குரு வழிபாட்டாளர்களே, அதை ஏற்றுக் கொள்பவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி? இந்து மதத்தில் தங்கள் குருவையே முழு வழிபாட்டுக்குறியவராக (கடவுள், பரம் பொருள், வழிபாட்டு தெய்வங்கள் இவைகலெல்லாம் இருக்கும் போது, அவைகளை தவிர்த்து விட்டு) ஆக்கிக் கொள்ளலாம் என்று எந்த வேதத்தில், எந்த சாஸ்த்திரத்தில், எந்த இந்து மத ஆதார நூலில் குறிக்கப்பட்டுள்ளது என்று சொல்ல முடியுமா?
ஆனால் இங்கு பல குருமார் வழிபாட்டு பக்தர்கள் தங்கள் குருவையே முழு வழிபாட்டுக்குறியவராக ஏற்று அவரையே முழு நேரமாக வழிபடுகின்றனரே? அப்படி என்றால் கடவுள், பரம் பொருள், வழிபாட்டு தெய்வங்கள் இவைகளெல்லாம் எதற்கு? பல அருள் மறைகளும் அருள் பாக்களும் தேவார திருமுறைகளும் எதற்க்கு?
இன்று மலேசியாவில் பல கோயில்களில் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பூசை முடிந்தவுடன் பஜனைகள்தான்(அதுவும் பெரும்பாலும் சமஸ்கிருத பாடல்கள்) பாடப்படுகிறது! தேவார திருவாசக திருமுறைகள் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டுவிட்டது! இந்த பஜனைகளை கோயில்களில் வந்து பாடி நம் தமிழ் திருமுறைகளுக்கு ஆப்பு வைத்ததும் இந்த குருமார் வழிபாட்டாளர்களே!
வள்ளலார் கடவுளை அருட் பெரும் ஜோதி வடிவில் வணங்கச் சொன்னார், ஆனால் இன்று இந்த குரு வழிபாட்டாளர்கள் வள்ளலாரையும்(அவர் உருவத்தையும்) ஒரு வழிபாட்டுக்குறியவராக வழிபாட்டுப் பொருளாக ஆக்கி விட்டனர்! இதை நீங்கள் பல வள்ளலார் நிலையங்களில் இங்கு மட்டுமல்ல இந்தியாவிலும் கூட காணலாம்! இதுதான் நீங்கள் உங்களின் குருமாரின் போதனையை பின்பற்றும் லட்சனமா?
இது போன்றுதான் பல குருமார்களின் அருளாலர்களின் சித்தர்களின் உண்மை போதனைகளை விடுத்து அவர்களையே ஒரு வழிபாட்டுக்குறியவராக வழிபாட்டுப் பொருளாக ஆக்கித் திரியுது இந்த குரு வழிபாட்டுக் கூட்டம்!
ஒரு சில குருமார் வழிபாட்டு மையங்களில் தங்கள் குருவின் பாதுகையையே(செருப்பு) வழிபாட்டு பொருளாக்கி அதையே கடவுளுக்கு நிகராக சகல பூசை புனஸ்காரங்களோடு வழிபடுவதை நான் நேரடியாக கண்டுள்ளேன்! இவைகளை எல்லாம் வளரவிட்டால் காலப்போக்கில் நம் இந்து மதம் எங்கே போய் நிற்கும்?
குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வரஹ…! இந்த வசனம் குருநாதரின் மேன்மையையும் அவரின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்குதே அன்றி குருவை கடவுள் என்ற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை!
நான் குருமார்களுக்கோ அருளாலர்களுக்கோ சித்தர்களுக்கோ எதிரானவன் அல்ல! மாறாக பாமர மக்களை குறிப்பாக தமிழர்களை இந்த குருமார் வழிபாட்டுக் கூட்டம் (அரம்பத்தில் இந்த குருமார் வழிபாடு மற்றும் பல்வேறு யோகா தியான பயிற்சிகளை இந்நாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழரல்லாத உயர்தட்டு இந்தியர்களே!) பலிகடாவாக்கி தமிழர்களின் சமய இன அடையாளத்திற்கு அச்சுறுத்தலாகிவிட்டது!
இன்று மலேசியாவில் வாழும் தமிழ் இந்துக்களில் பெரும்பான்மையினர் எதாவது ஒரு குரு வழிபாட்டுக் கூட்டத்திலோ அல்லது யோகா தியான அமைப்புகளிலோ அதுவும் இல்லைனா ஐயா என்ற சிறு தெய்வ வழிபாட்டிலோ மலையாளிகளின் ஐயப்பன் பூஜைகளிலோ ஈடுபட்டுள்ளனர்!
இந்த குரு வழிபாட்டுக் கூட்டத்தினாலும் தமிழ் சினிமா தாக்கத்தினாலும் மலேசிய தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, பெயர்சூட்டும் முறை(தமிழ் பெயர்கள் மாறி டஷ், புஷ் என்ற சமஸ்கிருத மற்றும் அர்த்தமே இல்லாத பெயர் வைப்பது) போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர்!
இப்படியே போய் கொண்டிருந்தால் நம் தமிழர் சமயமாம் சைவ சமயத்திற்கும் தமிழர் இன அடையாளத்திற்கும் மிகப் பெரிய பின்னடைவு காத்துக் கொண்டிருக்கிறது!
அதனால் தான் நான் தொடர்ந்து என் கட்டுரைகளில் திரும்பத் திரும்ப இதே கருத்துகளை வழியுறுத்துகிறேன்!
தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்! நம் சமயத்தையும்(சைவசமயம்) இன அடையாளத்தையும் அடகு வைத்துவிடாதீர்!
இந்து சங்கம் இதற்கெல்லாம் ஒரு நாளும் தீர்வு காண முன்வராது! அவர்களுக்கு ஆரியத்தை தூக்கிப் பிடிக்கவே நேரம் போதாது!
ஆகவே சைவசமயம் சார்ந்த அமைப்புகள் இயக்கங்கள், ஐயா ஆறு நாகப்பன், ஐயா தர்மலிங்கம், சைவசமய அறிஞர்கள், தமிழ் பற்றாளர்கள் அனைவரும் களத்தில் இறங்கி உங்களின் முயற்சிகளையும் உழைப்பையும் இன்னும் அதிகரியுங்கள்! இது எனது தாழ்மையான வேண்டுகோள்!
-கதிர்
மிகவும் நன்றாக இருக்கிறது…ஆனால் தமிழ் சமுதாயம் உர்ப்பிடுமா…????
மோகன் அவர்கள் கவலை நியாயமானது. ஆனால் இந்த ஜென்மங்களை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஒரு குரு வானொலியில் தினமும் பேசுகிறான். உருப்பட்ட மாதிரிதான்!
சமுகம் உருப்படாத சமுகம், சொந்தபுத்தியில்லை யார் எதை சொன்னாலும் அவன் பின்னால் பத்து பேர்போய் கொடி பிடிப்பான் அது அரசியல் ஆகட்டும் சமையம் ஆகட்டும்,பொது இயக்கமாகட்டும் சற்றும் யோசிக்காமல் கையை தூக்குவான் அல்லது ஆள் சேர்ப்பான்,இப்படிதான் நம் நாட்டில் இன்றும் நடந்து வருகிறது?? இன்றுகூட கேமரன் மலையில் ஸ்ரீ ஜகநாத இரத ஊர்வலம். கூட்டத்திற்கு பஞ்சமில்லை,ஆண்களும் பெண்களுமாக எல்லா வயதினரும் குதித்து குதித்து ஆட்டம் போடுகின்றனர். நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என தெரியவில்லை?? பஹாய் வேறு அப்பப்பா உருப்பிடுவோமா!! பரம்பொருள் விட்ட வழி????
கதிர் அவர்களே, உங்கள் கருத்துகளை முற்றிலும் ஆதரிக்கின்றேன்..சைவ சமயமே நம் சமயம்!..ஆயினும்,சுயநல வழிப்பாட்டுக் கூட்டங்களுக்கு நம் சமய தெய்வங்கள் கண்ணில் படுவதில்லை.அவர்களின் வழிபாடு/வேண்டுதல் எனும் பேரம் பேசும் போக்கிற்கு அவர்களுடைய குருகளே தோதாக இருக்கிறார்கள் போலும்..மேலும், தற்போதைய இந்துகள்(பெரும்பாலோர்) ஆரிய போதையை விரும்புகின்றனர். அதையே அவர்கள் பெருமையாக நினைக்கின்றனர்.இந்த சமுதாயம் நம் சமயத்தின் அழிவை நோக்கிப் போய்கொண்டிருக்கின்றது.
முதல்ல ஒவ்வொரு இந்தியனும் இந்து மதத்தை படிச்சு உணருங்கப்பா. அப்புறம் குடும்ப உறுப்பினர்கள அத்தனை பேரையும் இந்து மதத்தை நன்கு படித்து உணர்ந்து அதன்படி நடக்க வழி செய்யுங்கப்பா. அப்படி செய்து விட்டால் அடுத்து வரும் இந்து சமுதாயம் தானாக உருபெறும். தானும் சரியில்லாமல் சமூகத்தை மட்டும் குறை சொல்லிக்கொண்டிருப்பதால் யாரும் உருப்படப் போறதில்லை. ஒவ்வொரு இந்துவும் தன்னை சரிபடுத்திக் கொண்டால்தான் சாமுதாயம் சரிபடும்.
நெகிரி செம்பிலானில் ராசாவில் உள்ள சாய்பாபா மையத்தின் உரிமையாளர் மாநிலம் முழுதும் 22 கிளைகளை வைத்துள்ளார். ஆகக் கடைசியாக சிறம்பான் மதுரா பேரங்காடி முன் ( பழைய மைடீன்) 23 வது கிளையைத் திறந்துள்ளார். இவரின் நோக்கம் என்ன. ஒரு மாதத்திற்கு ஒரு கிளையிலிருந்து ரி.ம.500 வருமானம் வந்தாலும் மாதம் ஒன்றிற்கு ரி.ம.11500. கண்ணன் அவர்களே, கடவுளை விற்று காசு பன்னுங்கள்.அது உங்கள் கர்மா. சமயத்தையும் இன மானத்தையும் அடகு வைக்காதீர்கள். அமாம், அடுத்த 24 வது கிளை எங்கே??
பணம் பண்ணும் குருமார்கள் இங்கு நிறைந்து விட்டார்கள் . பல நூரை வசூல் பண்ணி பக்தர்களுக்கு நன்மை செய்வதாக ஜால வித்தை செய்து கொண்டிருக்கும் மட குருமார்களை இனம் கண்டு ஒதுக்க வேண்டும் .ஒரு தலைக்கு எழு நூறு என்றால் ஒரு பேருந்தில் ஐம்பது பேர் என்ற கணக்கில் நாடு முழுதும் பல நூறு பேருந்து வருகிறது என்றால் அதன் வருமானம் என்ன வென்று நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள் . கண்ணை எப்போதும் மூடி கொண்டு இருக்காதிர்கள்.
வேதனையான உண்மை.
ஐயா
உங்கள் போன்ற சரியான வர்தான் தமிழ் மதத்திற்கு தலைவராக வரவேண்டும். குறிப்பாக நீங்கள் சொன்ன கருதுகள் உண்மை என்பது என் கருத்து.
சில குருக்கள் சாங்கியம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி
கொள்ளைலாபம் அடித்து ராஜாவாழ்கை வாழ்கிறார்கள்
ஹிந்துக்கள் ஜாக்கிரதை [இது ஒரு சிலருக்குத்தான்]
நேத்ரா சரியாக சொன்னீர்கள்… பல்லிமாதிரி இருந்துகொண்டு இவன் செய்யும் அட்டகாசம் ஐயகோ சொல்லிமாளாது… மஇகா டாக்டர் அமைச்சர் மட்டி மணியம் ஐம்பதாயிரம் இந்த கண்ணனுக்கு கொடுக்கிறான்… தமிழருக்கோ தமிழ் பள்ளிக்கூடத்துக்கோ கொடுத்தானா!!! தலைநகர் லெபோ அம்பாங் பகுதியில் 60-70 லிட்டர் பாலை பாபா தலைல உத்துறான் தினமும். எவ்வளவோ குழந்தைகள் பசிப்பட்டிநியோட தினமும் வாழ்கிறது… இந்த சைத்தான்களை கால்லாலடிச்சே கொல்ல வேண்டும்… மொழிப்பற்று உள்ள தமிழர்களே ஒருமுறை சென்று பாருங்கள் இவன் தமிழ் மொழியை எவ்வளவு கேவலப்படுத்துகிறான் என்று தெரியும்…..
இந்து சங்கம் தமிழரல்லாதவர்களின் கையில்… ஆரியர்களோடு சேர்ந்து தமிழர்களின் வழிபாட்டுக்கும் மொழிக்கும் மறைமுக சதி செய்கிறார்கள்…. ஆரிய பார்ப்பன விளம்பரங்களும் தமிழரல்லாதவர்களின் குரு வழிபாட்டு பதாகைளும் பெரிய அளவில் பல இடங்களில் விளம்பரப்படுத்த படுகிறது…
எங்கு மடையர்கள் அதிகமாக இருகின்றார்களோ அங்குதான் அரை ஞானி கூத்தும் கும்மாளமும் அடிக்கலாம். அதுதான் மலேசியாவில் நம்மவர் இடையே இப்பொழுது நடக்கின்றது. குரு என்பவர் மெய்ப்பொருளைக் காட்ட வழி வகுப்பவர் மட்டுமே. அந்த குருவே பரம்பொருளாக ஆகி விட முடியாது. அப்படி எவரேனும் தங்களை காட்டிக் கொள்வார்களானால், “குருடும், குருடும் குருட்டாட்டம் ஆடி குழியில் விழுந்த” கதைதான். தமிழர்கள் ஐயப்பா சாமியை வணங்குவார்கள். ஆனால், தமிழ் குமரன் முருகனை மலையாளிகள் வணங்க மாட்டார்களாம்? என்னய்யா வேடிக்கை இது? அதுவும், ஐயப்பன் சுவாமி முருகனின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டு மட்டும் வணங்குவார்களாம். இது சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் கிடைத்த மற்றுமொரு மலையாளப் பிள்ளை என்ற புராணம் தயாராகி இன்னும் ஒரு முன்னூறு வருடங்களில் உண்மையாகி விடும்.
இன்று அஸ்ட்ரோ வானவில்லில் சோசியர் சொன்னது ” வீடுகளின் சுவர்களில் சிமன் வெடித்து கோடுகள் விழுந்தால் தோஷம் கழிக்க வேண்டுமாம்…பூனை, நாய் செடிகள் இறந்து விட்டால் தோசமாம் ஆனால் மனிதன் இறப்பதை பத்தி சொல்லவில்லை .காரணம் வசூலிக்க ஆள் வேண்டுமே என்ற வசூல் தான் இவனும் ஒருவித குரு கோளாறுதான்.
சிந்திக்க வைக்கும் கட்டுரை.
குருமார்களுக்கும் சோசியர்களுக்கும் ஊடகவியாளர்களுக்கும் தனிப்பட்ட வருவாய்/ கமிசன் கன்றாவி இருக்கும் போல தமிழ் பத்திரிக்கைகள் தூக்கோ தூக்கு என்று இந்த பாவிகளை வளக்குது?
வேதம் 4,சாஸ்திரம் 6,அதில் 1 தான் சைவம் ஏன் சைவம் ஒன்லி 4 தமிழர் சொல்றீங்கோ இட்ஸ் ராங்,கே.இங்கே குரு பூஜா தவறு சொல்றீங்கோ அயனார் ,கருப்பு சாமீ வழிபாடு ராங் சொல்றீங்கோ என்ன ஆச்சி வுங்களுக்கு கோவில்லே அர்ச்சனை வுண்டியல் லே பணம் வரலியா.அவுங்க்கோ ஏழை பிள்ளைக்கு ஹெல்ப் பண்றங்க்கோ படிப்பு கு ஹெல்ப் பண்றங்க்கோ வறுமைகு ஹெல்ப் பண்றங்க்கோ (மக்கள் தொண்டு மகேசன் தொண்டு )செய்றங்கோ .1 கோயில் உள்ள வூரில் எதனை ஏழை இர்காங்க்கோ எப்படி வால்றங்க்கோ தெரியுமா.திராவிடர் ப்ளீஸ் நோ யென்ட்ரி,தேங்க்ஸ் .
Vanakkam
Dear Readers
Thank you for your comments. However, as I always mention, please provide constructive and proactive comments to uplift and improve ourselves. Currently, most of the Temples only practice rituals rather then the actual Saivamaarkam. also, most of the priest only keep promoting the Temples upcoming rituals instilling fear. The Temples also serves all type of food in the name of “prasaatham” like vegetarian nasi lemak, mee goreng, nasi goreng, coffee, tea etc. Also, the food were served on paper, plastic sheet or polystyrene container. I believe all these must put to a stop. Temple prasaatham purely and compulsory must be ponggal rice, puli rice and kondai kadalai and must serve in banana leaf. The Temple committee must put a ruling or condition that all the priest must sing Thevaram songs after the poojas been performed, make all the devotees sit for half an hour to sing together with priest before conducting the individual “archanai”. begin at once at Temple where ever possible and upload on facebook or internet. Madurai Meenatchi Amman Temple was very great. My financial level went up many fold after praying to Madurai Meenatchi Amman. Please pay a visit to Meenathci Amma; Amma give any good deeds we ask. Madurai Meenatchi Amman blessings to all readers.
உழைத்துச் சேர்த்த
ஒருபிடி பணத்தை
மறைவில் வந்து
அடித்துப் பிடுங்குவார்கள்
முரட்டுக் குண்டர்கள்..!
நேரிலே வந்து
நோகாமல் பிடுங்குவார்கள்
திருட்டுக் குருமார்கள்!
தவறான கருத்து கதிர். ஒவ்வொரு மனிதருக்கும் பிரச்னை இருக்கிறது.
பெரும்பாலும் மக்கள் தங்கள் குறைகளை சொல்லத்தான் கோயில் செல்கிறார்கள். அங்கே இருப்பதோ பேசாத தெய்வம். தீர்வு கிடைக்கவில்ல. அடுத்த நிலையில் இருப்பவர்கள் பேசும் தெய்வமான குருமார்கள். நல்ல குரு கிடைத்தால் நல்லது. தப்பான குருமார்கள் கிடைத்தால், ( 7 1/2 சனி ) நிம்மதியை நாசம் செய்து விடுவான். இப்போழுது நம் இனத்தில் வன் முறை அதிகமாக உள்ளது. நம்முடைய எல்லோருடைய வீட்டிலும் பூஜை அறை/ படம் இருக்கும். ஒரு gangster வீட்டிலும் நிச்சயம் தெய்வ படம் இருக்கும்.
குரு வழிபாட்டில் உள்ள யாரும் வன்முறையில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். வேண்டும் என்றால் ஆய்வு செய்து பாருங்கள். நான் எந்த குரு வழிபாட்டிலும் இல்லை. 64 கலைகள் கொண்டது நம் இனம். சாகாக்கலையும் உண்டு. நல்லதை ஆதரிப்போம். கெட்டவைகளை விட்டு விடுவோம்.
எனக்கென்னவோ, இக்கட்டுரையில் அனைத்து குருமார்களையும் சாடியிருப்பது போன்று தோன்றவில்லை.மாறாக, போலி குருமார்களையும்,ஆடம்பர குருமார்களையும்,குரு வழிபாட்டையே முதன்மை வழிபாடாகக் கொண்ட நம் சமயப் பற்று அற்றவர்களையும் மட்டுமே சாடியிருப்பது போன்று தோன்றுகின்றது.ஆகவே,வள்ளலல் பெருமானை இங்குக் கூறுவதாக எனக்குப் புலப்படவில்லை.திருவருள் பெறுவதற்காகவே குரு அருள் தேவை.ஆனால்,இப்போது பலருக்குக் குரு அருளே;திருவருளாகத் தோன்றியிருப்பதை சாடும் வண்ணமே இக்கட்டுரை இருக்கின்றது. ஆகவே,கட்டுரையின் சாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.யார் வந்தாலும், என்ன சொன்னாலும் நாங்கள் அவர்களைக் கும்பிடுவோம் எனபதுதான் சமயமா? இப்படிப் போனால் சமயம் நிலைத்து நிற்குமா?
(நம்முடைய எல்லோருடைய வீட்டிலும் பூஜை அறையில் சாமி படம் இருக்கும். ஒரு ரௌடி வீட்டிலும் நிச்சயம் தெய்வ படம் இருக்கும். குரு வழிபாட்டில் உள்ள யாரும் வன்முறையில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். வேண்டும் என்றால் ஆய்வு செய்து பாருங்கள்.) –சிவம்
யோவ் சிவம்! நீ என்னா சொல்ல வர… நீ சொல்லரத பாத்தா இனி நம் இந்துக்கள் கோயிலுக்கு போய் வழிபட்டாலோ அல்லது தெய்வ உருவங்களையோ படங்களையோ வழிபட்டால் பயன் இல்லைனு சொல்ல வரயா? அப்படினா இந்து மதத்தை மறந்து விட்டு, ஆளாளுக்கு ஒரு குருவை தேர்ந்தெடுத்து குருவழிபாட்டில் ஈடுபட வேண்டும்னு சொல்ல வரயா? நம் முன்னோர்கள், நால்வர், நாயன்மார்கள் எத்தனையோ அடியார்கள் ஞானியர்கள் இவர்கள் எல்லாம் தெய்வத் திருவுருவங்களை போற்றி வணங்கி பக்தி கொண்டு வீடுபேறு முக்தி அடையவில்லையா? இவர்களில் யாரும் குருவையே முழுநேரமா வழிபட்டு அவருக்கு பஜனை பாடி முக்தி அடையவில்லை!
ரேளடி(குண்டர்) வீட்டிலும் நிச்சயம் தெய்வ படம் இருக்கும். அவன் அதை வழிபட்டு திருந்தவில்லை! குரு வழிபாட்டில் உள்ள யாரும் வன்முறையில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்! டோய் அப்படிப் பார்த்தால் கடவுள் எல்லா இடத்திலும் நீக்கமற உள்ளார் என்று சொல்லுறீங்க! அந்தக் கடவுள் அந்த ரௌடி(குண்டர்) செய்யும் அராஜகத்தை தடுத்து நிறுத்தியோ அல்லது ரௌடி(குண்டர்) மனதை ஆட்கொண்டு நல் சிந்தனையை ஏன் உருவாக்கவில்லை என்று நாத்திகர் மாதிரிகூட கேள்வி கேட்கலாமா? குரு வழிபாட்டில் உள்ள யாரும் வன்முறையில் ஈடுபட்டிருக்க மாட்டார்களா? அப்படின்னா குரு கடவுளைவிட உயர்ந்தவரா?
இன்னொருத்தன் சொல்லுறான் குரு வழிபாட்டாளர்கள் நிறைய ஏழைமாணவர்களுக்கு உதவுவதாகவும் நிறைய சமூகப் பணியில் ஈடுபடுவதாகவும். அப்படிப் பார்த்தால் கிருஸ்தவ சமயத்தினர் இதைவிட இன்னும் நிறைய சமூகப் பணிகளை செய்கிறார்கள், அதுக்குன்னு நாம எல்லாரும் கிருஸ்தவ சமயத்தில் போய் சேர்ந்துக்க முடியுமா?
டோய்! இந்த குருமார் வழிபாட்டுக் கூட்டம் நம்ம இந்து சமயத்தை சின்னாபின்னமாக்கப் போகுது! இந்துக்களே மிக மிக கவணம்…..!
நன்றி, நல்ல தெளிவு பிறக்கிறது. இது போன்ற கருத்துக்கள் இன்னும் வந்தால் மேலும் தெளிவு பிறக்கும்.
ஐயா தங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இந்து சமயம் எங்கே எந்த திசை நோக்கி போகிறது என்று புரியவில்லை. தமிழன் விட்டு பிழைகளின் பெயர்களே பாருங்கள் .இன்னும் 20 வருடங்களில் தமிழ் பெயர் எங்கும் இருக்காது. ஐயர் என்ற போர்வையில் ஜாதகம் பெயர் இஸ் புஸ என்று வைக்க சொல்கிறான் . இவர்களே முதலில் உதைக்க வேண்டும்.
கதிர் அவர்களே தமிழர்களுக்கு மதம் கிடையாது . மலாய் காரர்களுக்கும் மதம் கிடையாது , அதனால் தான் அவர்கள் இஸ்லாத்தை இந்த நாட்டின் தேசிய மதமாக பிரகடனம் செய்தனர் . ஆனால் தமிழர்கள் தமிழர்களாகவும் இல்லாமல் ஹிந்துக்களாகவும் இல்லாமல் ரெண்டுகேட்டனாக இருகின்றனர் . ஹிந்து மதத்தில் வேதங்கள் சமஸ்க்ருதத்தில் தான் உள்ளது .
தமிழ் ஹிந்துக்கள் சமஸ்க்ருதத்தை தமிழர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக எளிமையான தமிழில் மொழி பெயர்த்தனர் . என் கணித அடிப்படையில் பிள்ளைகளுக்கு அர்த்தம் இல்லாத பெயர்களை நீங்களே வைத்து விட்டு வாயில் நுழையவில்லை என்று பழியை சமஸ்க்ருததின் மீது போடாதிர்கள் . குரு வாழிபாடு என்பது நாம் பூர்வ ஜென்ம கர்மாவில் இருந்து விடு பட குருவருள் கண்டிப்பாக தேவை அனால் உண்மையான குரு என்பவர் திக்ஷை தர தர்ச்சனை அதிகம் பெற மாட்டார் . தயவு செய்து உண்மையான குரு வழிபாடு என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் . ஹிந்து அல்லாத ஒருவர் தமிழர்களுக்கு
motivitation என்ற பெயரில் வல்ளலாரை பற்றி மேடை போட்டு பேசுகிறார் வாய் பிளந்து கேட்கிறோம் . ஆனால் ஒரு ஹிந்து வேறு மதத்தை பற்றி மேடை போட்டு அந்த மதத்திற்கு முன் பேச முடியுமா ? அவர் இறைவனை தமிழிலோ இல்லை மலாய் மொழியிலே வணங்க வில்லை . மூல மந்திரம் எந்த பாஷையில் உள்ளதோ அதை அப்படியே உள்வாங்கி ப்ராதிகின்றனர் . அதை ஏன் நீங்கள் செய்ய கூடாது . இது முடியாது .அது முடியாது .இது சரி இல்லை .அது சரி இல்லை என்றால் தமிழர்களுக்குள் ஒரு தெளிவு இல்லாமல் பொய் வேறு மத போதகர்களின் வலையில் விழ வேண்டியது தான்!
காரிய குருவுக்கும், காரண குருவுக்கும் வேற்றுமை தெரிந்த சீடரே ஆன்மீகத்தில் வெற்றி பெறுவார் ! ஏமாரும்வரை, ஏமாற்றும் குருக்கள் இருக்கத்தான் செய்வர் !
மங்கை அவர்களே! இந்திய துனைகண்டத்துக்கு பரதேசி கூட்டத்தினராக வந்த ஆரியர்களால்(அதில் ஒரு பிரிவினரே பிராமனர்) இந்திய மக்கள் திராவிடரோ தமிழரோ அவர்கள் கொடுத்த விலை மிக அதிகம்!
பிற இனத்தினர் மீது ஆதிக்கம் செலுத்துவதிலும் கருத்து தினிப்பு செய்வதிலும் ஆரியர்களும்;(அதில் ஒரு பிரிவினரே பிராமனர்) யூதர்களும் கைதேர்ந்தவர்கள்! அதுபோலவே ஆரியர்களின் தென்னாட்டு வருகைக்குப்பின் தமிழர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கைகள் இவைகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது!
மங்கை, ஆரியர்கள்(பிராமனர்) முடிந்தால் யூதர்களைப் போல் உங்கள் தாய் நிலத்தை சொந்த நாட்டை கண்டுபிடித்து அங்கே போய் குடியேறி சொந்த நாட்டை அமைத்து உங்கள் இறந்துபட்ட(வழக்கொழிந்த) மொழியை உயிர்பித்து பேசவும் எழுதவும் செய்யுங்கள்! அதைவிடுத்து தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதிலும் கருத்து தினிப்பு செய்வதிலும் அக்கறை காட்டாதீர்கள்!
தமிழர்களுக்கென்று இருந்த வாழ்வியல் முறை நம்பிக்கைள் இவைகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்ததற்கும் தமிழினம் பாழ்பட்டதற்கும் தமிழரிலிருந்து பெரும் கூட்டத்தினர் மொழி திரிந்து தனித்தனி இனமாக பிரிந்து சென்றதற்கும் ஆரியர்கள்(பிராமனர்) ஒரு முக்கிய காரணம்! ஒரு துணை கண்டத்தில் வாழ்ந்த இனத்தையே குடிகெடுத்த மாபாவிகள் ஆரியர்கள்(அதில் ஒரு பிரிவினரே பிராமனர்)!
முடிந்தால் யூதர்களைப் போல் உங்கள் தாய் நிலத்தை சொந்த நாட்டை கண்டுபிடித்து அங்கே போய் குடியேறி சொந்த நாட்டை அமைத்து உங்கள் இறந்துபட்ட(வழக்கொழிந்த) மொழியை உயிர்பித்து பேசவும் எழுதவும் செய்யுங்கள்! யூதர்கள் தன்மானம் மிக்கவர்கள் அதை சாதித்துக்காட்டினார்கள்! ஆரியர்களால் அது முடியுமா……????
மங்கை ஒன்று நீங்கள் பக்குவபட்டவராக உங்களுக்கு வயது போதவில்லை அல்லது நீங்கள் உங்கள் வழிமுறையில் வந்த வேத மரபை மற்றும் படித்தறிந்து சைவ சமய நெறிகளை படிக்காமல் கருத்து கூறுகின்றவர். இதில் எது சரி என்று நீங்களே சொல்லுங்கள். நீங்கள் தமிழர்களுக்கு சமயம் இல்லை என்ற அறியாமையிலோ அல்லது மயக்கத்திலோ இருகின்றீர்கள் என்பது மட்டும் உண்மை. உங்கள் ஆணவ செருக்கில் இருந்து கொஞ்சம் கீழே இறங்கி வந்து சைவ சமய நெறிகளையும் அறியுங்கள். உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கட்டும்.
manggai.. neengal 100 varusamataan hindu, naanga 2500 varusama tamilar.. un sanskrit bothanaye vera engayavathu vacchikko.. tamil puriyatha kadavul engalukku tevai illai.. guru guru nu alayaranunga, peraasai pudichavanunga.. kovil-lukku pona kadavul pesalayaam.. dei kadavul na enna teriyuma?? kada ull.. unakullataan kadavul irukkaru.. matti..
வணக்கம். குருவை வணங்குவதில் தப்பில்லை. குரு மூலமாக இறைவனை அறிய வேண்டுமே தவிர குருவையே இறைவனாக ஆக்க கூடாது. குரு நம்மை விட சற்று உயர்ந்தவர் ஆனால் இறைவன் மதிப்பிட முடியாதவர். இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.
தமிழர்கள் ஏமாற்றப்படுகிறார்ள் என்பது உண்மை. குரு என்று சொல்லிக் கொண்டு ரி.ம 750.00 மூன்று நாள் பயிற்ச்சி. இந்த பயிற்சிக்கு ஆள் பிடிக்க ஒரு கூட்டம். கஷ்தப்பட்டு உழைத்து சம்பாரிக்கும் பணத்தை மக்கள் கல்விக்கு பயன்படுத்துங்கள். -நன்றி . வணக்கம்
அவன் மண்டையில மயிர் முளைக்க வைக்க அவனாலேயே முடியாது..அவன் கடவுளா? சோம்பேறி பயல்.. உக்காந்த இடத்துல இருந்து, நோகாம புடிங்கி தின்னுறான்..!!!
வணக்கம். மனிதனை மனிதன் வணங்குதல் முறையன்று. குருவென தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் நபர்கள் , அறியா மக்களை ஏமாற்றி வருகின்றனர். பரம் பொருளான சிவபெருமானை வணங்குதலே சரியான மார்க்கமாகும்.
ஐயா கலியுக திடீர் குருமார்களை சத்தியமான வழிகாட்டியாக ஏற்றுகொண்டு வணங்கிவரும், அனைவருக்கும் எனது ஒரு சிறிய கேள்விக்கு தங்கள் குருவை கேட்டு பதில் கூறவும். நான் படித்த மற்றும் கேள்வியுற்ற வரையில் சத்யமான குரு, சித்தர்கள், வழிகாட்டிகள் அனைவருமே தனக்கென எந்த சொத்தும் இன்றி மறைந்தும், ஜோதியாகவும்தான் இறுதியில் அவர்களின் சரித்திரம் முடிந்திருக்குது. எனவே தங்களின் வணங்கத் தக்கவர் நிலை என்ன மற்றும் எப்போது என்று தெரிந்தால் நானும் ஆசி பெறுவேன் குடும்பத்தோடு நன்றி ஐயா.
