தற்சமயம் நம் நாட்டில் டீசல் எண்ணை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. கூடிய விரைவில் நம் அரசாங்கம் டீசல் விலையை உயர்த்தப் போகிறது என டீசல் விநியோகிப்பாளர்கள் உணர்ந்துள்ளதால், மொத்த விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
டீசல் விலையை அரசாங்கம் குறைக்கப்போகிறது என அறிவிக்குமேயானால், டீசல் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பே இல்லை. டீசல் விலையை அரசு உயர்த்தப்போகிறது என விநியோகிப்பாளர்கள் அறிந்துள்ளதால் டீசல் பதுக்கல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் நலன் மீது தற்போதைய அரசாங்கம் அக்கறை கொள்வதில்லை என்பதற்கு இந்த டீசல் விவகாரமே தக்கச் சான்று. டீசல் பற்றாக்குறையால் மக்கள் எந்த அளவிற்கு அவதிக்குள்ளாகியுள்ளார்கள் என்பதை அரசு நன்கறிந்தும், இதனை தீர்க்க மாற்று வழிகளை காண அரசு முயலவில்லை.
ஊதாரணமாக, டீசல் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பு செய்தாலே போதும், டீசல் பற்றாக்குறை ஏற்பட வழியே இல்லை.
மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வருமேயானால், எண்ணெய் விலை உடனடியாக குறைக்கப்படும் என தற்போதைய அரசு அறிவிக்குமேயானால், நம் நாட்டு மக்கள் டீசல் பிரச்சனையில் அவதியுற வாய்ப்பே இல்லை.
ஜே. சிம்மாதிரி,
ஜ.செ.க. முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர்.
ஹரிராயா பெருநாள் முடிந்த கையோடு டீசல் விலை ஏறும் என அனைத்து மொத்த விற்பனையாளர்களும் அறிந்து வைத்துள்ளனர். ஆகவே, டீசலை பதுக்கி, அவ்வெண்ணை பயனீட்டிர்கு போதவில்லை என நாடகமாடுகின்றனர்.
சார் நீங்கள் கேமரன் மலை குளிரில் உளறுவதாக எண்ணி பாரிசான் அரசு உங்கள் கோரிக்கையை உதாசினப்படுத்தி விடும்!
அது எப்படி முடியும் சார்?( crude oil ) விலை USD100 இக்கு மேல் போய் கொண்டிருக்கிறது! regional தேவையும் வளர்ந்து கொண்டே போகிறது.மக்களை கொள்ளை அடிக்க இதுதானே சரியான நேரம்!
மிக மிக சரியான கணிப்பு….சமீபத்தில் ‘குனோங் செமங்குளில்’ தன் லாரிக்கு என்னை ஊற்ற…நின்ற என் நண்பர் என்னை ஊற்ற முடியாமல் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் அங்கேயே நிற்க வேண்டிய நிலை.அந்த இரண்டு மணி நேரத்தில் ஏறக்குறைய ஐம்பது லாரிகள் அங்கே டிசல் எண்ணெய்காக நிற்க வேண்டிய நிலை….எண்ணெய் நிலையத்தில் போக்குவரத்து பிரச்சனை…
முதலில் எண்ணெய் இல்லை என்று சொல்லிய எண்ணெய் நிலைய பணியாளர் பிறகு எண்ணெய் இருக்கிறது சொல்லி எண்ணெய் ஊற்ற அனுமதி கொடுத்தாராம். இது சமீபத்தில் நடந்த உண்மை சம்பவம்.