முருகேசன் அவர்களே… ஏன் ஹிண்ட்ராப் நிபந்தனை வைக்கக் கூடாது? சட்ட விரோதமான அமைப்பு என்று அறிவிக்கப் பட்ட ஹிண்ட்ராப் என்ற அமைப்பை திடீரென்று சந்திக்கலாம் என்பதன் உள்நோக்கம் என்ன? இந்தியனின் ஒட்டு தேவை என்பதினால் தானே.
தமிழனே உனக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் ( இருந்திருந்தால்தான் நாம் எப்போதே மாறியிருப்போமே ). யோசியுங்கள் எதற்காக அந்த ஐந்து பேரும் உள்நாட்டு சட்டத்தின் கீழ் சிறை சென்றனர்? டத்தோ பட்டம் வாங்கவா ? தன் குடும்பத்திற்காகவா ? எல்லாம் தமிழனுக்காத்தானே ? அதனால் உங்களுக்கு நன்மை கிடைத்ததா இல்லையா? உங்கள் பிள்ளைகளில் ஒருவன் குகனாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
கடந்த 54 வருடம் தாங்கள் தான் கிழிக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் மஇகா வினர் செய்யாததை செய்ய வைத்தது அவர்கள்தான். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் அது என்னையா தமிழனுக்கு மட்டும் எதிர்க்கட்சிக்கு ஒட்டு போட பயம். யாருக்கும் இல்லாத பயம்?
ஐயோ தமிழனே நீதான் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறாய். 6 1/2 கோடி தமிழன் வாழும் தமிழ் நாட்டிலும் அப்படித்தான். காரணம் தமிழனை யாரும் எப்படியும் ஏமாற்றலாம். 16 இலட்சம் தமிழன் வாழும் மலேசியாவிலும் அதே நிலைதான். மற்ற இனத்தவன் நம்மை கண்டு சிரிக்கிறானே அது உங்களுக்கு தெரிய வில்லையா? நீங்கள் பயந்தது போதும். புரிந்து கொள்.
இதோ இந்து சமயத்தை காப்பதாக சொல்லிக் கொள்ளும் நடராசாவும் கமிட்டியும் தீபாவளியை பத்து மலையில் கொண்டாடப் போகிறார்களாம். பலே.. பலே… தமிழனை இப்படியும் ஏமாற்றலாம். வேற எவனாவது இப்படி தரம் தாழ்ந்த முறையில் தன சமயத்தை அரசியலுக்காக விலை பேசுவானா? தமிழன் செய்கிறான். நானோ என் குடும்பமோ போக மாட்டோம் காரணம் எனக்கு இருக்கிறது வெட்கம் மானம் ரோசம். தமிழனே போதும் 54 வருடங்கள். இனியும் நாம் திருந்தா விட்டால் நம் பிள்ளைகளே நம்மை மதிக்க மாட்டார்கள். இனி வரும் சமுதாயமும் நம்மை மன்னிக்காது.
அன்வாருக்கு ஒட்டு போட்டால் நமக்கு என்ன தருவார் என்ற கேள்விக்கு அவர் ஆட்சிக்கு வந்தால்தான் பதில் கிடைக்கும். 54 வருடம் வாய்ப்பு கொடுத்து நீங்கள் இது நாள் வரை உங்களையே ஏமாற்ற விட்டேர்களே. ஒரு வாய்ப்பை இம்முறை அன்வாருக்கு கொடுப்போம். ஐந்து வருடம் கழித்து மதிப்பீடு செய்வோம். சகோதர சகோதரிகளே. நான் யாரென்பது முக்கியமல்ல. இது என்னுடைய ஆதங்கம். தயவு செய்து யோசியுங்கள்….
-கெந்துட் 1மலேசியா
———————————————————————————————————————————————————————
உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.
எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] / தொலைநகல் : 03-26918272