ஓம் நம சிவாய நமஹ
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்! நம்மில் நிறைய பேர் வீட்டில் சுவாமி படங்களை விட குருமார்களின் படங்கள் எண்ணிலடங்கா! இப்படியே போனால் இன்னும் 1௦௦ வருடங்கள் கழித்து குருமார்கள் தான் கடவுள் என்ற நிலையாகிவிடும். முதலில் நம் சமயம் என்னவென்பதை தெரிந்து கொண்டு “நிற்க அதற்கு தக”…..
ஐயா ஆதி தமிழனே ! நானும் ஒரு குரு வழிபாட்டில்தான் இருக்கிறேன் ! காரண குருவா ? , காரிய குருவா ? என்று உணர்ந்தே அங்கு இருக்கிறேன் ! மக்கள் புற வாழ்க்கைக்கு அடிமையாகி ,ஆடம்பரம் ,பேராசை ,பிணி ,மன உளைச்சலுக்கு அடிமையாகி நொந்து இருப்பதால் ,எளிய முறையில் நிவர்திகான குருமார்களை தஞ்சம் அடைகின்றனர், ஆன்மீகத்தில் சிறந்து விளங்க அதாவது ‘தன்னை அறிய’ குருமார்களை தேடி செல்பவர்கள் மிகச் சிலரே ! மக்களின் எண்ணம் எப்படி இருக்கிறதோ ,அதுக்கு தக்கவாறு குருக்கள் அமைவார்கள் ! தமிழில் ஒரு வழக்கு மொழி உண்டு பூஜைக்கு ஏற்ற பூசாரி ! இன்னும் பல போலி குருமார்கள் தோன்றுவார்கள் என்று எனது குரு அருளி இருக்கிறார் ! உலகம் கலிகாலத்தின் உச்சத்தில் இருக்கிறது ! குருவை அடைந்தோர் குறை இல்லாதார் !குரு இல்லாத வித்தை தேறாது, தேடுங்கள் கிடைக்கும் , நல் ஆசிகள் ஆதி தமிழனே !
வேதனையான உண்மை & சிந்திக்க வைக்கும் கட்டுரை.
அனைவருக்கும் வணக்கம்,
நம்முடைய இந்து சங்கம் ஒரேயொரு கோவிலில் மட்டும்தான் சமய வழிபாட்டை சொல்லித்தருகிறார்கள், மற்ற கோவில்கள் அவர்கள் கண்களுக்கு தெரியாது. இவர்கள் எல்லாம் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள். மற்ற கோவில்களுக்கு சென்று சமயத்தை பற்றி சொல்லிக்கொடுக்கமாட்டார்கள். இவர்கள் இருக்கையில் நாம் எப்படி சமயத்தைப்பற்றி தெரிந்துகொள்வது.
தமிழன் அவர்களே பூமியில் லே முத்த குடி தமிழர்கள் என்று கூரும் நீங்கள் உங்கள் சொந்த தேசத்தை தேடி அங்கே போய் வாழுங்கள் . கல் தோன்றா காலத்திலே முன் தோன்றிய தமிழர்கள் உங்கள் பெருமை பத்திரிக்கையில் தினம் வருது . வாழ்த்துக்கள் . பரதேசிகள் யார் என்று மனசாட்சியை கேளுங்கள் அது சொல்லும் . தேனீ அவர்களே தமிழர்களுக்கு மதம் உள்ளதா இல்லையா என்று உங்கள் தாத்தா பாட்டியை கேளுங்கள் .அவர்களுக்கும் தெரியவில்லை என்றால் உங்கள் திருக்குறளில் பாருங்கள் . தமிழர்களுக்கு மதம் என்று ஒன்று உள்ளதா இல்லையா என்று . ஆதாரம் இல்லாமல் பேச நான் ஒன்றும் முட்டாள் இல்லை . தமிழர்களுக்கு எதுவும் இருக்கும் பொது அருமை தெரியாது . உங்களை பொறுத்த வரை பிராமணர்கள் பரதேசிகளாகவே இருந்து விட்டு போகிறோம் . தமிழர்கள் நீங்கள் நீங்களாகவே இருங்கள் .
மங்கை அவர்களே! உங்களுக்கும் உங்கள் இனத்தவருக்கும் உன்மையிலேயே தன்மானம் இருந்தால் இந்த ‘நீஷ பாஷை’ தமிழ் என்று பிராமனர்களால் சொல்லப்பட்ட தமிழில் தயவு செய்து பேசாதீர்கள்! அப்படியே சதா சர்வகாலமும் தமிழர்களை இழிவாக நினைத்துவரும் காஞ்சி காமகோடி பீடாதிபதிகளையும் ஏனைய தமிழ் பேசும் பிராமனர்களையும் தயவு செய்து சூத்திரர்கள் என்று உங்களவர்களால் இழிவு படுத்தப்படும் தமிழர்களின் தாய் மொழியான தமிழை பேச வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள்! நீங்கள், எங்கள் தமிழர்களின் தற்போதைய நிலையை பற்றி இழிவு படுத்தவோ, கவலைப் படவோ தேவை இல்லை! முதலில் உங்கள் இனத்தவாளான காஞ்சிபுரத்தில் கோவில் மூலஸ்தானத்தில் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து படம் பிடித்து வைத்துக் கொண்டவரையும், காஞ்சி காமகோடி பீடத்தில் நிகழ்ந்த கொலை மற்றும் பாலியல் வல்லுறவு சிக்கல்களையும் தீர்த்துவிட்டு பிறகு தமிழர்களைப் பற்றி பேசுங்கள்! உங்களுக்கும் உங்கள் இனத்தவருக்கும் உன்மையிலேயே தன்மானம் இருந்தால் உங்கள் இறந்துப்பட்ட வழக்கொழிந்த மொழியை உயிர்பித்துப் பேசுங்கள்(யூதர்களைப் போல) அதற்கான முயற்சியில் உங்கள் பொன்னான நேரத்தை செலவிடுங்கள்! பிறகு தமிழர்களைப் பற்றி பேசுங்கள்! (குறிப்பு: மங்கை அவர்களே எனக்கு பிராமனர்கள் மேல் எவ்வளவுதான் அதிருப்தி இருந்தாளும், அவர்களின் புலால் மறுத்தல் கொள்கையை நான் வெகுவாக மதிக்கிறேன்! நானும் புலால் மறுப்பாளனே.)
