அம்னோவை சமாளிக்க முகைதினின் புதிய பாசிசம்

பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின் அனைத்து மலாய் மற்றும் பூமிபுத்ரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்காக ஒரு குடை அமைப்பை உருவாக்க முன்மொழிந்துள்ளார். அம்னோ, பெர்சத்து, பாஸ் போன்ற அரசியல் கட்சிகளுக்கு அப்பால் இந்த அமைப்பை உருவாக்குவது  மலாய் – பூமிபுத்ரா நிகழ்ச்சி நிரலுக்கு அரசியல் சாயத்தை இன்னும் ஆழமாக விதைக்கும் பாசிச நோக்கமாகும்.

.ஒரு பொதுவான காரணத்தின் கீழ் இந்த அமைப்புகளை ஒன்றிணைப்பதன் மூலம், மலேசியா முழுவதும் பூமிபுத்ரா தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டை மிகவும் திறம்பட ஊக்குவிக்க முடியும் என்று அவர் பெர்சத்து பொதுக்குழுவில் கொள்கை உரையில் கூறியிருந்தார்னார்.

16வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் பல மலாய் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெர்சத்துவில் சேர திட்டமிட்டுள்ளதாகவும், மலேசியாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூகத் தலைவர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட “ககாசன் பெர்டமையன் நேஷனல்” என்ற முன்முயற்சியையும் முகைதின் முன்மொழிந்தார்.

“இந்த ஒன்றுபட்ட பலத்துடன், பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைகளில் மலேசியாவை வலுவாகவும், கண்ணியமாகவும், போட்டித்தன்மையுடனும் மீண்டும் உருவாக்க முடியும் என்று பெர்சத்து டு நம்புகிறார்,” என்று அவர் கூறினார்.

சமூக ஆர்வலர்கள், மதத் தலைவர்கள், கலைஞர்கள், கலாச்சார பிரமுகர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்களுடன் ஒரு வட்டமேசை அமர்வு ஒன்றை ஏற்பாடு செய்து தீர்வுகளை உருவாக்க பெர்சத்து திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பல்லின மலேசியாவை ஒட்டு மொத்தமாக மலாய்- இஸ்லாம் என்ற ஒரு பாசிச ஒருங்கிணைபை முகைதின் கையிலெடுத்து உள்ளார். ஆனால், முகைதினால் செய்ய இயலாது என்பதும் அவருக்கு தெரியும்.

அம்னோவின் ஆதரவோடு இயங்கும் தேசிய முன்னணி, சபா, சரவாக் கட்சிகளுடன் இணந்து முகைதினின் முயற்சியை தகர்க்கும் என்பதும் முகைதின் அறிவார்.

அப்படி என்றால் முகைதினின் போக்கு, இன மதவாத அரசியலுக்கு தூபம் போட்டு நாட்டின் நீண்ட கால கனவான பல்லின பன்மொழி கொள்கையை அழிக்கவும் ஒழிக்கவும் போடும் திட்டமாகத்தான் அமையும்.