ஆசியா வரலாற்றிலேயே நெடுநாள் அரசியல் கைதியாக 32 வருடங்கள் இருந்த சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சியா தை போ (70) என்பவர் யார்? எதற்காக இந்த தண்டனை?
1963-ல் பல அரசியல் போராளிகள் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர். அப்படி தடுத்துவைக்கபட்டவர்களில் ஒருவருக்கு மாற்றாக தேர்தலில் நின்ற அவர் சோசலிச முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளராக வெற்றியும் பெற்றார். சிங்கப்பூர் மலேசியாவில் அங்கமாக இருந்த 1963 முதல் 1965 வரை அவர் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார் இந்த நன்யாங் பல்கலைக்கழகத்தின் சிறந்த எடுத்துக்காட்டு மாணவர்.
பேச்சு சுதந்திரத்திலும் நீதியின் மீதும் முழு நம்பிக்கையாளரான அவரை, 24 ஏப்ரல் 1966-ல் மலேசிய தொழிலாளர் கட்சியின் பேராக் தொகுதியில் ஆற்றிய உணர்ச்சிமிகு அரசியல் பேச்சைத் தொடர்ந்து மலேசியாவில் நுழையவும் தடைவிதிக்கப்பட்டார்.
29 அக்டோபர் 1966-ல் சிங்கபூர் அரசு அவரை எவ்வித முறையான விசாரணைக்கும் உட்படுத்தாத இசா (ISA) சட்டத்தில் கைது செய்தது. மே 1989-ல் செந்தோசா தீவில் 9 வருடத்திற்கு வீட்டுக் காவலில் சிங்கப்பூர் அரசு தடுத்து வைத்தது. 32 வருடங்கள் பல்வேறு தடுப்புக் காவலில் இருந்த அவரை 27 நவம்பர் 1998-ல் எவ்வித நொபந்தனையுமில்லாது சிங்கப்பூர் அரசு விடுவித்தது. இருப்பினும் அவர் கொள்கை பற்றாளர் ஆவார். விடுவிக்கப்பட்டதுமே அவர இசா சட்டத்தைக் கண்டித்து அறிக்கை விடுத்தார். பிறகு நெதர்லாந்து சென்று ஹேக் சமூகவியல் கல்லூரியில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை முடித்தார்.
32 வருடங்களாக அநியாயமாகவும் எவ்வித விசாரணையின்றியும் முறையற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவரை கெளரவிக்கும் வகையில் அவருக்கு, LLG கலாச்சார மேம்பாட்டு மையம் உரிமைக்கும் நீதிக்கும் யாருக்கும் அஞ்சாமலும் விலைபோகாமலும் போராடியவர்களு வழங்கப்படும் உயரிய LLG விருது வழங்கப்பட்டுள்ளது. (1988-ல் நிறுவுப்பட்ட இவ்விருது மலேசிய சீன சமூகத்தின் மிக உயர்ந்த விருதாக கருதப்படுகிறது. இவ்விருது சீனக்கல்விக்கு அயராது உழைத்தவர்களுக்கும் திரு.லிம் லியன் கியோக் போன்று சம உரிமைக்கும் நீதிக்கும் யாருக்கும் அஞ்சாமலும் விலைபோகாமலும் போராடியவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
50 மற்றும் 60-களில் டோங் சியாவ் சோங் அமைப்பின் வழி சீனக்கல்விக்காகப் போராடிய திரு லிம் லியன் கியோக்கின் குடியுரிமை பறிக்கப்பட்டது. சீன இடைநிலைப்பள்ளிகளை ஆங்கில மொழி கல்விக்காக மாற்றிய 1961 ரஹமான் தாலிப் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததால் அவரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. 1985-ல் மறைந்த அவரை ‘ மலேசிய சீனரின் ஆன்மா’ என புகழாரம் சூட்டப்பட்டார். திரு. லிம் லியன் கியோக்கை நினைவு கூறும் பொருட்டு அவ்வருடமே LLG கலாச்சார மேம்பாட்டு மையம் நிறுவப்பட்டது).
-யுவராஜன்