மங்கை கோபம் வேண்டாம். நான் தங்களவர்களை தாழ்த்திப் பேசும் எண்ணம் கொண்டவன் இல்லை. மற்றவர்களின் குறை கூறலுக்கு நான் பொறுப்பல்ல. எனது 50-வது வயது வரையில் நானும் என் மதம் ஹிந்து மதம் என்று எண்ணி கோவிலுக்குச் சென்று எல்லா தெய்வங்களையும் வணங்கி நீங்கள் சொல்லும் ஒரு சில அடிப்படை சம்ஸ்கிருத மந்திரங்களையும் காது வழி கேட்டு அறிந்து மனதில் நிறுத்தி வைத்திருந்தேன். என் முன் தவப் பயனால் சைவ சித்தாந்தத்தை 50 வயதுக்குப் பிறகு கற்க தொடங்கினேன். நான் ஆறாம் படிவத்தில் விட்ட தமிழ் படிப்பை மீண்டும் தூசு தட்டி எழுப்பினேன். சித்தாந்தம் அறிந்தேன் சிவ நெறிக்குச் சென்றேன். மெய்கண்டச் சாத்திரங்களை படிக்கின்றேன். மெய்நெறியை உணர்ந்து வருகின்றேன். இறைவன், யார், நான் யார், இந்த உலகம் யாது என்று உணர ஆரம்பித்து விட்டேன். இவை அனைத்தும் ஏற்பட்டது சிவ நெறி என்னும் சைவ சமயத்தையே. தொடரும்.
கட்டை விரலை அறுக்க சொன்னது
பொறாமை
பெண்ணடிமை தனம்
முறை தவறான பாலியல் உறவு
பலருடன் பாலியல் உறவு
துரோகம்
நம்பிக்கை துரோகம்
படுகொலை
வஞ்சகம்
சூது
திருட்டு
ஒழிந்திருந்து முதுகில் குத்துவது
போர் தர்மத்திற்குமாறாக போர் செய்வது
மனித படுகொலை
பக்கசார்பு
வன் புணர்ச்சி
பிறர் மனை கவர்வது
மாற்றான் நிலபுலன்களை சூறையாடுவது
பிறர் மீது போர் தொடுப்பது
குருவை கொல்வது
உடன் பிறந்தவர்களை கொல்வது
இனத்தை அழிப்பது
குடும்பத்தை பிரிப்பது
கடவுள்
சாதி
மதம்
மூட நம்பிகைகள
ஏமாற்றுவது
வேற்றுமை
பொய்
புரளி
இயற்கை அழிப்பது
உயிரினங்ககளை வதைப்பது
நாடு கடத்துவது
ஏமாற்றுவது
இன்னும், இன்னும் ஏராளம்…..உழைக்காமல் அடுத்தவன் உழைப்பை சுரண்டுவது …
மங்கை அவர்களே, தமிழன் உங்களுக்குக் கீழாகத் தெரிந்தால் அவன் மொழியில் உள்ள இந்தச் செம்பருத்தி.காம்-ஐ படிக்காமல் ஆங்கிலத்தில்/மலாய் மொழியில் உள்ளவற்றைப் படிக்கலாமே. அதை விடுத்து, எங்கள் இடத்திற்கே வந்து;எங்களையே குறை கூறிக்கொண்டும் உங்கள் பெருமையைப் பாடிக் கொண்டும் உங்கள் முன்னோர்களின் செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டும் இருப்பது முறையல்ல.வேண்டுமானால் உங்கள் பெருமையை உங்களிடத்தவரிடம் பேசுங்கள்!எங்களுக்குக் காது வலிக்கிறது!நாங்கள் நாங்களாகவே இருந்து கொள்கிறோம் நீங்கள் அதைச் சொல்லவும் வேண்டாம் கருத்து திணிக்கவும் வேண்டாம்.நீங்கள் எங்கள் இடத்திற்கு வராமல் இருந்தால் நாங்கள் ஏன் உங்கள் வாதத்திற்கு வரப் போகிறோம்.முதலில் அதை யோசியுங்கள்.நன்றி.
சத்தியமாகச் சொல்லுகின்றேன், என் பாட்டன், முப்பாட்டன் சிவ நெறியை இழந்தர்க்கு உன் பாட்டன் முப்பாட்டனே காரணம். வேத நெறியே சட்டமாகி இருந்த காலத்தில், சூத்திரர்களின் பலவீனத்தால், பிரம்மத்தை அறியும் நெறி வேத நெறியே என்று பாலூட்டி சீராட்டி என் முன்னோர்களிடையே வளர்த்து விடப்பட்டதால், என் முன்னோர்கள் சிவநெறியை மறந்தனர். அல்லது திட்டமிட்டு மறக்க வைக்கப்பட்னர். இதற்கெல்லாம் காரணம், சைவ சித்தாந்தம் தர்க்க வாதத்தின் (Logic) அடிப்படையில் இறைவனுக்கும், உயிர்களுக்கும், உலகத்துக்கும் உள்ள பாசப் பிணைப்பினை (the bondage between GOD, Soul and the world) உணர்த்தியது. சிவ நெறி, வேத நெறிக்கான நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்கவே, உன் பாட்டன் முப்பாட்டன்கள் அக்காலத்தில் ஆலயத்தில் கோலோச்சிய காரணத்தினால், சிவ நெறியை மூடி மறைத்தனர். சிதம்பர ஆலயத்தில் இருந்த தேவார ஓலைச் சுவடிகளை மீட்டு எடுக்க ஒரு அரசனையே தடுத்தி நிறுத்தி வைத்தனர் உன் முப்பாட்டன்கள். இது போதாத சிவ நெறி மறைக்கப் பட்டதற்க்கானச் சான்று. கொசுறு. தாங்கள் பிராமணர், பிராமணர் என்று மூச்சுக்கு ஒரு முறை தம்பட்டம் அடித்துக் கொள்வது ஒன்றும் ஒரு “இனத்தின்” பெயரல்ல. அது வெறும் ஒரு “தொழிற்ப் பெயரே”. பிரம்மத்தை துதிப்பவன் பிராமணன் ஆனான். பறை சாற்றுபவன் பறையன் ஆனான். இதில் பெருமை படுவதற்கும், சிறுமை படுவதற்கும் ஒன்றும் இல்லை. அவரவர் அவரவரின் தொழிலில் நிபுணத்துவம் பெற்றவரே. நாம் இருவர் என்றாவது ஒரு நாள் நேரில் சந்திக்க திருவருள் கூடட்டும்.
மங்கை அவர்களே! இந்திய துனைகண்டத்துக்கு பரதேசி கூட்டத்தினராக வந்த ஆரியர்களால்(அதில் ஒரு பிரிவினரே பிராமனர்) இந்திய மக்கள் திராவிடரோ தமிழரோ அவர்கள் கொடுத்த விலை மிக அதிகம்!
