‘தமிழர் எழுச்சி விழா’

உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில், சுங்கை சிப்புட் தொகுதி மஇகா மற்றும் பேராக் தோழமை அமைப்புகளின் ஆதரவோடு, மாபெரும் ‘தமிழர் எழுச்சி விழா’ நடைபெறவுள்ளது.

இவ்விழா எதிர்வரும் மே 2-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சுங்கை சிப்புட் மாநாட்டு மையத்தில், காலை 8 மணிக்குத் தொடங்கும்.

மொழி, இனம், சமயம், பண்பாடு மற்றும் அரசியல் மையக் கூறுகளுடன், தமிழர் பேரறிஞர்களின் எழுச்சி உரைகள், தமிழர் கலை பண்பாட்டு படைப்புகள் மற்றும் தமிழர் தற்காப்பு கலை வீர விளையாட்டுகளுடன் விழா முழங்கும்.

இலவசமாக நடைபெறும் இவ்விழாவிற்குப் பொதுமக்கள் பண்பாட்டு உடையில் கலந்து கொள்வது சிறப்பு.

அரசு மற்றும் சுகாதார அமைச்சின் கோரிக்கைகளுக்கு இணங்க, பாதுகாப்பு அம்சங்களுடன் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்புக்கு : வீ பாலமுருகன் 0143099379, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம்