குரு வழிபாட்டாளர்களே, அதை ஏற்றுக் கொள்பவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி? இந்து மதத்தில் தங்கள் குருவையே முழு வழிபாட்டுக்குறியவராக (கடவுள், பரம் பொருள், வழிபாட்டு தெய்வங்கள் இவைகலெல்லாம் இருக்கும் போது, அவைகளை தவிர்த்து விட்டு) ஆக்கிக் கொள்ளலாம் என்று எந்த வேதத்தில், எந்த சாஸ்த்திரத்தில், எந்த இந்து மத ஆதார நூலில் குறிக்கப்பட்டுள்ளது என்று சொல்ல முடியுமா?
ஆனால் இங்கு பல குருமார் வழிபாட்டு பக்தர்கள் தங்கள் குருவையே முழு வழிபாட்டுக்குறியவராக ஏற்று அவரையே முழு நேரமாக வழிபடுகின்றனரே? அப்படி என்றால் கடவுள், பரம் பொருள், வழிபாட்டு தெய்வங்கள் இவைகளெல்லாம் எதற்கு? பல அருள் மறைகளும் அருள் பாக்களும் தேவார திருமுறைகளும் எதற்க்கு?
இன்று மலேசியாவில் பல கோயில்களில் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பூசை முடிந்தவுடன் பஜனைகள்தான்(அதுவும் பெரும்பாலும் சமஸ்கிருத பாடல்கள்) பாடப்படுகிறது! தேவார திருவாசக திருமுறைகள் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டுவிட்டது! இந்த பஜனைகளை கோயில்களில் வந்து பாடி நம் தமிழ் திருமுறைகளுக்கு ஆப்பு வைத்ததும் இந்த குருமார் வழிபாட்டாளர்களே!
வள்ளலார் கடவுளை அருட் பெரும் ஜோதி வடிவில் வணங்கச் சொன்னார், ஆனால் இன்று இந்த குரு வழிபாட்டாளர்கள் வள்ளலாரையும்(அவர் உருவத்தையும்) ஒரு வழிபாட்டுக்குறியவராக வழிபாட்டுப் பொருளாக ஆக்கி விட்டனர்! இதை நீங்கள் பல வள்ளலார் நிலையங்களில் இங்கு மட்டுமல்ல இந்தியாவிலும் கூட காணலாம்! இதுதான் நீங்கள் உங்களின் குருமாரின் போதனையை பின்பற்றும் லட்சனமா?
இது போன்றுதான் பல குருமார்களின் அருளாலர்களின் சித்தர்களின் உண்மை போதனைகளை விடுத்து அவர்களையே ஒரு வழிபாட்டுக்குறியவராக வழிபாட்டுப் பொருளாக ஆக்கித் திரியுது இந்த குரு வழிபாட்டுக் கூட்டம்!
ஒரு சில குருமார் வழிபாட்டு மையங்களில் தங்கள் குருவின் பாதுகையையே(செருப்பு) வழிபாட்டு பொருளாக்கி அதையே கடவுளுக்கு நிகராக சகல பூசை புனஸ்காரங்களோடு வழிபடுவதை நான் நேரடியாக கண்டுள்ளேன்! இவைகளை எல்லாம் வளரவிட்டால் காலப்போக்கில் நம் இந்து மதம் எங்கே போய் நிற்கும்?
குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வரஹ…! இந்த வசனம் குருநாதரின் மேன்மையையும் அவரின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்குதே அன்றி குருவை கடவுள் என்ற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை!
நான் குருமார்களுக்கோ அருளாலர்களுக்கோ சித்தர்களுக்கோ எதிரானவன் அல்ல! மாறாக பாமர மக்களை குறிப்பாக தமிழர்களை இந்த குருமார் வழிபாட்டுக் கூட்டம் (அரம்பத்தில் இந்த குருமார் வழிபாடு மற்றும் பல்வேறு யோகா தியான பயிற்சிகளை இந்நாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழரல்லாத உயர்தட்டு இந்தியர்களே!) பலிகடாவாக்கி தமிழர்களின் சமய இன அடையாளத்திற்கு அச்சுறுத்தலாகிவிட்டது!
இன்று மலேசியாவில் வாழும் தமிழ் இந்துக்களில் பெரும்பான்மையினர் எதாவது ஒரு குரு வழிபாட்டுக் கூட்டத்திலோ அல்லது யோகா தியான அமைப்புகளிலோ அதுவும் இல்லைனா ஐயா என்ற சிறு தெய்வ வழிபாட்டிலோ மலையாளிகளின் ஐயப்பன் பூஜைகளிலோ ஈடுபட்டுள்ளனர்!
இந்த குரு வழிபாட்டுக் கூட்டத்தினாலும் தமிழ் சினிமா தாக்கத்தினாலும் மலேசிய தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, பெயர்சூட்டும் முறை(தமிழ் பெயர்கள் மாறி டஷ், புஷ் என்ற சமஸ்கிருத மற்றும் அர்த்தமே இல்லாத பெயர் வைப்பது) போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர்!
இப்படியே போய் கொண்டிருந்தால் நம் தமிழர் சமயமாம் சைவ சமயத்திற்கும் தமிழர் இன அடையாளத்திற்கும் மிகப் பெரிய பின்னடைவு காத்துக் கொண்டிருக்கிறது!
அதனால் தான் நான் தொடர்ந்து என் கட்டுரைகளில் திரும்பத் திரும்ப இதே கருத்துகளை வழியுறுத்துகிறேன்!
தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்! நம் சமயத்தையும்(சைவசமயம்) இன அடையாளத்தையும் அடகு வைத்துவிடாதீர்!
இந்து சங்கம் இதற்கெல்லாம் ஒரு நாளும் தீர்வு காண முன்வராது! அவர்களுக்கு ஆரியத்தை தூக்கிப் பிடிக்கவே நேரம் போதாது!
ஆகவே சைவசமயம் சார்ந்த அமைப்புகள் இயக்கங்கள், ஐயா ஆறு நாகப்பன், ஐயா தர்மலிங்கம், சைவசமய அறிஞர்கள், தமிழ் பற்றாளர்கள் அனைவரும் களத்தில் இறங்கி உங்களின் முயற்சிகளையும் உழைப்பையும் இன்னும் அதிகரியுங்கள்! இது எனது தாழ்மையான வேண்டுகோள்!
-கதிர்
தமிழ்ஹிந்து | தமிழரின் தாய்மதம் (google லில் இந்த வலைப்பக்கம் பார்க்கவும் )
http://www.youtube.com/watch?v=PAXLnIykWcs&feature=share&list=PL932DE433842B4B16
ராஜா யோகா தியான இயக்கம் இந்த கட்டுரையை படித்தே தீர வேண்டும். டத்தோ ஸ்ரீ குருஜி பாலகிருஷ்ணன் திருந்தனும்.
ஒரு சிலர் மாற்றம் செய்ய துணிவர். அதை தடுக்க வேண்டாமே.
manggai… hindu tamilarin thai matham endral, aen archanai mattum tamilil irukka koodathu..?? bathil sollungal..
முதலில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும், ஆனால் அது மிகவும் கடினம்.. ஒரு சில தமிழர்கள் அந்த அளவுக்கு தங்கள் குருவின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்..
கஷ்டம், கஷ்டம் என குருவை தேடி போகின்ற மனிதனே எப்பொழுது யோசிக்க போகிறாய்?
எப்பொழுது விழிக்க போகிறாய்?
முதலில் “Anti Guruji ” என ஒரு இயக்கம் ஆரம்பியுங்கள், இருக்கின்ற மற்ற இயக்கங்கள் (மலேசிய இந்து சங்கம் கூட) முயற்ச்சி செய்தும் பலன் இல்லை.. இருந்தாலும் இதை விட்டு விட கூடாது..
குருஜியை பற்றி அறியாமல் நான் ஒன்றும் கூறவில்லை.. அறிந்து தான் சொல்கிறேன்.. ஏமாற தயாராக இருக்கும் மக்களே, உங்களை ஏமாந்த மக்களை கொண்டு மறுபடியும் ஏமாற்ற பார்கிறார்கள்..
இறைவன் ஒருவனே என நினைத்து அவனையே நித்தமும் நினைத்து வணங்கி வந்தால், புண்ணியமாவது கிடைக்கும், அதை விட்டு விட்டு குரு பின்னாலே போனா… ஒரு *********** கிடைக்காது..
இதான் உண்மை.. நானும் குருஜியை வணங்கி இருக்கிறேன், ஆனால் என்று குருவை கடவுளாக பார்க்க ஆரம்பித்தார்களோ, அன்றிலிருந்து தூக்கி எறிந்து விட்டேன்.. இறைவன் இருக்கிறான், அவன் பார்த்து கொள்வான் என்று.
கோவிலில் பேசாத தெய்வம் தான் இருக்கிறது என கூறும் மடையனே.. தெளிவு பெறு…
அவாள் யாகம் வளர்த்து அப்புறம் ராக்கெட் பறக்கும் !!! இல்லன்னா பறக்கும் ஆனா பார்க்காது .. அமெரிக்கா ,ரஷ்யா , சீனா அங்கயும் இவாள் யாகம் வளர்பார்களோ ????
https://www.facebook.com/photo.php?fbid=10201261045555898&set=a.2952424817395.142485.1464653371&type=1&theater
இந்த குருஜிஏ அடிக்கணும்.. ஒரே ஏமாற்றி உலையில போடுறான் படு பாவி.. இந்த பொம்பளைங்களுக்கு பஸ் கிடைச்ச போதும்.. உடனே எரிடுவங்க,,, சோறு தின்னுறத விட்டுத்து பல்பு தின்னுறான் மடையன்,
எல்லோருக்கும் வணக்கம், உண்மையான உண்மை கதிர் , தெய்வங்களை விட்டுவிட்டு இப்பொழுது எல்லாம் /முக்கால்வாசி வீடுகளில் குரு என்று பட்டம் சூட்டி , தெய்வத்தையே மிஞ்சிவிட்டார்கள் , நம் இனத்தவர்கல்தன் தெரியாதா ! ஆர்பாட்டத்தில் மெகா இனமே , இன்னும் 20-30 வருடத்தில் நம் குழந்தைகள் கண்டிப்பாக நம்முடைய பழைய சரிதரத்தை கேள்வி குறியாக ஆக்கிவிடுவார்கள் !!!!!!!!!!!!!!!!!! இந்தகுருக்களுக்கு எங்கே போகிறது புத்தி !!!!!!!!!!!!!????????
நம் இந்து மதத்தில் நிலவும் மூட நம்பிக்கை மற்றும் அயோக்கிய (எந்த குரு உண்மையான யோக்கியமான குரு என்று யாருக்குத் தெரியும்! ரஞ்சிதாவை பொருத்தவரை நித்தியானந்தா உண்மையான குருதான்! அப்படிதான் எல்லா குருமார் வழிபாட்டாளரும் தங்கள் குருமாரை உன்மையானவர் என்று நம்புகின்றனர்!) குருமார்களையே தங்கள் கடவுள் போல் பின்பற்றும் செயல்களை உடனே நிறுத்தாவிட்டால், இந்து மதத்திற்கு ஆபத்து காத்திருக்கிறது!
ஆமாம் நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்…ஆனால், கொஞ்சம் யோசித்து பாருங்கள். நாம் ஜீவன் முக்தி நிலை அடைய வேண்டுமானால் குருமார்களை நாடிதான் செல்ல வேண்டும். சில பேர், குருமார்களின் உண்மையான வழிபாட்டை புரிந்துக் கொள்ளாமல் செயல்படுகின்றனர். எல்லா குருமார்களும் ஒரே விசயம் தான் கூறுகின்றனர். அதை ஒரு சிலர் சரியாகப் புரிந்து கொள்ளாமல் செயல்படுகின்றனர். அவர்கள் தேர்ந்தெடுத்த குருவை மட்டுமே நம்பி கொண்டிருக்கிறது இக்காலம். அதுதான் தப்பு.
நாம் இறை நிலையை அடைய கோவில்கள் மற்றும் தேவாரங்கள் முதற்படியாக விளங்குகின்றது. நான் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால், நாம் கோவிலுக்குச் சென்று உண்மையாக வழிபடுகிறோமா; தேவாரங்களை மனமுறுகி பாடுகின்றோமா என்பது கேள்வி குறியே???
ஆண்டவன் முட்டாள் அல்ல. நாம் ஆண்டவனுக்கு கையூட்டு கொடுக்க தேவை இல்லை. நாம் உண்மையாக நல்ல எண்ணத்தில் ஏது செய்தாலும் அவனுக்கு புரியும் /தெரியும். நாம் தான் இது ஐதீகம் இது இப்படி அது அப்படி என்று அறிவுக்கு ஒவ்வாமல் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறோம். திருக்குரளைவிட வேறு எதுமே இல்லை.
ஆண்டவன்…..!!!
Raj… உங்கள் கருது மிக சரியானது… தமிழரின் வேதம் திருக்குறளாக மட்டுமே இருக்க முடியும். இரண்டடியில் இல்லாத ஒன்றா? எல்லா சமய புத்தகத்திலும் ஒரு முரண்பாடு இருக்கும். அனால் வள்ளுவர் சொன்னது இன்று வரை உண்மை.. கையில் வெண்ணை இருக்க, நெய்க்கு அலையுறோம்..!!
என்னதான் குட்டி கரணம் போட்டாலும், இந்த குருஜி பயலுங்க சம்பாதிக்க பார்க்குரனுங்க.. உண்மையிலே உதவி தேவை படுறவங்க யாரு? 750 வெள்ளியே சடரநம தூக்கி போத்துடு போறவன், கஷ்ட படுரவனா? போங்கடா .. பேராசை புடிச்சவனுங்கள..
அன்பானவர்களே !! உங்களின் கருத்தை படித்தேன் சிந்தித்தேன்,என் மனதில் பட்ட ஒரு சில கருத்துக்களை பரிமாரி கொள்ள ஆவல் படுக்கின்றேன்.முதலில் ஒன்றை செளிவு படுத்தி கொள்ள ஆசை படுகின்றேன் கருத்து பரிமாற்றம் நல்ல விசியம் பல தெளிவுகளுக்கு வித்தாகும் ஆனால் இங்கே சிலரின் கருத்துக்கு சிலரின் முரட்டு தனமான பதில்கள் என்னை சங்கடத்தில் ஆழ்துகிறது.மரியாதை இன்றி நாகரிகம் இன்றி பலரின் கருத்துக்கள்,நாம் பரிமாறி கொண்டு இருப்பது மிக அற்புதமான ஒரு விஷியத்தை பற்றி ஒரு தெளிவை நோக்கி நம் கருத்துக்கள் இருக்க வேண்டுமே ஒழியே நான் சொல்வதுத்தான் சரி என்னும் நோக்கில் இருக்க கூடாது.கற்றது கையளவு கல்லாதது உலகலவு.
சரி நான் என் கருத்தை இங்கு பதிவு செய்கின்றேன்.தெய்வ வழிப்பாட்டை விட குரு வழிப்பாடு நம் மத்தியில் அதிகமாகி போயி விட்டது என்பதே இங்கு குற்றச்சாட்டு,ஏன் இப்படி ஆனது ? எதனால் ? யாரால் ? என்ன காரணம் ? என்கின்ற பல கேள்விகளை முதலில் நான் விடை காண வேண்டும் அதன் பிறகே நடந்து கொண்டு இருப்பது சரியா அல்லது பிழையா என்று ஆராய்ச்சி பண்ண வேண்டும்.
ஆலயங்களை முதலில் பார்ப்போம்,தமிழர்கள் இந்த நாட்டிற்கு வந்த பொழுது முதல் இந்நாள் வரை ஆலயங்களுக்கு மிக முக்கியதுவம் கொடுத்து வந்துள்ளனர்.ஆனால் இன்று நா ம் ஆலயங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி செல்கின்றோம் !! ஏன் ? ஆலயங்கள் ஆலயங்களாக இல்லை என்பதே முதல் காரணம்.ஆலய போதனை முறையாக இல்லை,ஆலயங்கள் சமுதாயத்தின் பிரச்சனைகளை பேசி தீர்க்கும் தளங்களாக மாறவில்லை,இங்கே கருத்து சொன்னாவர்களில் எத்தனை பேர் ஹிந்துக்களின் வேத நூல் பகவத் கீதையை படித்துள்ளேர்கள் சத்தியமாக மனதில் கை வைத்து சொல்லுங்கள் ? 90 சதவிதம் இருக்காது அடிப்படை வேத நூலை படிக்காத ஹிந்துக்கள் நாம் தான்,இதை ஆலயங்கள் முதல் சொல்லி தர வேண்டும் அடிப்படையை விட்டு விட்டு பூஜையில் மட்டும் கவனம் செலுத்தும் ஒரு நிர்வாகமாகவே தற்பொழுதிய ஆலயங்கள் திகழுகின்றன என்பதே உண்மை.ஒரு அழகிய சீன பழமொழி பசியோடு வருபவனுக்கு மீன் பிடித்து கொடுக்காதே,மீன் பிடிக்க கற்று கொடு என்பது போல் பல பிரச்சனைகளை கவலைகளை மனதில் சுமந்து கொண்டு வருபவனுக்கு வழி தீக்கும் தளமாக ஆலயம் திகழ்ந்திருந்தால் எந்த ஒரு குருவையும் எவனும் தேடி செல்ல மாட்டான் எனபதை முதலில் ஆலய நிர்வாகத்தினர் உணர வேண்டும்.குரு என்பவர் ஒரு வழி காட்டி அவரும் வணக்கதிற்கு உரியவர்த்தான் ஆனால் அவரையே கடவுளாக நினைத்து விட கூடாது.வழிகாட்டியின் உதவியோடு பரம் பொருளை அடைய முயற்சிக்க வேண்டும் ..என்பதே என் கருத்து இன்னும் ஆழமாக போகலாம் இன்னும் விரிவாக்கம் செய்யலாம் ஆனால் உண்மையை தேடித்தான் ஒவ்வோருவரும் கண்டு பிடிக்க வேண்டும் அப்பொழுதுத்தான் அது நிலைக்கும் உண்மை நிலையை அறிந்தவர் அமைதியை மட்டுமே கடைப்பிடிப்பார்கள்…
புலி கொடி வேந்தன் நீங்கள் சொல்வது 98% உண்மைதான்.. இன்றைய ஆலயங்களின் நிலை மோசமாகி விட்டது. ஒரு சில ஆலயங்களில் பூஜை சரியாக நடைப்பெறுவதில்லை.
