Mr. பழனி அவர்களே எனக்கு ஒரு டவுட்டு…

G-Palanivelஅரசாங்க அடிமைகளான ஆசிரியர்கள் எல்லோருக்கும் கல்வி அமைச்சரிடமிருந்து திடீர் அழைப்பு. அதுவும் அடிமைகளின்  பட்டியலில் கடைசியில் இருக்கும் தமிழ் ஆசிரியர்கள் மட்டும் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஒன்றுகூட உத்தரவு. அடிமைகளான நாங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் ஏறியபோது ஆட்டுமந்தைகளானோம்.

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் என்னைப்போலவே நிறைய அரசாங்க அடிமைகள். எல்லோருடைய வாயும் கடுப்பில் முணுமுணுத்தபடி இருந்தது. ‘இருக்குற வேலைய விட்டுட்டு பஸ் புடிச்சி இங்க கூட்டி வந்துட்டாங்க… இவங்க தேர்தல் பிரசாரத்துக்கு ஆசிரியர்கள்தான் சிக்குனாங்களா… இருங்கடா தேர்தல் வரட்டும்…’ இவ்வாறு முணங்காதவர்கள் குறைவு. அந்த அளவுக்கு ஆசிரியர்களின் வயிற்றெரிச்சலைக் கொண்டிக்கொண்டு இந்த நிகழ்வு நடந்தது.

தொலைவிலிருந்து வந்த ஆசிரியர்கள், மாவட்ட கல்வி இலாக்காவில் தயாராக இருந்த பேருந்தில் ஏற சீக்கிரமே கிளம்பிவிட்டதால் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் அநாதைகளாக விடப்பட்டுவிட்டனர்.  அது குறித்தெல்லாம் கல்வி அமைச்சருக்கு என்ன சிக்கல்… அவர் ஜெயிக்க ஏதாவது பொய்யை அவசர அவசரமாகச் சொல்ல வேண்டுமே…

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பழனிவேலு பேசினார்.  உற்சாகமாக இருந்தார். அவர் வாயில் தமிழ்தான் வராது என்றால் மலாயும் வரவில்லை. Sekolah catat என்பதற்கு sekolah cacat (ஊனமுற்ற பள்ளி) என சொன்னார்…. ?

சரி அதையெல்லாம் பொறுத்துக்கொள்ளலாம் என தொடர்ந்து கேட்டால் விட்டாரே ஒரு பொய். சிலாங்கூரில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் அனைத்துமே எல்லா வசதிகளோடும் இருக்கிறதாம்.

என்னங்க பழனி… நீங்க வாழ்கிற இடத்தில் உள்ள மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியே எந்த வசதியும் இல்லாம வாடுது. இதுல சிலாங்கூர் முழுக்கன்னு கணக்கெல்லாம் சொல்றீங்க. சரி அதையும் ஏதோ போனாபோவுதுன்னு பொறுத்துக்கிட்டா உங்க ஓட்டு கேட்குறத  அங்கயா காட்டனும்.

“ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளியில் உள்ள ஐந்து பெற்றோர்களிடம் பாரிசான் அரசுக்கு ஓட்டுப்போட பிரசாரம் செய்யனும்” என நீங்க சொன்னது உங்கள் சுத்தி போலிஸ் பாதுகாப்புக்கு இருக்குன்ற தைரியத்துலதான…?

சேவைய ஒழுங்கா செய்றவர் இப்படி ஓட்டு  வாங்க மாட்டார் பழனி. அதுவும் நீங்களும் முஹிடினும் மக்கள தேடிப்போகம… கட்டளை பிறப்பிச்சி ஆசிரியர்களை வழுக்கட்டாயமாக கூட்டி வந்திருகீங்க… கொஞ்சம் கஷ்டம்தான் ஆசிரியர்கள் உங்களை நம்புவது…

-ஓர் அடிமை ஆசிரியர்

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272