“விஸ்வரூபம் திரைப்படம் தமிழ் முஸ்லிம்களைப் பற்றியோ, இந்திய முஸ்லிம்களைப் பற்றியோ பேசவில்லை. மாறாக, அது ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் உண்மைக்குப் புறம்பான தோற்றத்தைத் தாங்கி வெளிவந்துள்ளது” என ஒரு அறிக்கையை பத்திரிக்கையில் படித்தேன்.
இது உங்களுடைய வாதம். மலேசியா வாழ் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் இந்த தனி மனித அறிக்கை பிரதி பலிக்காது. மாற்றுக் கருத்து கொண்டவர்களும் அமைதி காத்து இருக்கலாம்.
இன்னும் மற்ற தமிழர்களின் நிலை என்ன ? ஊமைகளா? இதோ இந்திய மண்ணில் பெரும்பாலோர் அறிந்த மொழியில் இடம் பெற்ற தொலைகாட்சி விவாதத்தை கண்டு தெளிவு பெறலாம். ( http://www.youtube.com/watch?v=_qo_tUJhpKQ)
எனவே இங்குள்ள சில தமிழ் முஸ்லிம்களே நீங்களே தீவிரவாதிகள் போல் மாறி மாறி அறிக்கை விடாதீர்கள். தீவிரவாதம் யாருமே விரும்பாதது. மேற்குறிப்பிட்ட தொலைகாட்சி விவாதங்கள் உங்களுக்கு தெளிவு
தருகிறதோ இல்லையோ படம் பார்க்க விரும்பும் மற்றவர்களின் சுதந்திரத்தில் நீங்கள் தீவிரவாதம் காட்டுவது தவறு.
மலேசிய தமிழர்கள் உங்களை வெறுத்து ஒதுங்கும் நிலையை நீங்களே உருவாக்காதீர்கள். இன்று இந்தியா முழுதும் (தமிழ்நாடு தவிர ) ஹிந்தி, தமிழ், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
தீவிரவாதிகள் செய்ததை மக்கள் அனுபவித்த கொடுமைகளை திரைப்படத்தில் காட்டுவது இது தான் முதல் முறை அல்ல. இவ்வளவு பேசும் நீங்கள் என்றாவது இந்த தீவிரவாதம் நடக்கும் போது அதற்க்கு எதிர்ப்பாக குரல் கொடுத்தது உண்டா ? தயவு செய்து பிறர் விருப்பு வெறுப்பு பற்றி நீங்களே முடிவு செய்யாதீர்கள்.
-நாசா.
———————————————————————————————————————————————————————
உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.
எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] / தொலைநகல் : 03-26918272