சுற்றுலா பயணிகளின் வருகையில் திடீர் வீழ்ச்சி

கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக தெரிய வருகிறது.

ஜூலை மாதத்தில், 47,293 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர், இந்த மாதத்தில், இந்த எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்து 37,760 ஆக உள்ளது.

இந்த மாத இறுதி வரை 496 420 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கு

இவ்வருடம் இலங்கைக்கு ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு, அதனை நிறைவு செய்வதற்கு இன்னும் நான்கு மாதங்களில் 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர வேண்டும்.

இந்த மாதத்தில் இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

 

 

-ibc