பிற இனத்தினர் மீது ஆதிக்கம் செலுத்துவதிலும் கருத்து தினிப்பு செய்வதிலும் ஆரியர்களும்;(அதில் ஒரு பிரிவினரே பிராமனர்) யூதர்களும் கைதேர்ந்தவர்கள்! அதுபோலவே ஆரியர்களின் தென்னாட்டு வருகைக்குப்பின் தமிழர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கைகள் இவைகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது!
மங்கை, ஆரியர்கள்(பிராமனர்) முடிந்தால் யூதர்களைப் போல் உங்கள் தாய் நிலத்தை சொந்த நாட்டை கண்டுபிடித்து அங்கே போய் குடியேறி சொந்த நாட்டை அமைத்து உங்கள் இறந்துபட்ட(வழக்கொழிந்த) மொழியை உயிர்பித்து பேசவும் எழுதவும் செய்யுங்கள்! அதைவிடுத்து தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதிலும் கருத்து தினிப்பு செய்வதிலும் அக்கறை காட்டாதீர்கள்!
தமிழர்களுக்கென்று இருந்த வாழ்வியல் முறை நம்பிக்கைள் இவைகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்ததற்கும் தமிழினம் பாழ்பட்டதற்கும் தமிழரிலிருந்து பெரும் கூட்டத்தினர் மொழி திரிந்து தனித்தனி இனமாக பிரிந்து சென்றதற்கும் ஆரியர்கள்(பிராமனர்) ஒரு முக்கிய காரணம்! ஒரு துணை கண்டத்தில் வாழ்ந்த இனத்தையே குடிகெடுத்த மாபாவிகள் ஆரியர்கள்(அதில் ஒரு பிரிவினரே பிராமனர்)!
முடிந்தால் யூதர்களைப் போல் உங்கள் தாய் நிலத்தை சொந்த நாட்டை கண்டுபிடித்து அங்கே போய் குடியேறி சொந்த நாட்டை அமைத்து உங்கள் இறந்துபட்ட(வழக்கொழிந்த) மொழியை உயிர்பித்து பேசவும் எழுதவும் செய்யுங்கள்! யூதர்கள் தன்மானம் மிக்கவர்கள் அதை சாதித்துக்காட்டினார்கள்! ஆரியர்களால் அது முடியுமா……???? தமிழா …சரியான அடி….!
சிந்துநதி பள்ளதாக்குக்கு ஆடு மாடுகளை விரட்டிகொண்டுவந்தவர்கல்தான் பார்ப்பனர்கள் .. நம்பதான் வந்தவன வாழவும்வச்சு ஆளவும் வைப்போமே .. அப்புறம் அவன்சொள்ளும் அள்ளிவிட்டான் கதைகளையும் நம்புவோம் ..ஐயா இந்தபக்கம் ஆளையே காணோம் ஆசாமி கோவிந்தா கோவிந்தா ..
ஐயா!
உங்கள் அனைவரின் கருத்துகள் அருமை, அனால் நாம் இப்பொழுது சிந்திக்க வேண்டியது என்ன?
இந்த பாதையில் செல்லும் நம் தமிழர்களின் எண்ணத்தை மாற்ற இந்து மதம் சார்ந்த இயக்கங்களின் பணிகள் யாவை? இவர்களின் திட்டங்கள் யாவை? இதில் நம் பங்கு என்ன?
கேள்விக்கு பதிலை எதிர்பார்த்து நிற்கும் தமிழன்!
நம்மால் முடிந்த அளவில் உதவிகள் செய்ய உறுதியாக முன்வரவேண்டும்.நம் இனம் சிதரிப்போனதட்கு இந்து மத வழிபாடுகள் ஒரு காரணம் என்றால் அதனை விரைவில் சரி செய்ய வேண்டும்! வாருங்கள்!
தமிழர்கள் செய்ய வேண்டியது. முதலில் சமயத்தின் நெறிகளைக் கற்று அறிய வேண்டும். சமயம் என்பது ஆலயங்களில் செய்யப்படும் பூஜை புனஸ்கரங்கள் மட்டும் அல்ல அதற்கும் மேற்பட்டது சமயத்தின் நெறி என்ன என்பதை அறிவது. ஆலய அர்ச்சகர்ளும், ஆலய நிர்வாகங்களும் தன்னலத்துக்காக / சுய வருமானத்துக்காக நடத்தும் பரிகார பூஜைகளை நிறுத்த வேண்டும். அதை தமிழர்கள் நம்பி அத்தகைய பூஜைகளில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும். தமிழர்களியிடையே மூட நம்பிக்கைகளை வளர்க்கும் அர்ச்சகர்களில் நப்பாசை கலந்த வார்த்தைகளையும், அந்த பூஜை செய்தால் இந்த பலன், இந்த பூஜை செய்தால் அந்த பலன் என்ற குருட்டு ஞானத்தை வளர்க்கும் கலாச்சாரத்தை ஆலயத்தில் இருந்து ஒதுக்க வேண்டும். ஆலயம் பணம் பறிக்கும் தளமாக இருப்பதை நிறுத்த வேண்டும். பெற்றோர்கள் சமய நெறி கற்க வேண்டும். பிள்ளைகளும் சமய நெறி கற்க வழிவகுக்க வேண்டும். இதற்க்கு தகுந்த இடம் நமது ஆலயங்களே. இங்கே சமய நெறி அறிந்தவர்கள் நிர்வாகத்தை நடத்த வேண்டும். அர்ச்சகர் சொல்லுவதர்க்கெல்லாம் ஆமாம் சாமி போடும் தலைவர்கள் வேண்டாம். ஒரு ஆலய தலைவனுக்கே சமய நெறி பூஜை புனஸ்கரங்கள் தெரியவில்லை என்றால், அவனை ஏமாத்துவதர்க்கு அர்ச்சகர்களுக்கு சுலபமாக போய்விடும். இதுதான் தற்பொழுது நடந்துக் கொண்டிருக்கின்றது. முதலில் இதை மாற்றுவோம். அடுத்த கட்டத்துக்கு போகும் முன்.
கலை அவர்கள் பிராமண கழிச்சடைகளின் பண்பாட்டை பட்டியலிட்ட்டுள்ளது முற்றுலும் உண்மை. இந்து சங்கம் டத்தோ ஸ்ரீ குரு ஜீ யின் வருமானக்கணக்கை ஆராயும்படி அரசாங்கத்தை வலியுருத்த வேண்டும். டத்தோ ஸ்ரீ பட்டம் வாங்கிய செலவு போக மீத வரிமானம் (கொள்ளை) எங்கே போகிறது?