என்ன செய்வது புலிக்கொடி.. நடராஜா போன்ற உத்தமன்கள் எல்லாம் கோயில் தலைவர் பதவியை பிடித்துக் கொண்டு குபேரன் ஆகிவிட்டனர்.. அவர்களுக்கு சமயத்தை விட சம்பாத்தியம் தான் முதல் குறிக்கோள்.. நமது ஜந்து சங்கத்தின் ஜம்பம் அங்கே பலிக்கவில்லை.. நமது கோயிலில் நஜீப்புக்கு கட் அவுட் வைக்கிறான்.. இந்த கண்ட்ராவியை எல்லாம் ஏன் பார்க்க வேண்டும் என்று சாய்பாபாவை நாடினால்.. அங்கே அவருக்கே நல்ல விலை.. இடையில் சங்கு ரட்ச்சை சக்கர ரட்சை வேறு.. சைக்கிள் கேப்பில் ஒரு மாயாஜால சித்தன் எண்கணித நம்பிக்கையில் 730.. அப்பனைக் கூட வனங்காதவன் இந்த முண்டத்தை எல்லாம் போட்டோ மாட்டி வணங்குறான்.. இன்னும் 50 வருடத்தில் இவனுக்கும் ஒரு கோயிலோ சமாதியோ இருக்கும்.. ரஞ்சிதா காதலன் ரி.ம18 ஆயிரம் வசூலித்து அருள் பாலிகிறான்.. ரோட்டுக்கு ரோடு.. அல்லூருக்கு அல்லூரு கோயில்.. திருவிழா என்ற பேரில் ஒரு கூத்து… இந்து சமயம் சிறந்த சமயம் என்றால் சிரிப்பு வருமா வராதா..
புலி கொடி வேந்தன் நீங்கள் சொல்வது 98% உண்மைதான்.. இன்றைய ஆலயங்களின் நிலை மோசமாகி விட்டது. ஒரு சில ஆலயங்களில் பூஜை சரியாக நடைப்பெறுவதில்லை.
சமய போதனைகளைச் சரியாக நடத்தபடவில்லை.
ராஜ் அவர்களே… திருக்குறளும் நம் வாழ்க்கைக்கு முக்கியம்தான்.
ஆனால் சற்று சிந்தித்து பாருங்கள். நம்மில் எதனைப் பேர் 1330 திருக்குறளைப் படித்துள்ளோம்.????
(ஆண்டவன் முட்டாள் அல்ல. நாம் ஆண்டவனுக்கு கையூட்டு கொடுக்க தேவை இல்லை)???
நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்வதில்லையா??
இந்த நாட்டில் மட்டும் மல்ல வேறு எந்த நாட்டிலும் எத்தனை குரு மார்கள் வந்தாலும் அவதரித்தாலும் நமது சைவச் சமயம் ஒருப்போதும் அழியாது .இது ஆணித்தரமான உண்மை 63 நயன் மார்கள் தோன்றிய காலத்திலும் பல பிரச்சனைகளை இந்து சமயம் எதிர் க்கொண்டுத்தனே வந்தது அனாலும் நிலைத்துத்தனே நிக்கின்றது நமது சமயம் சிதறிப் போக குரு வெளிப்பாடு மட்டும் முழுக்காரணம் என்றுக் கூறிவிட முடியாதுங்க ,ஒரு குருவின் நிலை என்ன ,முழுமுதல் கடவுளின் நிலை என்ன என்பதை அரிந்துப் புரிந்துக்கொள்ளும் பொது நமது சமயத்துக்கு எந்த பதிப்பும் வராது.
பரம் பொருள் பரம் பொருள் தான். குரு, குரு மாத்திரமே! அவர் எந்நாளும் பரம்பொருள் ஆக முடியாது. இதை நன்கு புரிந்து கொண்டால்…..இந்த குழப்பம் இல்லை. இதற்கு மேல் என்ன சொல்ல? அப்போ நம்மில் பெரும்பான்மையினர் “புரியாதவர்களா? ….. அல்லது இதுதான் ‘கலி’ யின்
கோலமோ?
கோவில்களில் சைவ சமயத்தை
பற்றி
எதுவும் சொல்லிதரவில்லை. பொய்
சொல்லி எவ்வளவு
காசு பறிக்கலாமா அதை
பிராமணர் உதவிநோடக
நிர்வாகம் செய்கிறது.
ஒரு பகட் பால் கோவில்
விற்று
காசு சம்பாரிக்க
பார்கிறார்கள் தவிர மக்கள் வீணாக
காசு செலவு
செய்கிறார்கள் என வருத்தப்படுவதில்லை.
கோவிலும் மக்களிடம் பயமுண்டக்கி
பணம் பறிக்கும் நிறுவனம்
ஆகிவிட்டது.
சிறந்த படைப்பை சிந்திக்கும் வடிவில் பகிர்ந்தமைக்கு நன்றி. இன்றைய நம் சமுதாய போக்கு தங்களின் பார்வைக்குள் படம் பிடித்துக் காட்டப்பட்டிருப்பது முற்றிலும் உண்மையே. மக்கள் ஏதாவது ஒரு பாதை நமக்கு சிறந்த வழிகாட்டலாக அமையாதா என்ற நப்பாசையில் எதையோ தேடி எங்கெல்லாமோ ஓடுகிறார்கள். நீங்கள் சொன்னதைப் போல மூலத்தை மறந்துவிட்டு. பணம் கொடுத்தால் மூலாதாரத்தையே முட்டி எழச் செய்கிறேன் என்று கூறும் குருமார்களின் கபட நாடகங்களை அறியாமல் மயங்கிக்கிடக்கும் மக்களின் அறியாமை என்று தீரும். பன்னிரண்டு ஆண்டுகள் யோக வாழ்வு வாழ்ந்து சித்தர்களால் பெற்ற குண்டலினி சக்தி பன்னிரண்டு நாட்களில் பயிற்சியின் மூலம் தந்துவிடுகிறேன் என்று கூறுவது ஏமாற்றுத்தனம் என்று மக்களுக்கு ஏன் புரியவில்லை. இங்கு சகோதரர் புலிக்கொடி வேந்தனின் ஆதங்கப்படி ஆலய அச்சாணியின் சுழற்சி சரியாகத் தொடரப்பட்டிருந்தால் மக்களின் குழப்பங்களில் குளிர்காயும் ஏமாற்றங்களைத் தவிர்த்திருக்களாம்.
நம்மவர்களுக்கு சமய பிரச்சனை ஆரம்பிப்பதே ஆலயத்தில்தான். எந்த ஒரு ஆலய அர்ச்சகராவது நமது சமயத்தின் அடிப்படை நோக்கமே “பிறவாக் கடல் நீந்துவதே” என்று கூறியிருகின்றார்களா? நம் உயிர் பிறந்து, இறந்து மீண்டும் அதே வட்டத்திற்குள் வந்து உலகியல் சிற்றின்ப துன்பங்களில் தொடர்ந்து துவண்டு வாழத்தான் வேண்டுமா? எல்லா உயிர்களும் முத்தி அடையும் நிலையில் இறைவன் திருவடி பேற்றைப் பெற்று பேரின்பத்தில் இருக்கத்தானே, இந்த உலகியல் வாழ்க்கை. ஒவ்வொரு உயிரும் பக்குவப்படவே இவ்வுலகில் மீண்டும், மீண்டும் பிறக்கும்படி இறைவன் செயலாற்றுகின்றான். அதை அறியாமல் (அல்லது அறிந்திருந்தும் தன சுய நலத்திற்க்காக) அர்ச்சகர்கள் இந்த பூஜை செய் அந்த பலன் கிடைக்கும், அந்த பூஜை இந்த பலன் கிடைக்கும் என்று ஆரியர்கள் கூறிய வாய் ஜால வார்த்தைகளில் நம்மை மயக்கி இன்றும் யாக பூஜைகளிலேயே நமது காலத்தை ஒட்டிக் கொண்டிருகின்றனர். இவ்வாறு பூஜைகளில் திளைத்திருப்பதே இந்து மதம் என்று ஆரியர்கள் நம்மை வழிநடத்திச் சென்றதாலேயே, வள்ளலாரும் மனம் நொந்து பூஜை புனஸ்கரங்களை விட்டு ஜோதி வழிபாட்டுக்குச் சென்றார். இப்பூஜை வழிபாட்டு முறைகளைத் தவிர்த்து இந்து மதமோ, சைவ சமயமோ இறைவன் பேரின்பத்தை அடையும் நெறிகளை நமக்கு கொடுக்கவில்லையா? இந்த நெறிகளை பிராமணர்கள் தங்களுக்கும் தங்கள் சந்ததியினருக்கும் சொல்லிக் கொடுகின்றார்கள். ஆனால், சூத்திரர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. காரணம், அதை கற்றுக் கொண்டால் நாமும் பிராமணர்கள் ஆகிவிடுவோமே என்ற பயம்தான். ஆகவே, தமிழர்கள் தத்தம் சமய நெறியை (சைவ சமய நெறியை) முதலில் அறிந்து கொள்ளுங்கள். பின்னர் யாரும் உங்களை ஏமாற்ற முடியாது. நீங்களும் இறைவன் திருவடிப் பேற்றைப் பெற முடியும். முயன்றால் முத்தி நிச்சயம் உங்கள் உயிருக்கும் உண்டு. திருநீலகண்டம்.
http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=17095 இதை பார்த்தாவது சமயத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
எல்லாம் சரிதான் ஆனல்…உங்கள் எழுத்தில் கொஞ்சம் ஜாதி வெறி அடங்கிருக்கு என்றே நம்புகிறேன். மலயால தேசம் கடவுள் அய்யப்பன் என்று என்த மடையன் உன்கிட்ட சொன்னான்? புராணத்தை கொஞ்சம் புரட்டி பாருங்கள்! சாஸ்தா, கலியுகத்தின் கடைசி கடவுள் என்றே கூறும். சோழ தேசத்தின் ஓர் பிரிவுதான் பங்களா தேசம் என்றே வரலாறு கூறுகிறது……
கதிர் உங்கே கதை படிச்சி ந டைம் வேஸ்ட் பணிடேன்,…
பரம்பொருள் … நன்றி வேறு , கையூட்டு வேறு.. புரிந்து கொள்ளவும். உங்களுக்கு ஒரு அதிகாரி ஒரு காரியத்தை நல்லபடியாக முடித்து கொடுத்தால் , நன்றி சொல்வதில் தவறில்லையே.. அனால் பணம் கொடுத்தால் தான் கம்பி என்ன வேண்டியதிருக்கும்..
இந்த ஷேன் குருஜியின் அடி வருடி…
தேவன்! உன் பெயரிலேயே ஜாதி வாடை வீசுது! ஆதை முதலில் சரி செய்யி! பிறகு மத்தவங்களைப் பற்றிப் பேசு! உன் புராண புழுகு மூட்டை கதையை எல்லாம் இங்கு அறிவுள்ளவர்கள் யாரும் நம்ப தயார் இல்லை! ஐயப்பன் வந்த உல்ட்டா கதை எங்களுக்கும் தெரியும்! அதெல்லாம் பார்ப்பனர் கட்டிய கட்டுக்கதை! சபரி மலையில் உள்ள ஐயப்பன் கோயிலைக் கட்டியதே திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த பாண்டிய நாட்டுத் தமிழரே! பிற்காலத்தில் அக்கோயில் தமிழினத்திலிருந்துப் பிரிந்துச் சென்ற மலையாள திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது! அதன் பின்பே ஆரிய மலையாள நம்பூதிரிகளின் கட்டுப்பாட்டிற்குச் சென்ற ஐயப்பன், பல ஆரிய பார்ப்பன நம்பூதிரிகள் கட்டிவிட்ட புராண கதைதான் நீங்கள் சொல்லும் ஐயப்பன் புராணம்! எது எப்படியோ ஐயப்பன் ஆரிய மலையாள மயமாக்கப்பட்டுவிட்டான்! அதேபோல தான் திருப்பதி திருவேங்கடனும் தமிழரிடமிருந்து பறிக்கப்பட்டு ஆரிய தெலுங்கு மயமாக்கப்பட்டுவிட்டான்! நம் தமிழருக்கென்று தமிழ் இன அடையாளத்தை பாதுகாக்கும் ஒரே சமயமான சைவசமயம் இருக்கும் போது ஆரிய மயமாக்கப்பட்டுவிட்ட நம்மை மேலும் அடிமைத்தனத்திற்கும் தமிழ் இன அடையாளத்தை இழக்கச் செய்யும் வழிபாடுகள் மற்றும் ஆன்மீகம் தன்மானமுள்ள தமிழர்களுக்கு எதற்கு?
How many of us read Hindu Holly scriptures the Vedas or at least the Bagavad Gita or Thirumurai.
The Vedas clearly said:
Yajurved 19.77
– All humans at all times should have passion only for adoption of truth and rejection of falsehood. This should be a continuous process and one should keep detaching faith from what one discovers to be false and keep attaching faith to what one discovers to be true based on analysis, logic, facts and evidence.
Yajurved 1.5
– All human beings should resolve to accept only truth and reject the falsehood. Even the prayer to Supreme should request only eradication of falsehood and embrace of truth alone. Yajurveda 40.8:
The supreme god should be worshiped and he alone should be worshiped . He is present in everything, fastest and most powerful, pure, omniscient, knows everything, master of all, eternal, self-sufficient and guides us all with knowledge of Vedas.
கடவுள், அதில் பல கடவுள் என சொல்லுறவன் கிறுக்கன்! ஒரே கடவுள், ஒன்றே குளம், ஒரே மதம், ஒருவனே தேவன், அவனே இறைவன்!
என்னுடைய பதிவை ஏன் போடவில்லை??
ஆம். நானொரு ஹிந்து என்பதில் மிக மிகப் பெருமிதம் கொள்கிறேன். பெருமிதம் கொள்வதை விட, நான் ஒரு ஹிந்துவாகப் பிறந்ததில் மிக மிக, மிகுந்த அதிர்ஷ்டசாலி என நினைக்கிறேன்.
நான் ஏன் அவ்வாறு உணரக் கூடாது? கோடி ரூபாயை ஒரு அதிர்ஷ்டப் போட்டியில் ஜெயித்தால் மக்கள் எப்படி பித்துப் பிடித்துப் போவார்கள் மகிழ்ச்சியில்? அவ்வாறிருக்கையில் இப்படி பலப் பல அதிர்ஷ்டப் பரிசுகளைக் காட்டிலும் மிகவுயர்ந்த ஒரு பரிசினைப் பெற்ற நான் பின் ஏன் அவ்வாறு மகிழக் கூடாது? “அவன்” என்னை ஒரு ஹிந்துவாகப் பிறப்பித்து இருக்கையில் எனக்கு அவனிடம் கேட்பதற்கு வேறெதுவும் இல்லை. இந்த மாபெரும் நன்றிக்கடனுக்கு செய்மாறு செய்வதே இனி என் பணி. ஹிந்துத்துவம் எனது மிகப்பெரும் பொக்கிஷமாகும்.
ஓ! என்னைத் தவறாக எண்ணிவிட வேண்டாம். எனக்குப் பிற மதங்களின் பால் எந்தவொரு வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ இல்லை, இல்லவே இல்லை. மாறாக, நான் அவற்றை முழுமையாக மதிக்கிறேன். ஒரு தனிமனிதன் எந்தவொரு மதத்தினையும் இவ்வுலகிலோ பிறவுலகிலோ யார் என்ன சொல்வார்களோ, செய்வார்களோ என்றெல்லாம் கவலையுறாமல் பின்பற்றக்கூடிய சுதந்திரத்தை நான் மிக மதிக்கிறேன். மேலும், நான் மனிதனின் இத்தகைய சுதந்திரத்தைப் பேணுவதற்கு உறுதுணையாகவும் இருப்பேன். இது, இந்த ஹிந்து மதத்தின் தலையாயக் கோட்பாடு தான் நான் ஒரு ஹிந்துவாக இருப்பதில் மிகப் பெருமிதம் கொள்ள வைக்கிறது.
அனைத்து தத்துவங்களும், மதக்கோட்பாடுகளும் மிக நல்லவைகளை தன்னகத்தே கொண்டுள்ளன என்பதை மறுபபதற்கில்லை. ஹிந்துமதம் உங்களுக்கு ஏன் மிகச் சிறந்ததாக இருக்கும் என்றும் நான் விவாதிக்க முற்பட மாட்டேன். அது உங்கள் தனிப்பட்ட தேர்வு. நான் இங்கே சொல்ல விழைவதெல்லாம் எனக்கு ஹிந்துமதம் ஏன் ஒரு தனிப்பட்ட விருப்பமாயிருக்கிறது என்பதைப் பற்றியே.
