ஹிண்ட்ராப் அழிக்க நஜிப்பும் அம்னோ தலைவர்களும் தேசிய முன்னணியும், துரோகிகளுக்கு பணமும் அரசியல் கட்சி மற்றும் டத்தோ என்ற பட்டமும் கொடுத்தும் ஹிண்ட்ராப் உடைக்கமுடியவில்லை அதேபோல் அன்வார் இப்ராகிம், கிட் சியாங் மற்ற மக்கள் கூட்டணி தலைவர்களும் பல ஹிண்ட்ராப் தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து “மலேசிய இந்தியர் குரல்” என்ற அரசு சார இயக்கத்தை அறிமுகப்படுத்தியும் தோல்வி மேல் தோல்வி கண்டனர். அடுத்து இவர்கள் இண்ட்ராப் 2.0 என்ற இயக்கத்தையும் அறிமுகப்படுத்தியும் தோல்விதான் கண்டனர். அசல் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி போராட்ட இயக்கத்திக்கு பலம் கூடியதே அல்லாமல் குறையவே இல்லை. இப்பொழுது மக்கள் கூட்டணியினரும் தேசிய முன்னணியும் ஹிண்ட்ராப் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முன் வந்துள்ளது.
வேதமூர்த்தி இதுவரை பாஸ் தலைவர்களுடனும் அன்வார் இப்ராஹிமுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பாஸ் தலைவர்கள் அடுத்த பொது தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்று புட்ரஜெயாவை கைப்பற்றினால் மலேசிய இந்தியர்களின் முக்கிய பிரச்சனைகளை தீர்ப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர். ஆனால் அன்வார் இப்ராகிம் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் கொடுக்கவே இல்லை. இதனால் ஹிண்ட்ராப் மறுபடியும் அவரை சந்திக்க வேண்டி உள்ளது.
முன்பு ஹிண்ட்ராப், மலேசிய இந்தியர்களின் பேதாரவோடு நான்கு மாநிலங்களை கைப்பற்றிய மக்கள் கூட்டணி முன்பு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதனால் அதிக நன்மைகள் பெறுவோர் சீனர்களும் மலாய்காரர்களும் தான். உதாரணத்துக்கு…. இந்திய கிராம தலைவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 450.00 ரிங்கிட்டும் சீன, மலாய் கிராம தலைவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 8,000.00 முதல் 10,000.00 கொடுக்கப்படுவதாக பல ஆங்கில இணைய இதழ்களில் அஸ்மின் அலி, சுரேந்திரன் போன்ற தலைவர்களை சந்தித்த சிலாங்கூர் பிகேஆர் இந்திய தலைவர்கள் இதுபோல் பல வேறுபாடுகளையும் சொல்லியும் மாநில அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.
நான் இவற்றை ஆங்கில இணையத்தள இதழில் கருத்து தெரிவத்த போது ஒரு சீன அன்பர் “சீன, மலாய் கிராம தலைவர்களுக்கு கொடுக்கப்படும் அதே தொகை இந்தியர்களுக்கு அலவன்சாக வேண்டுமானால்; இந்தியர்கள் எல்லோரும் இந்தியாவுக்கு திரும்பி செல்லுங்கள்” என்று கருத்து தெரிவித்தார்.
வரும் பொது தேர்தலில் ஹிண்ட்ராப் தலைவர்கள் கட்டாயம் மக்கள் கூட்டணியிடம் மலேசிய இந்தியர்களின் முக்கிய பிரச்சனைகளை தீர்பதாக பாஸ் தலைவர்கள் கொடுத்த மாதிரி உத்தரவாதம் கட்டாயம் பெறவேண்டும்.
வரும் பொது தேர்தலில் தோல்வி இருக்க பிரதமர் நஜிப், அம்னோ தலைவர்கள் தாங்கள் தடை செய்த இயக்கத்திடம் நேரில் பேசி பொது தேர்தலில் வெற்றி கனியை பறித்து பின் இதே ஹிண்ட்ராப் தலைவர்களை நாட்டின் விரோதிகள் என்றும் கூறுவார். அரசியலில் நம்ப முடியாதேல்லாம் நடக்கும்.
தேசிய முன்னணிக்கு 55 வருடங்கள் கொடுத்தது போதுமானது. ஹிண்ட்ராப், இந்திய சமுதாயம் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டிய காலம் இது. ஒன்று படுவோம். வெற்றி கனி நமக்கே உரித்தாகுக.
–Karanraj Sathianathan
———————————————————————————————————————————————————————
உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.
எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] / தொலைநகல் : 03-26918272