மாற்றத்தை விரும்பிய மக்களிடம் இருந்து களவாடப்பட்ட 13வது தேர்தல்

Blackஅன்பான தமிழர்களே, நம்மில் எத்தனையோ பாகுபாடு கொண்ட மனிதர்கள். தலைமை என்ற பெயரில் சுய நலம் பெரிது  என வாழும் தலைமையே அதிகம் !

இதை அன்று தொட்டு (வெள்ளையன் ஆளத்தொடங்கிய காலம் முதல் ) கொஞ்சம் நின்று நிதானித்து சிந்தித்து பாருங்கள். அது ஒருவித கங்காணி /தண்டல் /மாண்டோர் போன்றது! அவர்கள்தான் நம்மை பிரதிநிதித்து மேலே மேலே உயர்ந்தார் அன்றி… நம்மில் விழித்துக்கொள்ளாதோர்தான் அதிகம்.

அவர்களுடைய கைவண்ணம் கொஞ்சம் பக்காத்தானுக்கு இழப்பை சேர்த்தது , காரணம் அவர்கள் இன்னும் நம்பும் அந்த கங்காணி சொல்லே மந்திரம். பக்காத்தான் இனி கடுமையாக உழைக்கவேண்டும்.

இது போன்ற மக்களிடம் நல்ல நேர்மையான ஜனநாயகம்  பற்றி இன்று தொட்டே பரப்புரை, நல்ல அணுகுமுறை கொண்டு பக்காத்தான் கொள்கை ஆணி அடித்தாற்போல் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

இதை சபா, சரவாக்கிலிருந்து தீபகற்ப மலேசியா வரை அடுத்து களம் காணும் மனிதர்களை கொண்டு வலுப்படுத்த முனையவேண்டும்.

தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் செய்யப்படும் முறை இனி செயல்படாது ! மக்கள் எடுப்பார் கைப்பிள்ளை. எல்லாரும் அரசியல் அறிந்தவர் அன்று. அடுத்த போட்டிக்கு இன்று தொட்டு உழை, பழகு, பயிற்சி எடு !

anwarசபா சரவாக்கில் தோற்றுப்போன அதே நாடாளுமன்ற, சட்ட  மன்ற உறுப்பினர்களை தொடர்ந்து அந்த மக்களோடு வேலை  செய்யவிடுதலும் நன்றே !

ஓட்டு வங்கியை இன்று தொட்டு நேர்மைப்படுத்துங்கள், வெறும்  பேச்சளவில் விடாதீர்கள். நேர்மையில்லா ஒட்டு வங்கியுடன் தேர்தல் களம் காண்பது துப்பாக்கி தோட்டாவுடன் நிற்கும் எதிரியின் முன் வெறும்  நிராயுத பாணியாய் நிற்பதற்கு சமம்; வெற்றியை காண முடியாது.

மகாத்மா காந்தி 32 ஆண்டுகள் போராடி சுதந்திரம் கண்டார். நெல்சன் மண்டேலா  27 ஆண்டுகள் போராடி வென்றார். நாம்  10 ஆண்டுகளை பல உட்கட்சி பூசல்களோடு அனுபவம் இல்லாதவர் போன்று கடைசி நேர குழப்படிகளோடு தேர்தலை எதிர்கொண்டதே நம்முடைய பலவீனமுமாகிவிட்டது !

கள்ள ஓட்டு போடவந்தவர்களை சில இடங்களில் கட்சியினர் போராடி முறியடித்த து நமக்கு பலம். ஆனால் , பல இடங்களில் அவர்களால் காவல் என்னும் கயமையிடம்  வெல்ல முடியவில்லை !

ஆதாரங்களை முன் வைத்து கட்டாயம் வழக்கு போடவேண்டும். நீதிமன்றம் மட்டும் போதாது … அறம் காக்கும் சுல்தான்கள் /சமஸ்தானாதிபதிகள் இன்னும்  மாமன்னர் இவர்களுக்கும் பேட்டி கொடுக்கவேண்டும். சட்டம் அனுமதிக்கும் அல்லவா ? நாடு கொள்ளை போவதை தடுக்க தொடர்வோம் … வழிமுறை காண்போம் .

நாசா / Nasa

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும், உள் மனதின் குமுறல்களையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272