ஹிந்துமதம் (அல்லது) சனாதன தர்மம் என்பது ஒரு வாழ்வியல் முறை, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெருமை கொண்டது. நான் ஒரு ஆயிரம் முறை இறக்க நேரிட்டாலும், நான் மறுபடி ஒரு ஹிந்துவாகப் பிறப்பதையே மிகவும் விரும்புவேன். என்னை ஒராயிரம் முறை மதமாற்றம் செய்யும்படி சாவைக் காட்டி பயமுறுத்தினாலும் ஹிந்துமதத்தை விடுவதை விட சாவதையே தேர்வு செய்வேன்.
முதலில் ஹிந்துத்துவம் என்பது ஒரு மதமே அல்ல. அது ஒரு தத்துவமும் அல்ல, கோட்பாடும் அல்ல. மதம், தத்துவம், கோட்பாடு இவைகளெல்லாம் நேரம் சார்ந்த, குறிப்பிட்ட, எல்லைகளுக்குட்பட்டது.
மாறாக, ஹிந்துத்வம் என்பது “மனிதனாக இருப்பதற்கான கொண்டாட்டம்” ஆம். மனிதனாய் இருப்பதை நியாயப்படுத்துவதே ஹிந்துத்வம். மனிதனாய் இருப்பது என்பதன் நேர் அர்த்தம் தான் ஹிந்துத்வம். நான் நான் ஏன் ஒரு ஹிந்து என்று பெருமிதம் கொள்கிறேன் என்பதற்கு ஒரு சில காரணங்களைச் சொல்கிறேன்.
காரணம் 1 – ஹிந்துத்வம் – மிகப் பழமையான ஞானம்
ஹிந்துமதம் என்பது மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான ஞானக் கருவூலமாகும். ஒரு குறுகிய நோக்கில் மக்கள் இதை “ஹிந்து மதம் உலகின் பழமையான மதம்” என்பார்கள். உண்மையில் மதம் என்ற பிரிவில் மக்களைப் பாகுபடுத்தும் வழக்கம் ஏற்படுவதற்கு முன்னரேயே ஹிந்துத்வம் இருந்து வந்திருக்கிறது.
இம்மதத்தின் சாரம் மனித நாகரிகத்தின் அதி உன்னதமான, அற்புதமான வேதங்கள் நான்கில் உள்ளது. (வேதங்கள் எனப்படுபவை நான்கு மட்டுமே ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண என்பன). வேதங்கள் மட்டுமே அறிவியல்பூர்வமான முறையில் பாதுகாக்கப் பட்டுள்ளவை. எப்படியென்றால் ஒரு சிறிய வார்த்தையைக் கூட பிறழச் செய்வதோ, இடைச் செறுகல் செய்வதோ, மாற்றியமைப்பதோ இயலாத ஒரு தனித்துவமான முறையில் பாதுகாக்கப் பட்டவை. மேலும், வரலாற்றில் எங்கும் இவ்வேதங்கள் இவ்வாறு உருவாக்கப்பட்டவை என்ற ஒரு ஆதார கோர்வை காணப்படவில்லை, அதாவது, இவற்றினை இன்னார் இன்ன முறைப்படி தொகுத்தார், ஏற்ப்டுத்தினார் என்ற வகையில். மேலும் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட இம்மந்திரங்கள் இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்கையில் அதற்கு முன்னமேயே இருந்து வந்திருக்கிறது என்று புலனாகியது.
இவ்வேதங்கள் ஹிந்துமதத்தின் ஆணிவேராகும். வேதங்கள் மட்டுமே எவ்வித விவாதத்திற்கும் எதிர்நோக்கப்படும் ஆதாரமாகும். ஒருவர் வேதங்களைப் படிக்கையில் மிகச்சிறந்த ஞானமும், அறிவுசார் கொள்கைகளும், உன்னத வாழ்வியல்களும் எந்த ஒரு நிலப்பரப்பையும் சாராமல், வரலாற்றையும் ஒழுகாமல், கால நிர்ணயமின்றி, ஒரு வகை மக்களுக்காக என்றெல்லாம் இல்லாமல், அனைவருக்கும், எப்போதும், எந்நேரமும் சார்புடையதாகவும், பொருளுடையதாகவும் இருப்பதைக் காணலாம்.
இப்போதைய நவீன யுகத்தில், புதுவித மதங்களின் தோற்றத்திற்குப் பிறகு, தங்களுடையது “மட்டுமே” சிறந்த மதம் என்று நிலைநாட்டுவதற்காக இந்நான்கு வேதங்களைக் குறை கூறவும், குதர்க்கம் கண்டுபிடிப்பதற்கும், தப்பர்த்தம் செய்து கொள்வதற்கும் முனைந்ததால் ஒரு சாமானியனுக்கு எது சரி, எது தவறு, ஹிந்துத்வம், வேதங்கள் இவையெல்லாம் சரியானவை தானா இல்லை இவைகளும் மற்றுமொரு பிதற்றலா என்று பிரித்தாள முடியாமல் தவக்க ஏதுவாகியது.
ஆனால் இவற்றிற்கும் வேதங்களே உதவிக்கு வருகிறது, அதுவே நான் ஹிந்துவாக இருப்பதில் மிகப் பெருமிதம் கொள்ளும் இரண்டாம் காரணமாகிறது.
காரணம் 2 – ஹிந்துத்வம் – ஒரு ஞானம் மிகுந்த வாழ்க்கை முறை
வேதங்களே, ஒருவர் புத்தக ஞானத்தைக் கொண்டு “உண்மையைத்” தேட முயலுதல் கூடாது என்று அறிவுறுத்துகிறது, அது வேதங்கள் சார்ந்த புத்தகங்களாக இருப்பினும் சரி, அவற்றைக் கண்ணை மூடிக்கொண்டு நம்புதல் கூடாது. வேதங்கள் சொல்வதென்னவெனில் “வேதங்களின் ஞானமானது ஒருவரின் எண்ணங்களில் ஏற்கனவே இயைந்திருக்கிறது. மனித வாழ்க்கையின் குறிக்கோளே நல்ல செய்கைகள், (பொய்ப் பகுத்தறிவு அற்ற) விவேகமான நற்சிந்தனை மற்றும் ஆக்கபூர்வமான உணர்வுகள் கொண்டு இஞ்ஞானத்தை உணர்வது தான். புத்தகங்கள் என்பது இவ்வழியில் உதவுவன மட்டுமே.
உண்மையில் வேதம் என்ற சொல் “வித்” என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது. வித் என்றால் ஞானம் அல்லது அறிவு எனப் பொருள்படும். ஒருக்கால் வேதங்கள் என்பனவற்றை அறவே அழித்து விட்டாலும் கவலையில்லை, ஒருவர் மேற்சொன்ன மூன்று விவேகமான நற்சிந்தனை, நல்ல செய்கை மற்றும் ஆக்கபூர்வமான உணர்வுகளின் பால் கவனம் செலுத்தினால் போதும், சமகாலத்தில் வாழ்ந்து வரும், முன் வாழ்ந்த சான்றோர்கள் கூற்றுகளின் உதவியுடன் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஞானத்தை மறுபடி அடைய முடியும்.
வேதங்கள் நல்லவேளையாக அழிக்கப்படவில்லை, எனவே அவற்றை அறிவதன் மூலம் ஞானமடைவதை சிறிது விரைவாக முயலலாம்.
வேத மந்திரங்கள் அதன் பொருளை உணர்ந்து சொன்னாலும் இல்லையென்றாலும் மருத்துவ, உளவியல் ரீதியாகவும் பயனளிப்பதாய் இருக்கிறது. ஆனால் வேதங்கள் உண்மையை தேடுவோர்க்கும், அதன்படி வாழ முற்படுவோர்க்கும், உண்மையை உணர்ந்தோர்க்கும் வெகு துணையாயிருக்கிறது.
வேதங்கள் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய சூரியன் அல்லது தண்ணீர் போன்றவை. அதிலும் யார் அதனை ஆழ உணருகிறாரோ, அவர் பிறரின் வாழ்வையும் கற்பனைக்கெட்டாத வண்ணம் ஒளிமயமாக்க முடியும்.
வேதங்கள் மற்றும் ஹிந்துத்வம் வலியுறுத்துவது இத்தகைய ஞானத்தை அடைவது மட்டுமே, ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையையோ அல்லது ஒரு குறிப்பிட்ட புத்தகத்தையோ அல்லது புனித-வசனத்தையோ அல்ல!
காரணம் 3 – ஹிந்துத்வம் – நேர்மையான விரிவடைந்த வாழ்க்கை முறை
ஒரு முஸல்மான் ஆனவர் குரானை ஒதுக்கி வைப்பதன் மூலம் முஸல்மான் ஆக முடியாது என நினைக்கிறேன். அதே போல ஒரு கிறிஸ்துவர் பைபிளை நிராகரிப்பதன் மூலம் கிறிஸ்துவராக முடியாது. ஆனால், ஒருவர் ஒரு வேளை தன் சிந்தனை இயல்பிற்கேற்ப, வேதங்களை நிராகரித்தாலும் கூட அவர் ஹிந்துவாக இருக்க முடியும்.
