வானொலிகளில் காலையில் குத்துப்பாட்டு : நமக்கு இது தேவையானதா?

radio_bordcastநம் நாட்டில் வானொலிச் சேவையினை வழங்கி வரும் டி.எச்.ஆர். ராகா மற்றும் மின்னல் எஃப்.எம், இரண்டும் தமது ஒலிபரப்பின் வழி நமது சமுதாயத்திற்கு சிறப்பான பங்கினை ஆற்றி வருவது தெளிவான ஒரு செயலாகும். எனினும், எமக்கு தெரிந்த சில நியாயங்களைப் பகிரவும், தவறுகளை சுட்டிக்காட்டவும் மக்களாகிய நமக்கு உரிமை உண்டு. இதற்காகவே இவ்வங்கத்தைப் பயன்படுத்துகின்றேன்.

நம் நாட்டு இரு தமிழ் வானொலிகளிலும் அண்மைக் காலமாக காலையில் ஒலிபரப்பப்படும் பாடல்களை காது கொடுத்து கேட்க முடியவில்லை. எம்மாதிரியான பாடல்கள் இக்காலை வேளையில் ஒலிபரப்பப்படுகின்றன என்பதை வானொலி கேட்கும் அனைவரும் நன்கு அறிவார்கள்.

புத்துணர்ச்சியுடனான காலைப் பொழுதையே அனவைரும் எதிர்ப்பார்க்கும் நிலையில், முழுக்க காதல் பாடல்களையும்; காலத்திற்கு ஒவ்வாத குத்துப் பாடல்களையும் காலையில் ஒலிபரப்புவது சிறந்த செயலா, என்பதை வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்பாடல்களினால் மக்களின் மனம் சஞ்சலப்பட்டு மிகவும் ஆழமாக பாதிக்கப்படுகின்றது. சிந்தனை மாற்றங்கள் அதிகரிக்கப்படுகின்றன. ஆக்ககரமாக இருப்பின் பாதகமில்லை. ஆனால், எல்லாமே அழிவுக்கு வித்திடுபவையாக இருக்கின்றன.

இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?

தமிழ்த் திரைப்படங்களிலுள்ள கொள்கைப் பாடல்களை ஒலிபரப்பலாம்; சிறப்புச் சொற்பொழிவுகளை ஒலிபரப்பலாம், பொன்மொழிகள், செய்யுள், திருக்குறள், நன்னெறி போன்றவற்றைக் கருத்தில் கொள்ளும் பாடல்கள், கவிதைகள் என மக்களுக்கு நன்மைத் தரும் விசயங்களை ஒலிபரப்பலாம். இச்செயல்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு  நீங்கள் செய்யும் சேவையாக மாறிவிடும்.

விடிகின்ற காலைப் பொழுதுகளில் மக்களின் இதயங்களின்  நல்ல எண்ணங்கள் ஊற்றெடுக்க அது காரணமாக அமையும்.

அதேநேரத்தில், நல்ல குத்துப்பாடல்களையும் , காதல்பாடல்களையும் நாம் ஒதுக்கி விட வில்லை. அவை காலைப் பொழுதை தவிர்த்த ஏனைய நேரங்களில் ஒலிபரப்பலாமே!

வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இதனை செய்வார்களா… காத்திருந்து பார்ப்போம்!

அன்புடன்
கணேசன் ஆறுமுகம்

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272