இன்றைய அரசாங்கம் வலியுறுத்துகிறது. அது மலாய்க்காரர்களுக்கு மட்டும் அல்ல, எல்லா இனங்களுக்குமானது என்கிறது.
தேசிய வகைப் பள்ளியென்று, தாய்மொழிப்பள்ளிகள் அழைக்கப்படுகின்றன. இங்கேயும் அதே கல்வித்திட்டம்தான். மலாய்மொழி, ஆங்கில மொழியும் கட்டாயம். இங்கேயும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இது ஓர் இனத்தின் தாய்மொழிப் பள்ளி என்ற அடையாளம் இருந்தாலும் ‘தேசியம்’ எல்லா இனங்களும் படிக்கலாம் என்று கூறுகிறது.
கேமரன் மலை போ 2 தமிழ்ப்பள்ளியில் நிறைய பழங்குடி மக்களின் குழந்தைகள் தமிழில் படிக்கின்றார்கள். மலாய்க் குழந்தைகளும் சீனக் குழந்தைகளும் கூட சிறிய எண்ணிக்கையில் தமிழ்ப்பள்ளியில் படிக்கின்றார்கள்.
தரம், தரம் என்று தமிழ்ப்பள்ளிமீது நம்பிக்கை இல்லாது வேறு பள்ளிக்கு ஓடிய ‘தரமான’ தமிழர்கள் உட்பட, எல்லோரும் தமிழ்ப்பள்ளிப் பக்கம் வருவார்கள் என்று இன்னும் நம்பிக்கை இருக்கிறது. அது நிறைவேறுவது, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் கையில்தான் பெரும்பங்கு இருக்கிறது.
தமிழ்ப்பள்ளியில் கல்வித்தரம் கிடுகிடுவென உயர்ந்து பன்னாட்டு பள்ளிகள்போல மாறினால், அச்செய்திகள் ஊடகங்களில் எதிரொலித்தால், தமிழ்ப்பள்ளி பக்கம் இந்தியர் அல்லாதவரும் ஓடிவரும் சாத்தியங்கள் நிரம்பவே இருக்கிறது.
இப்போதும், இனி எப்போதும் தமிழ்ப்பள்ளிகள் தமது தனித் தன்மையை இழந்துவிடாது நிலைக்க வேண்டும். தமிழைக் கற்றுக்கொள்ள விழைவோருக்கானப் பள்ளியாகவும் இருக்கலாம். ஆனால், இவை தமிழ்மொழிப் பேசுவோருக்கானப் பள்ளிகள் என்ற அடையாளம் நிலைப்பதென்பது தமிழர்கள் கையிலே இருக்கிறது. தம்மை தமிழர் என்று உணர்வார் முயற்சியிலே இருக்கிறது.
தமிழ்ப்பள்ளிக்கு என்று ஒரு வலிமை/ சிறப்பு இருக்கிறது. அதில் முதலீடு செய்தால் தமிழ்ப்பள்ளி ஈர்ப்பு மிகுந்ததாக மாறும்.
தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளை , பாலர் வகுப்புகளை அமைப்பது யாருக்கு முதல் பொறுப்பு ?
தமிழர்களில் 99% தன்னைச்சுற்றி தேவையிலா சிக்கல்களை தலையில் போட்டுக்கொண்டு, தான் பிறந்த இனத்துக்கும் மொழிக்கும் சேவை செய்யாமல் நன்றிக்கெட்டு கிடப்பது ஏன்?
MIED என்ற மஇகாவில் கல்வி நிறுவனம் ஒன்று உளது. இந்நிருவாகம் ஆண்டுக்கு 100 லட்சம் மாணவர்களுக்கு தலா 1,000/ மாக 100 லட்சம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கொடுத்தால் நாட்டில் தமிழ்ப்பள்ளிகளில் 100% மாணவர்களை சேர்த்து விடலாம். யாரு ம இ கா தலைவர் தான் ஸ்ரீ விக்ணேசுவரரிடம் பேச முடியும்? என்பதுதான் கேள்வி. ?
தமிழ்ப் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை வெற்றி பெற ஒரே வழிதான்.
மலாய் ,சீன பள்ளியில் பதிந்த பெற்றோர்களை அடையாளங்கண்டு வீடு வீடாய் போய் பேசுதல்.
அன்பு வேண்டுகோள் தமிழ் மொழி காக்க 2021 தமிழ்ப்பள்ளிக்கு மாணவர்களை சேர்ப்போம். ஒருவர் ஒரு விளம்பர பதாகை எழுதினால் குறைந்தது 1 மில்லியன் பதாகைகள் ஊக்கமளிக்கும். முதலில் 10 ஆயிரம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் செய்யட்டும்.
தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகளை , பாலர் வகுப்புகளை அமைப்பது யாருக்கு முதல் பொறுப்பு ?
தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி இலாகாவை பொறுத்தவரை இலாகா இயக்குநர்கள் என்ற பதவிதான் எனபதை மறுக்கமுடியாது.
பாலர் பள்ளியோ, பாலர் வகுப்புகளை அமைத்துக் கொடுப்பது த.ஆசிரியர்களுக்கு முதல் வேலையாக இருக்க வேண்டும்.
மஇகாவும் பொது இயக்கங்களும் 204 ஆண்டு வரலாறு கொண்டாடுவது மகிழ்ச்சிதான். ஆனால் அது வெறும் அரசியல்தனமாக இருக்கக்கூடாது.
நாட்டில் சுமார் 400 தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் பாலர் பள்ளிகள் இல்லை. தலைமை ஆசிரியர் இருக்கிறார், பெ.ஆ.சங்கம் உள்ளது. வாரியம் உள்ளது, முன்னாள் மாணவர் சங்கங்கள் உண்டு,பல ஆயிரம் மொழி இனம் சார்ந்த இயக்கங்கள் உண்டு. இப்படி நாட்டில் 10 ஆயிரம் தலைவர்கள் 10 ஆயிரம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். ஆக மொத்தம் 20 ஆயிரம் பொறுப்பாளர்கள் இருந்தும் நாட்டில் பாலர் பள்ளிகள் பற்றாக்குறை ஏன்?
அரசியல் வாதிகளை, அமைச்சர்களை , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை விட்டுத்தள்ளுவோம்.
பள்ளிகளில் ஒரு வகுப்பறையை தமிழ் பாலர் வகுப்புக்கு ஒதுக்குவதில் என்ன சிக்கல் இருக்க முடியும்? பள்ளிகளில் பழைய சாமான்கள், புததகங்கள்,நாட்காளி, மேஜைகளை “ஆடிட்” பேரில் வீணா அடுக்கி வைத்து வகுப்பறைகளை குப்பையாக்குவதில் என்ன நியாயம் இருக்க முடியும் என்று சிந்திக்க வேண்டும்.
தமிழ் அறவாரியம் கூட ஆசிரியர்களுக்கு நிருவாக தலைமைத்துவ பயிற்சி நடத்துகிறார்கள். மகிழ்ச்சிதான். ஆனால் அடிப்படைக்கே ஆபத்து.
பாலர் பள்ளி மேம்பாட்டுக்கு வரைவுத் திறன் நிருவாக பயிற்சியும் இணைக்க வேண்டும்.
மாணவர்கள் இல்லையென பள்ளிகளை அரசு மூடுகிறது. சமூகம் ரோட்டில் நின்று கத்துகிறது ஏன் ? நாளிதழ்கள் சோகத்தை காட்ட கூட்டம், கூட்டமா மக்களை படம் பிடித்து விற்பனையை சாதகமாக்கி மக்களையும்,அரசையும்,ஆசிரியர்களையும்முட்டாளாக்குகிறது.
முன்னறிவுதான் ஊடக தர்மம் என்பதை இவர்கள் புரிந்து செய்தியை விற்க வேண்டு. உழைக்கிற நோக்கம் உறுதியாகிவிட்டால் கெடுக்கிற நோக்கம் வராது.
பெற்றோர்களை மாணவர்களை கவர்ந்திழுக்க பாலர் பள்ளிகள் ஒவ்வொரு பள்ளிக்கும் முக்கியம் என்பதை ஏன் தலைமை ஆசிரியர்கள் உணர்ந்தும், மறுக்கிறார்கள் ? என்ன சிக்கலென்றும் சொல்ல முன்வருவதில்லை. “வற்றிப்போன நதியைப்பார்த்து கல்விக் கடவுளே கலங்கி நின்றால் மீன்கள் என்ன செய்யும்!”
பெற்றோர்களையும், மாணவர்களையும்.இயக்கத் தலைவர்களையும் எதிர்பார்த்து குறை சொல்லி திரியும் த ப தலைமையாசிரியர்கள் சமூக பொறுப்புடன் விழித்தெழ வேண்டும்.
முடியாதவர்கள் மலேசியத் தமிழ் அறவாரியத்திடம் திட்டவரைவுக்கு உதவிக்கு நாடலாம். அல்லது மாநில தமிழ் அறவாரிய தொடர்பு இயக்கங்களுடன் தொடர்பு கொள்ள விழைகிறேன்.
எது எப்படியாயினும் மா நில கல்வி இலாகா தமிழ்ப்பள்ளி அதிகாரிகளும் பாலர் பள்ளி பொறுப்பில் கவனம் செலுத்தினால் தமிழ் மொழியியல் தர்மம் தலை காக்கும்.
நன்றி.
பொன் ரங்கன்.
செ.உ. மலேசியத்தமிழ் அறவாரியம்.