ஒரு ஹிந்துவாக இருப்பதற்கு உங்களுக்கு எந்தக் கோவிலும் தேவாலயமும் தர்ஹாவும் சான்றிதழ் தரத் தேவையில்லை. நீங்கள் எந்தவொரு புனித வசனத்தையும் படிக்க, ஒப்பிக்கத் தேவையில்லை, நீங்கள் எந்த ஒரு கடவுளையோ அல்லது புனித-புத்தகத்தையோ நம்பத் தேவையில்லை, ஆம், நீங்கள் உங்களளவில் உண்மையுள்ளவராக, நியாயமுள்ளவராக இருத்தல் மட்டுமே போதும்.
ஹிந்துத்வம் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் தனித்துவம் மிக்கவர்கள் என்று திடமாக நம்புகிறது. எனவே நம் தேவைகளும் விருப்பங்களும் கூட மாறுபடுகிறது. எனவே, ஒரு மனிதனை ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைகளை வைத்து எடை போடுவது என்பது அடி முட்டாள்தனம். ஹிந்துத்வத்தின் குறிக்கோள் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையையோ, புத்தகத்தையோ, கடவுளையோ, அவதாரங்களையோ, அல்லது இறைத்தூதர்களையோ வற்புறுத்துவதல்ல. அதன் குறிக்கோள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்திலும் அவரவர் இயல்புக்கேற்ற ஒரு அடிப்படையை ஏற்படுத்துதல் மட்டுமே. நாம் எப்படி குழந்தைகளாக இருக்கையில் வாய்ப்பாட்டும், வாலிப வயதில் அறிவியல் போன்ற துறைகளில் மேற்படிப்பும் படிக்கிறோமோ அதே போல ஹிந்துமதம் வெவ்வேறு வாழ்க்கைக் கட்டத்தில் வெவ்வேறு மனிதருக்கு எது மிகுந்த இயல்பானவொன்றாய் இருக்கிறதோ அதை சர்வ-சுதந்திரத்துடன் பின்பற்றி அதன் மூலம் முன்னேற உற்சாகப் படுத்துகிறது. ஒரு முதிர்ச்சியடைந்த மேற்படிப்பைப் போலவே அனைவரின் தனித்தனி தேவைக்கும் ஏற்ப தேவையானதை வழங்குகிறது. எங்கோ கோடியில் உள்ள கிராமப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால் மாணாக்கர்கள் மறுபடி மறுபடி படித்ததையே மனப்பாடம் செய்யச் சொல்லும் பள்ளி அல்ல ஹிந்துமதம்.
இத்தகைய வேறுபாட்டினை சுதந்திரமாக தேர்வு செய்யவும், பயமின்றி அதில் பயணப்பட்டு நான் என்னை வளர்த்துவதற்கும் ஹிந்துமதம் பரிபூர்ண சுதந்திரம் தருகிற படியால் நான் இஃதை எந்த ஒரு வாழ்வியல் முறை, மதங்களை விடவும் மென்மேலும் மனிதத்தன்மை மிக்கதாய், சுதந்திரமானதாய், நேர்மையானதாய், எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கையானதாய் உணருகிறேன்.
காரணம் 4 – ஹிந்துமதம் – உண்மையில் உலகளாவியது
எந்தவொரு மதப் புத்தகமும் ஒரு நிலப்பரப்பைச் சார்ந்தே இருக்கிறது. உதாரணத்திற்கு ஜுடாயிஸம், கிறிஸ்துவம், இஸ்லாம், இவையனைத்தும் மத்திய கிழக்கு நாடுகள் சார்ந்தவையாக உள்ளது. இதன் கதைகள், விழாக்கள், வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் அனைத்துமே அந்நாட்டு முறைப்படியே உள்ளன. இது ஒரு இலக்கியவாதிக்கு தனிச்சுவை அளிப்பதாய் இருப்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஹிந்துமதத்திலும் சில புத்தகங்களுண்டு – புராணங்கள், ராமாயண-மஹாபாரதங்கள் இவை – இவற்றில் ஆழமான இந்தியத் தன்மையிருப்பதைக் காணலாம். பார்க்கப்போனால் இப்புத்தகங்களில் இருக்கும் கருத்தாழமோ, மொழியாழமோ, ஞானமோ காலக்ரமத்தினால் ஏற்பட்ட இடைச்செறுகல்கள் பல இருந்த போதிலும் நாமனைவரும் இந்தியர் என்பதில் வெகு பெருமிதம் கொள்ளத் தக்கதாய் இருக்கிறது, வரலாற்று பூர்வமாக நாம் பெருமைப் படும் விதமாக இவை இருக்கின்றன.
ஆனால் ஹிந்துமதத்தின் சாரமாகிய வேதங்களோ உலகளாவியது, கால-நேர மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. உண்மையில் வேதங்களே உலகளாவிய ஞானத்தின் சாராம்சமாகும். ஆனால் ஒப்பாரில்லாத இன்ன பிற நூல்களாகிய யோக தர்ஷன், ந்யாய சூத்ரம், வைஷேஷிக தர்ஷன், சாங்க்ய தர்ஷன், வேதாந்தம், உபநிஷத், பகவத் கீதை – இன்னும் பலப்பல உண்டு, தமிழில் நம் திருக்குறள் ஒன்று போதாதா? – இவை உலகளவிலுள்ள இலக்கியவாதிகள் மட்டுமன்றி அறிவியலாளர்கள் பலரையும் வியப்பிலாழ்த்தியிருக்கின்றன, தன்பால் ஈர்த்துள்ளன. இவற்றில் எதுவும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பைச் சாராமல், இந்தியா, கிழக்காசியா, மத்திய கிழக்கு நாடுகள் என்றெல்லாம் இல்லாமல், மேலும் ஒரு பழமை நெடி அடிக்காமல் என்றென்றும் புத்தம் புதியனவாய் இருக்கின்றன. இப்புதுமை என்னை பெருவியப்பில் ஆழ்த்துகிறது, மிகுந்த ஆசையுண்டாக்குகிறது!
இப்புத்தகங்களிலிருக்கும் வாக்கியங்கள் ஆஸ்திரேலியாவிலிருக்கும் ஒருவருக்கு எப்படிப் பொருந்துகிறதோ அதே போல ஆப்பிரிக்காவிலிருப்பவருக்கும் அண்டார்ட்டிகாவிலிருப்பவருக்கும் கூட பொருந்தும். ஹிந்துமதத்தின் மற்றைய புத்தகங்கள் முறையே இவ்வுலகளாவிய உண்மைகளை பிரதிபலிக்கவும், ஒரு குறிப்பிட்ட கால-நேரத்திற்கு உட்பட்டு விளக்கிச் சொல்வதுமாகவே இருக்கின்றன (உதாரணம் – இதிகாசங்கள் இரண்டும்).
காரணம் 5 – ஹிந்துத்வம் – கொள்கையே பெரிதன்றி பரப்புபவர்களல்ல!
ஒரு க்றிஸ்துவர் இயேசுவை நம்பாத வரை க்றிஸ்துவர் என்று அறியப்படுவதில்லை, அதேபோல ஒரு முஸல்மான் நபிகள் (ஸல்) நாயகத்தை இறைவனின் கடைசித் தூதர் என்று நம்பாவிடில் அவர் இஸ்லாமியராக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இவ்விரண்டு வழிகளிலும் எத்தனையோ நற்பண்புகள் காணப்பட்டாலும் ஒருவர் இவற்றைப் பின்பற்ற வேண்டுமானால் அடிப்படையில் இவ்விரு இறைத் தூதர்களையும ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
இவ்வகை நம்பிக்கைகளில் ஒரு ஒழுங்கின்மையைக் கொண்டு வர இத்தகைய நம்பிக்கைகள் பெரிதும் உதவினாலும், இதன் நன்மை-தீமை பற்றிய விவாதத்தில் இறங்கப்போவதில்லை நான்.
ஆனால் என்னைப் பொறுத்த வரை ஹிந்துமதத்தில் ஒரு தனித்துவத்தின் மரியாதையும், அதைக் கொண்டாடும் இயல்பும் வெகு இயல்பானதாய் இருக்கிறது, மேலும் என்னை ஒரு சிறந்தவனாகவும், தனித்துவம் மிக்கவனாகவும் ஏற்றுக் கொள்கிறது. வற்புறுத்தலின் பேரில் எந்தவொரு கருத்தும் திணிக்கப் படுவைதில்லை இங்கு. ஒரு குறிப்பிட்ட நபரின் எழுத்துக்களோ, பேச்சோ, செயல்களோ என்னை கண்மூடித்தனமாய் நம்பச் சொல்வதில்லை. மாறாக, அத்தகைய நபர்களையும் அவர்கள் சொல்வதில் நியாயம், உண்மை இருப்பின் அரவணைத்து கொள்வதாய் உள்ளது.
