நம்பிக்கை வைத்தோம்; அவன் ஆப்பு வைத்தான்!

பொருளாதார அடிப்படையில் சில முக்கிய கூறுகளை கண்ணோட்டமிட்டால் இன்னும் இந்தியர்கள் வஞ்சிக்கப்பட்ட நிலைமை தெள்ளத்தெளிவாக புலப்படும்.

இந்த நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஐந்தாண்டு திட்டங்கள் 1961 -ல் தொடங்கி 2015 வரை பத்து திட்டங்கள் பூர்த்தியாக உள்ளது. இந்த திட்டங்களில் இந்தியர்களுக்கு எத்தனை சதவீதம் ஒதுக்கினார்கள், உண்மையில் எழுத்துப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட மேம்பாட்டு அடைவுகள் ஒவ்வொரு திட்டகாலத்தில் எதிர்பார்த்த பலனை இந்தியர்கள் அனுபவித்தார்களா என்பதனை சீர்தூக்கி பார்க்க கடமைப்பட்டுள்ளோம் !

உண்மையில் இதுவரை புள்ளிவிவரத்துடன் எவரும் தைரியமாக பதிலை கொடுக்க முடியாது. காரணம் இந்த இந்தியனை பிரதிநிதித்த கட்சி தலைமைத்துவத்தில் அங்கம் வகித்த ஆசாமிகளுக்கு இந்த விவரம் புரியாது. இவர்களுக்கு இது அப்பாற்பட்ட விசயமாகும்.

நாடு பீடுநடை போட்டு முன்னேறிய காலகட்டத்தில் கோட்டைவிட்டு நாம் தள்ளாடிக்கொண்டு வருகிறோம் அடுத்தவன் நன்றாக வாழ! இது எப்படி நடந்தது? நம்பிக்கை வைத்தோம் ஒருவனை நம்பி அவன் வைத்தான் நமக்கு ஆப்பு !

துன் மகாதிர் காலத்தில் நாம் உரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கவேண்டும் மாறாக இருந்த எல்லாவற்றையும் இழந்தோம் ! கிராமப்புறங்கள் நகரமாகின ஆனால், நம் இனம் தோட்டப் புறங்கங்களில் இருந்து இடம் பெயர்ந்து நகர்ப்புறங்களுக்கு சென்று சின்னபின்னமானது.

காலவோட்டத்தில் ஒரு சாராரே எதிர் நீச்சல் போட்டு முன்னுக்கு வரமுடிந்தது. நல்ல சூழ்நிலை, வசதி இன்மை, வேலைவாய்ப்பு, படிக்க வசதி, நல்ல வழிகாட்டி இன்மை போன்றன இந்திய சமுதாய இன்றைய கால நிலைமைக்கு தள்ளப்பட்டது. அரசாங்கம் திட்டங்களை போடலாம். அமலாக்கம் யார் கையில் உள்ளது. அம்னோ மற்றும் ஒட்டுமொத்த மலாய்க்கார அரசாங்க ஊழியர்களின் கையில். எப்படி முன்னேறவிடுவார்கள் இந்த துன் மகாதிர் இருக்க.

காலத்தில் நான்கு மேம்பாட்டு திட்டங்கள் அமலாக்கம் கண்டது. இந்த பொன்னான காலத்தில் தான் நாம் இழந்தோம். குறிப்பாக சொத்துடைமை, வேலைவாய்ப்பு, தனிமனித மரியாதை, மேற்கல்வி வசதி, அடிப்படை உரிமை, தோட்டங்கள் மாடி கோபுரங்களாக மாறின. தமிழன் விரட்டியடிக்கப்பட்டான். தமிழ் பள்ளிகள் பிள்ளைகள் இல்லா காரணத்தினால் மூடுவிழா கண்டன.

