நம்பிக்கை (ஆ)சாமியை நம்பி ஏமாந்தக் கதை!

najib-razakஎன் மீது நம்பிக்கை வையுங்கள்!

என் மீது நம்பிக்கை வையுங்கள்!

அழியும் மை தடவி வாக்குப் போட்டு வெற்றிப் பெறச் செய்த (யார் வெற்றிப் பெற்றது???) மக்களுக்கு பட்டை நாமம் போட்டு பெற்ற வெற்றிக்குப் பரிசாக:

சிறுபான்மையினர் மீது தொடர் பகிரங்க அச்சுறுத்தல்.

தாய் மொழிப் பள்ளிகளை! மூடச் சொல்லும் கூக்குரல்.

சிறுபான்மையினர் மத நம்பிக்கைகள் மேல் ஆதிக்கம் (அல்லா சொல் சர்ச்சை) அதிவேகம் கண்டுள்ளது.

தடுப்புக் காவலில் இந்தியர் மரணம் அதி உச்சம் அடைந்துள்ளது. தடுப்புக் காவலில் கைதிகளுக்கு மரணம் விளைவித்த காவல் துறையினர் மீது ஆமை வேக மழுப்பல் விசாரனை.

இந்திய மாணவர் மெட்ரிகுலேசன் நுழைவு சர்ச்சை, இவ்விசயத்தில் ஆளுங்கட்சி இந்திய பிரதிநிதிகளின் தகிடுதத்தம் வேலைகள். கல்வி ஆண்டு தொடங்கி பல வாரங்கள் ஆகியும் இந்திய மாணவர்கள் நிலை திண்டாட்டம் திண்டாட்டம்!

மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மூடுவிழா காண தூபம் போட்டாச்சு தீபாராதனையை கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்! இவ்வாண்டு இந்திய ஆய்வியல் துறை மாணவர் சேர்க்கை அதலப்பாதாள வீழ்ச்சி! இதை தட்டிக் கேட்க வேண்டிய இந்திய ஆய்வியல் துறை பொறுப்பாளர்கள் மதப் பரப்பு பிரசங்கத்தில் ஐக்கியம் ஐக்கியம்!

அனைத்து கல்லூரிகளிலும் (தனியார் கல்லூரி உட்பட) இஸ்லாமிய வரலாற்றுப் பாடம் கட்டாய போதனை திட்டம்! இது எதுக்கு இஸ்லாமியர் அல்லாதார் இதைப் படிச்சி என்ன பன்னப் போராங்க?  அல்லா என்ற வார்த்தையையே இஸ்லாமியர் அல்லாதார் சொல்லக்கூடாது என்று சொல்லுறீங்க அதுக்கப்பரம் எதுக்கு எங்கள் மீது இந்த இஸ்லாமிய வரலாற்றுப் பாடத்தை தினிக்கிறீங்க? இது என்ன கோமாளித்தனமான முரன்பாடு?

குடியுரிமை சிவப்பு அடையாள அட்டை பிரச்சனை கப்சிப்… சத்தம் போடாதிங்க…! அதையெல்லாம் நம் இந்தியர்கள் எல்லாரையும் ஒட்டு மொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ள நம்ம அண்ணாச்சி வேதா பார்த்துக்குவாரு!

இது போன்று இன்னும் நிறைய பரிசுகள் நமக்குக் காத்திருக்குது!

நமக்காக போராட வேண்டிய ஆளுங்கட்சி இந்திய பிரதிநிகள் சாமியோ சாமி மௌன சாமிகளாய் மௌன விரதம் காக்கின்றனர். ஆளுங்கட்சி கூட்டணியிலுள்ள இந்தியரைப் பிரதிநிதிக்கும் கட்சிக்காரர்கள் தேர்தலில் மக்களால் புறக்கனிக்கப்பட்டும் கொல்லைப்புற பதவி சுகத்துக்கு குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நம்பிக்கை வையுங்கள்!

நம்பிக்கை வையுங்கள்!

நம்பிக்கை வெச்சுக்கிட்டே இருங்கள் தமிழர்களே!

நாமதான் நம்பிக்கெட்ட இனமாச்சே!

ஆமா, பிரிம் உதவித் தொகை ரிம.500 கொடுத்துட்டாங்க, வருங்காலத்துல உதவித் தொகையை உயர்த்தி ரிம.1200ஆக கொடுக்கப்போவதாக எங்கயோ சொன்னாங்க. கொடுக்கர தென்றால் பாத்து சீக்கிரம் கொங்கையா, கை செலவுக்கு அதைத்தான் நம்பியிருக்கன்…!

-கதிர்