உண்மையை மட்டுமே வற்புறுத்துவதால் ஹிந்துமதம் எந்தவொரு தனி-மனிதரையும் ஒருங்கேயோ அல்லது கட்டாய தேவையாய் நம்பவோ சொல்வதில்லை. ஆம், நம்மில் பலர் கிருஷ்ணரையும், ராமனையும், ஹனுமனையும், சிவபெருமானையும், காளி-துர்க்கைகளையும் வணங்கலாம். சிலர் ஒரே இஷ்ட தெய்வத்தையும், சிலர் பலரையும், அனைவரையும் வணங்கலாம். பலப்பல கடவுளர்களும், ஏன் சமீப காலதிற்குட்பட்டவர்களையும் (உதாரணம், சந்தோஷி மாதா, சாய் பாபா போன்றோர்). இன்னும் சொல்லப் போனால் ஒரு சிலருக்கு இது ஒரு பணங்காய்ச்சி மரமாகவும் ஆகிவிட்டது, ஒரு புதிய கடவுள், மனிதர் போன்றவரை நிலைநிறுத்தி மக்களை மயக்கிப் பணம் கறக்கும் ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. இருப்பினும், இது ஹிந்து மதத்தின் ஒரு பலவீனமாகப் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.
ஆனால் இது முழுமையானதல்ல. உண்மையில், ஹிந்துமதம் கட்டுக்கோப்பின்றி, வெறுமனே வழிமொழியாமல் சுதந்திரமாக ஒன்றைத் தேர்வு செய்யத் தூண்டுகிறது. ஹிந்துமதத்தைத் தூற்றுபவர்கள் வசதியாக மறப்பது என்னவென்றால் ‘ஹிந்துமதம் ஒன்று மட்டுமே வெறும் கொள்கையை மட்டும் கூட வணங்கச் சொல்வது”. மேலும், சிலையை வணங்குவதாய் குற்றம் சாட்டப்படுபவர்கள் கூட சிலை வணங்குதல் என்பது வெறும் முதற்படி, முடிவென்பது கொள்கை / தத்துவத்தை உணர்வது மட்டுமெ என்று நன்கறிந்தவர்களாகவே உள்ளனர்.
ஹிந்துக்களில் மிகப்பலர் உருவமில்லாக் கடவுளை நம்புபவர்களாக உள்ளனர். பலர் நாஸ்திகவாதிகள். இன்னும் பலரோ வெறும் கொள்கைகளைப் போற்றுபவர்கள் – உதாரணம் – பொறுமை, மன்னிப்பு, சுயக்கட்டுப்பாடு, திருடாமை, புனிதம், புலனடக்கம், ஞானமடைதல், அறிவாலுயர்தல், நேர்மை, அஹிம்சை, புறங்கூறாமை, உண்மை மட்டும் பேசுதல் – போன்றன.
எனவே, உங்களால் எந்தவொரு அவதாரத்தை நம்ப முடியாவிட்டாலும், எந்த கடவுள் தத்துவத்தை ஏற்க முடியாவிட்டாலும் ஹிந்துவாக முடியும். நீங்கள் நேர்மையானவராக இருத்தல் வேண்டும், யாரிடமும் இதற்காக சான்றிதழ் வாங்கி வரத் தேவையில்லை!!
இந்த ஒரு காரணத்தினாலேயே ஹிந்துமதத்தில் மட்டும் பலப்பல மாற்றமூட்டும் இயக்கங்கள் தோன்றின. பலப்பல கல்விச் சாலைகள் இதற்காகவே ஏற்பட்டு அவை மற்ற கல்விச் சாலைகளை விவாதிக்கவும், ஏசவும் செய்தன. ஆனால் இவற்றால் இவர்கள் யாரும் ஹிந்து-அல்ல என்றாகவில்லை. மாறாக, மிக இயற்கையான முறையில் ஹிந்துமதத்தினுள்ளேயே அவர்களின் புகலிடம் அமைந்தன.
ஒருவகையில் சுதந்திரம் என்பது சில சமயம் கட்டவிழ்த்து விட்டது போலாகி, மக்கள் தங்கள் நிலையறியாமல் கொடுமைகள் புரிதல், அடாவடித்தனம் போன்றவைகளை செய்ய ஏதுவானாலும், சுதந்திரம் என்பது பெயர் மாத்திரத்தில் கெடுதல் அல்லவே? சுதந்திரம் என்பது ஒரு பொறுப்புணர்ச்சியுடன் கூடியது என்று நிலைநிறுத்துதல் அவசியமாகிறது, இதுவே நமக்கு சுதந்திரம் என்பதை இன்னமும் அர்த்தமுள்ளதாக்கத் தோன்றுகிறது.
ஹிந்துமதம் இவைகளை புத்தியாலும் விவேகத்தாலும் தீர்க்க விழைகிறது. இதனாலேயே ஹிந்துமதம் என்பது ஒரு நிலையான ஜடப்பொருள் போலல்லாது, எப்போதும் பொங்கி வருவதாயும், எப்போதும் புத்துணர்வுடன் கூடிய மாற்றாகவும் ஆக்குகிறது. இதுவே என்னையும் ஒரு ஹிந்துவாக இருப்பதில் மிகுந்த ஆர்வத்தையும் அன்பையும் அளிக்கவல்லதாய் இருக்கிறது!
The GOD is the highest GURU, but the person of a guru is not god. If you don’t know the distinction, very likely you will get involved with personality worship and begin to venerate your guru as god incarnate. Seriously take note, we had only a few incarnation and their numbers said to be predetermined. We should not therefore equate a guru as an incarnation of god and worship him as such. Vedas have clearly mentioned this many times.
If you wish to choose a guru, do it in CAUTION just as you would select a doctor. In case of a guru you may have to be even 1000 times more careful because the consequences and their lasting effect. A pretentious guru will delay your salvation for many lives to come. Many lives are wasted by fake spiritual guru, ‘ playing upon others’ religious sentiments and misleading them into total submission. Imagine spending your whole life with a spiritual guru only to realize in the end that all the while you were chasing mirage.
Many who surrender to the whims of guru are destroyed forever. Some persist on the path even after they come to know about them.
They refuse to acknowledge truth even after seeing inconsistencies and disturbing signs in the conduct of their guru. As if propelled by fate, they willing to follow perilous path that culminates in their self-destruction. Most of the time, we come into grip of false spiritual master because of previous karma. The false guru interfere with our spiritual progress. They create lot of confusion in our minds and lead us astray. With our limited knowledge and faculties, it is difficult to know the spiritual guru…mean the fake guru’s.
The diversity of SANATANA DHARMA and its antiquity, coupled with the absence of a CENTRALIZED religious authority, create ample opportunity to the pretentious and the dubious people to pose as spiritual master. The false master dupe gullible people and do irreparable damage to society and the humanity in the name of god and religions.
Many religious people who do not believe in the need of guru ( Middle man between you and god). There is nothing new in what the spiritual master/guru teach. Everything is already in scriptures. The guru just add their personal touch and brand name and pass it on as their own.
Many spiritual master encourage personality cult and blind following. They do not clarify rumors about their miraculous powers or clear people doubt. They deliberately distort their past achievements and allow people to engage in rumors and gossip to let their past remain mystery. Almost all the spiritual master seek wealth and political power to promote them selves and their interest. It is not easy to distinguish the one genuine from another by their teachings because outwardly they follow the same traditions and speak the same language.
Choosing false spiritual master can seriously diminish one’s chances of salvation. Having trust in GOD is always helpful, but taking certain precautions about one’s own spiritual life is prudence, especially in a world where truth is not what it seems to be…
சிவி, இவ்வளவு நீண்ட கருத்தை எழுதுவதற்குப் பதிலாக “ஹிந்துத்துவத்தின் மகத்துவம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்து வலையேற்றி இருக்கலாமே? “உங்களால் எந்தவொரு அவதாரத்தை நம்ப முடியாவிட்டாலும், எந்த கடவுள் தத்துவத்தை ஏற்க முடியாவிட்டாலும் ஹிந்துவாக முடியும்” என்ற தங்களின் கருத்து இடிக்கின்றதே? யாவரும் ஒரு நெறியை தனது மெய்நெறியாக ஏற்காமல் எப்படி அந்த நெறியில் சார்ந்து இருக்க முடியும்? ஒரு இந்துவை ‘வா’ என்று யாரும் அழைப்பதும் இல்லை, ‘போ’ என்று யாரும் சொல்லவதுமில்லை என்பதற்காக இந்த முடிவுக்கு வந்து விட்டீர்கள் போலிருகின்றது. வேதத்தை நம்பாமல் எப்படி ஒருவன் இந்துவாக இருக்க முடியும். என்ன வகை சுதந்திரம் ஐயா இது? முதலில் யாவருக்கும் அவரவர் நெறியில் நம்பிக்கை வர வேண்டும். அதன்பின் அந்நெறியில் நிற்க வேண்டும். இல்லையேல், சொர்ணா அக்காவைத் தான் கூப்பிடவேண்டும். அட, கட்ட பஞ்சாயத்து நெறிதான்.