இன்னும் இந்த நிலைமை நீடிக்காமல் இருக்க நமக்கு வலிமை இருப்பதை நாம் நன்குஅறிவோம். தாய் மொழிக்கல்வி மேல் நமக்கு தீராத மோகம் வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் தமிழ் பள்ளிக்கு அவர் தம் பிள்ளைகளை அனுப்பவேண்டும். தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை கூடும். ஆசிரியர்கள் கூடுதலாக வேலைக்கு நியமிக்கப்படுவார்கள். ஆக சமுதாயமே பயனடையும். நம்மவர்கள் பதவி ஓய்வு பெற்று நல்ல படியாக வாழ்ந்தால் நாம் செலுத்திய வரிக்கு நியாயம் கிடைக்கும் அல்லவா !

நாம் இனி மேலும் ஊதாரி போன்றில்லாமல் நன்கு சிந்தித்து செயல்பட முனையவேண்டும். குறிப்பாக நம் முன்னேற்றத்தை தடுத்த துரோகிகளை அடையாளம் காணுதல், தேர்தல் காச்சலுக்கு செவி சாய்க்காமல் ( அரிசி, பருப்பு, மீஹுன், மைலோ, ஐம்பது வெள்ளிக்காசு, இன்றுபோய் நாளை வரை தூங்கிவிழ பஸ் ஓட்டம், மாகாணம் விட்டு மாகா மரணம், குளறுபடி, பசி கொடுமை) சொந்த புத்தியோடு செயல்படுதல், சமூக துரோகிகளின் சகவாசத்தை புறக்கணித்தல். நல்ல சிந்தனையாலர்களின் சொல் பணிந்து நடத்தல் போன்றன நம்மை நல வெளிப்படுத்தும்.

வரும் தேர்தல் முடிந்து நலமாய் வாழ இந்த உத்தியை நாம் கடை பிடித்தோமாயின் வெற்றி நமக்கே. எப்படி இது சாத்தியமாகும். நம்மிடம் இருப்பது ஒன்று நாட்டுக்கு உழைத்தவர்கள் நாம்!

நாம் ஐம்பது ஆண்டுகள் நம்பிக்கைவைத்து போட்ட ஓட்டு என்ன செய்தது நமக்கு. கோவிலை உடைத்தது, தமிழ் பள்ளிகளை மூடியது, வேலை இல்லாமல் செய்தது, சொத்துடைமையை சீரழித்தது, நம்மை மானபங்கம் செய்தது, தமிழ் பெண்மணியை தூக்கிலிட சொல்வது, இந்தியர்களை வாய்க்கு வந்தபடியும் எழுத்து பூர்வமாக வசைபாடுவது ( பள்ளிக்கு போனால் பறையா , போலிசுக்குபோனால் பூநோடீறி, வேலைக்கு போனால் லோயார் பூரோ, அரசியல் பேசினால் கூராங் ஆஜார் , பாராளுமன்றம் போனால் பாலே நெகேரி ) இது எல்லாம் சாம்பலாகிட ஒரே ஒரு ஓட்டு போதுமே…

அது இந்த தடவை நம்மை வலைக்கப்பார்கிறது. இப்போ நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. மலாய் இனம் மூன்று பிரிவாகிவிட்டது, சீனர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். இண்டோலோக், மாசிச உட்பூசல் காரணமாம்.

அடுத்து இந்தியர்கள் வழக்கம்போல் செய்வதை நிறுத்திக்கொண்டு நம் வழி தனி வழி என்று மனதில் உறுதி பூண்டு வரும் பதின்மூன்றாம் பொதுத்தேர்தலில் கிழி கிழி என  கிழிக்க வேண்டும் செங்கோல் ஆட்சியாளர்களை.

நாடும் நாமும் வாழ. பாஸ் மார்க் போடுவது நம் கடமை போடுவோமா இந்த தடவை. நமக்கு நல்ல சேவை செய்து வருபவர்களுக்கு நம்மை மதிப்பவர்களுக்கு நம் வருங்காலத்தை குறிகிய காலத்தில் நிலைநாட்டியவர்களை இனம்கண்டு செய்வோம் நம் கடைமையை.

-Maruthan