அண்மையில் 44 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குவாங் கம்போங் பூங்ஙா ராயா குடியிருப்புவாசிகள் சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கூட்டுறவு கழகம் தங்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளதாகவும் தங்களுக்கு தரைவீடுகள் தான் வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்த செய்தி டிவி 3 தொலைகாட்சியிலும் தமிழ் நாளிதழ்களிலும் வெயாகியுள்ளன.
இங்கு கடைசியாக தேசிய முன்னணி அரசாங்க ஆட்சியில் 1980 ஆண்டு மலிவு விலை வீடுகள் கட்டப்பட்டன. தற்பொழுது மக்கள் கூட்டணி அரசாங்கம் 32 ஆண்டுகளுக்குப்பின் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கூட்டுறவுக்கழகத்தின் வழி இங்குள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக மிகவும் குறைந்த விலையில் ரி.ம.35,000.00விலை மதிக்கத்தக்க வீடுகள் கட்டி விற்பனை செய்கின்றது. இந்த 10 ஏக்கர் நிலத்தினை தேசிய முன்னணி அரசாங்கம் அவர்களுக்கு வாங்கித்தரவில்லை 08.03.2008 நாட்டின் 12வது தேர்தலுக்குப்பின் மக்கள் கூட்டணி அரசாங்க ஆட்சியில் வாங்கியதாகும்.
பி.கே.என்.எஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கூட்டுறவு கழகம் கம்போங் பூங்ஙா ராயா குடியிருப்புவாசிகளை எமாற்றவிட்டதாக பதாகைகளை ஏந்தி பொய்யான தகவலை சிலர் ஆர்பாட்டம் செய்து நாளிதழ்களில் செய்தி வெளியிட்டுள்ளனர் என்பது வருந்ததக்கது. தங்களிடம் உள்ள ஆவணங்களில் 09/01/2009 நாள் சிலாங்கூர் மாநில அரசுக்கு அனுப்பிய கடித்தில் குறிப்பிட்டது போல் இங்கு குறைந்த வருமானம் பெறுவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. ஆகையால் தன்னை கம்போங் பூங்ஙா ராயா குடியிருப்புவாசிகளின் பிரதிநிதி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் நபர் கூறியுள்ளது தவறான தகவலாகும். அந்த நபர் தனது தேசிய முன்னணி சகாக்களுடன் பொது விவாததிற்கு வந்தால் மக்கள் கூட்டணியினர் இதற்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளனர்.
இந்த அடுக்குமாடி வீடுகளை ரி.ம,2,500.00 கீழ் வருமானம் பெறும் நபர்கள் வாங்க தகுதியானவர்கள். இந்த வீடுகுடிகளை வாங்குவதற்கு சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கூட்டுறவு கழகம் புறம்போக்கு வீடுகளில் குடியிருப்பவர்களுக்கே முதல் சலுகை வழங்குகின்றது. இது நாள் வரை இந்த வீடுகள் வாங்க பதிவு செய்தவர்களில் வெறும் 19 பேர் மட்டுமே தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர் என்று சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கூட்டுறவு கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இங்கு 180 அடுக்குமாடி வீடுகள் விற்பனைக்கு உள்ளன. இந்த வீடுகள் வாங்க தகுதியானவர்களின் எண்ணிக்கை இன்னும் பாதியைக்கூட தாண்டவில்லை..மிகவும் குறைந்த விலையில் விற்கப்படும் இந்த வீடுகளை வாங்கத் தகுதியற்றவர்கள் இதனைவிட அதிக கட்டுமான செலவில் விற்கப்படும் தரைவீடுகளை எப்படி வாங்க முடியும்?
தற்பொழுது கம்போங் பூங்ஙா ராயா குடியிருப்புவாசிகள் மக்கள் கூட்டணியின் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வில்லியம் லியோங்கிடமும். ம.இ.கா. தேசிய இளைஞர் பகுதித்தலைவர் திரு.தி.மோகனிடமும் வெறும் கோரிக்கை மனுவை மட்டுமே கொடுத்துள்ளனர்.
அப்படி இதனை நிறைவேற்ற வேண்டும் என்றால் இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும்.ஆகையால் இங்குள்ளவர்கள் மீது அக்கறையுள்ளவன் என்பதால் தகுதி வாய்ந்தவர்கள் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படும் இந்த வீடுகளை இன்னும் காலம் தாழ்த்தாமல் விரைவில் வாங்கிகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மக்கள் வசதியாக பங்களா வீடுகளில் குடியிருக்க எண்ணுவதில் தவறில்லை ஆனால் அதற்கு தகுதியும் வேண்டும். முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை வைப்பதைப்போன்ற ஆசை பெயர் குறிப்பிடாமல் மொட்டை அறிக்கை கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு வரக்கூடாது.ஆகையால் மலிவான விளம்பரம் தேடிக்கொண்டு குறைந்த வருமானம் பெறும் மக்கள் வாங்க நினைக்கும் இந்த வீடுகள் வாங்குவதற்கு தடையாக இருக்க வேண்டாம் என்று மலிவான விளம்பரம் தேடும் அரசியல்வாதிகளை சிறீ குவாங் சனநாயக செயல் கட்சியின் தலைவர் என்ற வகையிலும் இங்கு ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர் என்பதாலும் மேலும் இங்குள்ள மக்களின் மேல் மிகுந்த அக்கறையுள்ளவன் என்பதாலும் கேட்டுக்கொள்கின்றேன்.
-திரு.இன்பச்சுடர் சந்திரன், குவாங் கம்போங்