ஈழத்தமிழர்களுக்காக மலேசிய அரசாங்கம் வழங்கிய 32 இலட்சம் வெள்ளி மீதான காவல்துறையினரின் விசாரணை முடியும்வரை பூச்சோங்க முரளி சுப்பிரமணியம் அமைதி காக்க வேண்டும். காவல்துறையில் புகார் செய்த பிறகு அமைதியாக இருப்பதை விட்டு தினசரி பத்திரிக்கைகளில் சுய விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார்.
தமிழீழ இலட்சியத்தை நோக்கிய ஆயுதப் போராட்டம் இலங்கையில் மௌனிக்கப்பட்ட சூழ்நிலையில் ஜனநாயக ரீதியில் உலகத் தமிழர்கள் அனைவரும் நீதிக்காக குரல் கொடுத்து ஒருங்கிணையும் இவ்வேளையில் தமிழர்களை குழப்பி போராட்டவாதிகள் மீது வீண் குற்றச்சாட்டு சுமத்தி அறிக்கை விடுவதை பூச்சோங் முரளி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு மத்திய அரசு, வழங்கிய நிதியை யாரிடம் கொடுக்க வேண்டும் என்பதை அரசு முடிவு செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்திருக்கிறது. அந்த பணம் யாருக்காக பயன்படுத்தப்பட்டது, எவ்வகையான திட்டங்கள் மூலம் அது நடைமுறைப்படுத்தப்பட்டது போன்றவை அரசுக்கு தெரியும். அதற்கான விவரங்களையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்கள்.
இருப்பினும், தனிப்பட்ட நபர்களுக்கெல்லாம் ஒரு அரசு சார்பற்ற இயக்கம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வழக்கறிஞர் கா. ஆறுமுகமும் இந்த நிதி பற்றி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை உடனடியாக விசாரணை செய்யுமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆகவே, ஒரு தனிமனி்தன் சுய விளம்பரம் தேடி இவ்வளவு திட்டம்போட்டு பத்திரிக்கை வழி விசாரணை செய்வது கண்டத்துக்குரியது என கூறிய அவர்கள், உலகத் தமிழர்களின் ஜனநாயக வழியான தமிழீழப் போராட்டத்திற்கு உதவி செய்யாவிடினும் உபத்திரம் செய்யமால் இருப்பது நல்லது என உலகத் தமிழர் நிவாரண நிதியம் பூச்சோங் முரளியை கேட்டுக்கொண்டது. அப்படி செய்வதன் உள்நோக்கம் தமிழர்களுக்கு செய்யும் துரோகமாவே கணிக்கப்படும்.
உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் பூச்சோங் வட்டார பிரதிநிதி மாயன் கந்தசாமி, பந்திங் வட்டார பிரதிநிதி குமரேசன்.
———————————————————————————————————————————————————————
உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.
எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: info@semparuthi.com / தொலைநகல் : 03-26918272