இந்திய மலேசியர்கள் மற்றும் சீன மலேசியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய இண்டர்லொக் என்ற புத்தகத்தைப் பள்ளியிலிருந்து திரும்ப பெற துணை பிரதமருக்கு (DPM) பல மாதங்கள் பிடித்தன. அப் புத்தகத்தை பள்ளியில் பாடப்புத்தகமாக வைப்பதற்காக துணை பிரதமர் பல முன்னுக்குப் பின் முரனான காரணங்களைக் கூறி வந்தார். அதனால் கோபமடைந்த ஹிண்ட்ராப் இந்த புத்தகத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் பல ஹிண்ட்ராப் உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். இன்று அப்புத்தகம் பள்ளியில் இருந்து திரும்ப பெறப்பட்ட பிறகும் கூட, இதுவரை துணை பிரதமர் ஹிண்ட்ராப் உறுப்பினர்களுக்கு எதிரான அந்த வழக்கை நிறுத்த எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.
மலாய் மேலாதிக்க எண்ணத்தைத் தொடர்ந்து வரும் முகைதீன் யாசின், எப்படி கண்ணியம் இல்லாமல் தைபூசத் திருவிழாவில் மிகவும் முக்கியமான நபராக (விஐபி) கலந்துகொள்ள முடியும்? இந்தியர்களின் உணர்வுகளை மதிக்காத அவர் தைபூசத்திருவிழாவின் போது உரையாற்றியிருக்கிறார்.
தைபூசத்திருவிழாவின் போது அரசியல்வாதிகளைக் காட்டிலும் அதிகமான இந்து மத ஞானிகள், குருக்கள் போன்றவர்களை மிகவும் முக்கியமான நபராக (விஐபி) அழைக்கும்படி மஹா மாரியம்மன் தேவஸ்தானம் மற்றும் மஇகா வை நான் கேட்டுக்கொள்கிறேன். தைபூசம் ஒரு அரசியல் நிகழ்வு அல்ல. சாமிவேலு தலைவராக இருந்த காலத்திலிருந்து, மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தை மஇகா-வினர் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
தைபூசம் ஒரு புனித விழா. இங்கே இந்தியர்கள் அரசியல் பேச்சுக்களை விட, சமயம் சார்ந்த விரிவுரைகளையே அதிகம் கேட்க விரும்புகின்றார்கள். இங்கே முழு அமைப்பும், சீரமைக்கப்பட்ட வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளைத் தவறும் அரசியல்வாதிகளைத் தவிர்த்து, இந்து மத ஞானிகள் மற்றும் குருமார்களுக்கு மாலையை அணிவிக்க வேண்டும்.
அடிப்படையில், அனைத்து இந்து திருவிழாக்களும் புனித திருவிழாக்களே. உண்மையில் தைபூசத்திற்கு முன் பக்தர்கள் பல நாட்கள் விரதம் அல்லது சைவமாக இருக்கின்றனர். இப்படிதான் இந்துக்கள் இப்புனிததிருவிழாவை மதிக்கின்றனர். மாட்டிறைச்சி உன்னும் ஒருவரை இப்புனித திருவிழாவின் போது கெளரவிப்பதில் எனக்கு முற்றிலும் உடன்படவில்லை. இது இந்து மதத்திற்கு முற்றிலும் மரியாதைக் குறைவை ஏற்படுத்தும். இந்துக்களைப் பொருத்தவரை, ஒரு மாட்டைக் கொல்வது ஒரு தாயைக் கொல்வது போலாகும். இதன்மூலம், மாட்டிறைச்சி சாப்பிடும் ஒருவரை கூட்டத்தில் உரையாற்ற அனுமதிப்பது இந்து மதத்திற்கு மிகப்பெரிய அவமதிப்பாகும்.
மலேசியாவில் ‘அல்லாஹ்’ என்ற சொல் பெரும் பிரச்சனையை எற்படுத்தி வருகிறது. கிரிஸ்துவர்கள் பைபிளில் ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையை பயன்படுத்து தொடர்பில் மலாய் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக இல்லை. நிலமை இப்படி இருக்கும்போது, இப்புனித திருவிழாவில் துணை பிரதமர் உரையாற்றினால் எப்படி இந்தியர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இது எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை என்றால், இந்து தலைவர்கள் மசூதிகளில் அல்லது தேவாலயங்களில் உரையாற்ற அனுமதிக்கும்படி நான் பிற மதத்தைச் சார்ந்த மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்துக்கள் இந்த வழியில் ஓரங்கட்டப்படுவது நல்லதல்ல.
மஇகா, அம்னோ மற்றும் மஹ மாரியம்மன் தேவஸ்தானம் ஆகியவை, மலேசிய இந்துக்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.
-சரவணன்
———————————————————————————————————————————————————————
உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.
எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] / தொலைநகல் : 03-26918272
எடுக்க எடுக்க குறையாத அமுத சுரபிபோல், எல்லா வித இயற்கை வளங்களும் நிறைந்த நாடாக மலேசியா உள்ளதால், பி என் அரசியல் வாதிகள் எவ்வளவு பொருளாதார கொள்ளை அடித்தாலும் மலேசியா வீழ்ச்சியுராமல் நிலைத்துள்ளது இன்றுவரை. இன்றைய மலேசியா வளர்ச்சி குறித்து பெருமைப்பட ஒன்றுமில்லை. எந்த மடையன் ஆட்சியில் இருந்திருந்தாலும் இப்போதைய வளர்ச்சியை அடைத்திருக்க முடியும். அதே வேளையில் பெனாங் முதல் அமைச்சர் லிம் குஅன் எங் அல்லது செலங்கோர் முதல் அமைச்சர் காலித் இப்ராகிம் போன்று ஊழல் இன்றி, சிறந்த நிர்வாகத்தை பெற்றிருந்தால் மலேசியா இப்போதைய விட பல மடங்கு வளர்ச்சியை சிங்கப்பூர், ஹாங்காங் அளவிற்கு கண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை??
500 பில்லின் கடனில் மலேசியா? வெட்ககேடு!!!