சிவி, “ஹிந்துத்வம் என்பது “மனிதனாக இருப்பதற்கான கொண்டாட்டம்” ஆம். மனிதனாய் இருப்பதை நியாயப்படுத்துவதே ஹிந்துத்வம். மனிதனாய் இருப்பது என்பதன் நேர் அர்த்தம் தான் ஹிந்துத்வம்.” இக்கருத்தை கொஞ்சம் விளக்கமுடியுமா?
ரஜினிஸ் சாமியார்,நித்தியானந்தா இவர்கள் எல்லாம் இருந்தும்,ஹிந்து மதம் தமிழனுக்கு விளங்காமல் போனது நமது போதாத காலம்.
ஐயோ சாமி எனக்கு மதமே பிடித்து விட்டது ……
சிவி அவர்களே.. இந்து சமயம் சமுத்திரம் போன்றதுதான்.. அதில் உள்ள முத்தை, பவளத்தை மக்களுக்குக் கொடுக்க வேண்டுமே தவிற கரிக்கும் உப்பு நீரை அல்ல.. சாதியக் கொடுமைகள், கற்பணைக் கதைகளின் அடிப்படையில் பண்டிகைகள், ஒரு பண்டிகைக்கு ஒராயிரம் விளக்கங்களும் காரணங்களும்..
இந்து சமயம் ஒரு சமுத்திரம் இதில் ஆழத்தை ஆராய முடியாது கடலில் குளித்து முதேடுக்கலாம் ,எடுத்த முத்தை நீ எப்படி உரு மாற்றப் போகிறாய் என்பதை நீயே முடிவு செய் என்று கடவுள் மனிதனிடமே விட்டு விட்டார் அதற்கான பலனை நல்லகர்மவகவும் / கேட்டக்கர்மவகவும் அது மனிதனுக்கே திரும்பி வருகிறது மனிதன் என்பவன் தெய்வம் மாகலாம் அப்படி தெய்வம் மாகும் மனிதன் மற்றவர்க்கு வழிக்காட்டியாக இருக்க வேண்டும் இல்லையேல் பரம் பொருள் நம்மை தாண்டித் விடும் இதில் எப்படிப்பட்ட மாஹன்களும் அடங்குவர் இது அணித்தரமான உண்மை .இதை மஹாபாரதம் /ராமாயணம் /போன்ற இதிகாசங்கள் நமக்கு புரிய வைகின்றது புரிந்து நடந்தால் கோடி நன்மை
“The Guru is Brahma, the Guru is Vishnu, the Guru is Lord Shiva, Maheswara” It means that my Guru is Brahma, Vishnu and Shiva. Your Guru is Brahma, Vishnu and Shiva. All Gurus are Brahma, Vishnu and Shiva as well. It also means that Brahma is my Guru, and Vishnu and Shiva are my Gurus as well. The Gods are my Guru, as well as the Supreme Divinity. Creative Consciousness is my Guru, as is the Consciousness which Protects, and that which Transforms.
My Guru is Brahma, all Gurus are Brahma, Brahma is my Guru.
My Guru is Vishnu, all Gurus are Vishnu, Vishnu is my Guru.
My Guru is Shiva, all Gurus are Shiva, Shiva is my Guru.
Brahma, Vishnu and Shiva are my Guru in the cosmic body, in the subtle body, and in the individual bodies as well. The Guru is inside me. The Guru is outside me, and wherever we look, there is the presence of the Guru.
And therefore, we bow down to the Respected Guru.
ஹிந்து என்ற சொல்லுக்கு ‘கொள்ளை அடிப்பவன் அல்லது திருடன்’ என்று பாரசிக மொழியில் பொருளாமே அந்த சொல்லும் பாரசிக சொல்லாமே தலை சுற்றுகிறது தெரிந்தவர் விளக்கம் சொல்லுங்கள்.
சிவி அவர்களே தமிழர் வாழ்க்கைமுறையை ஹிந்து மதத்தோடு தொடர்பு படுத்தி கட்டுரை படைத்தது விட்டீர் . அப்படியானால் சந்தியாவந்தம் செய்பவர்களை யார் என்று கூர முடியுமா ?
ஹிந்து என்ற சொல்லுக்கு திருடன் என்ற விளக்கம் தந்தவன் இந்த தமிழ் நாடு தெலுங்கு பிறவி கரு-நாய்-நிதி ..இதையெல்லாம் நம்ப வேண்டிய அவசியம் இல்லை ….
தேனீயின் கருத்தும் கேள்வியும் சிந்தித்துப் பார்க்க வேண்டியவை. சிவி நீங்கள் சொல்லிய பல விஷயங்களில் உண்மையுண்டு,
மறுப்பதற்கில்லை. ஆனால் குழப்பங்களும் உள்ளன. நீங்கள் எழுதியதை நீங்களே மீண்டும் படித்து தியானித்து பாருங்கள். உண்மை புரியும். இறை தந்த ஹிந்து மதம் காலத்தால் மூத்தது. ஒரு மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டுகிறது. ஹிந்துக்கள் பலர் மனிதநேயமிக்கவர்களாக வாழ்கிறார்கள். ஆனால் இயேசுவையும் நபிகள் நாயகத்தையும் இறைத்தூதர்கள் என ஏற்கும் பல ஹிந்து பெருமக்கள் ஹிந்து எனும் சமுத்திரத்திலும் பல இறைத்தூதர்கள் தோன்றியுள்ளனர் என்பதை ஏற்க மறுப்பது வருத்தமளிக்கிறது. நீங்கள் சொல்வதுபோல் இறைத்தூதரின் வழியன்றி, மறையன்றி மனிதனாக உங்களைப்போல் சிலர் வாழலாம். ஆனால் பலரால் முடியுமா???நீங்கள் குறிப்பிட்டதற்காக சொல்கிறேன்… இன்றைய புள்ளி விபரப்படி உலகில் எண்ணிக்கையில் முதலிடம் கிருஸ்தவர்கள்தான். உலகளாவிய அளவில் பரவியுள்ளதும் அதுதான்.
சோழன் சொன்னது ஆயிரத்தில் ஒரு வார்த்தை..
எனக்கு தலை சுற்றுகிறது. குரு வழிபாட்டுக்கும் ஹிந்து மதத்திற்கும் ஏன் இவ்வளவு நீண்ட விளக்கங்கள். திரு குறளில் எளிமையான தமிழில் இறை வழி பட்டை பற்றி எழுதி உள்ளார். சித்தர் பெருமகான் எல்லாம் நான்கு வரிகளில் குரு வழி பாடும் இறை நம்பிக்கையும் நாம் புரியும் படி எழுதி வைத்து உள்ளனர். சமிப காலமாக இந்த கோயில் வழி பாடு குறைந்து குருஜி வழி பாடுகள் மற்றும் குறுக்கு வழியில் சித்து விளையாடும சில போலி குரு மார்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் பல சென்டர்களை திறந்து முன்று வேலை சாப்பாடு அதுவும் பக்தர்களின் செலவில் கொடுத்து, ஷீரடி பாபாவின் கதைளை சொல்லி பணம் வசூல் செய்யும் ஜாம்பவான்கள் நினைவில் கொள்ளுங்கள். சிவன் சொத்து குல நாசம். கபடதாரி வேடம் பூண்டு கஜானாவில் காசை நிரப்பும் நீங்கள் ஒரு நாள் அந்த கடவுள் முன் பதில் சொல்ல்வீர்கள். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொள்ளும். நானும் ஷீரடி சாய் பக்தன் தான். அதே சமயம் என் இந்து மத தர்மத்தை கடை பிடித்து வருகிறேன். அந்த ஷிரிடி பாபா நான் தான் கடவுள் என்று சொல்ல வில்லை. அனால் அவர் கையில் கிடைத்த தட்சைனைகளை ஏழை எளியவர்க்கு கொடுத்து கடைசியில் ஒன்பது நாணயங்கள் லட்சுமி பாய் அவரிடம் கொடுத்து போதனை சொல்லி உயிர் நீத்தார். உண்மையான குரு விளம்பரம் செய்ய மாட்டார்கள். அதிகம் பீசா மாட்டார்கள். தன உண்மையான சீடனை கண்டு கொண்டு இலை மறை காய் போல் வாழ்ந்து மஹா சமாதி அடைந்து இன்றும் வாழ்ந்து கொண்டு உள்ளனர். நம் குறுக்கு வழியில் லாபம் தேடவும், பிசினஸ் மக்னட் ஆக இந்த திடீர் கலியுக சித்தர்களை நடுகிறோம். அவன் அடுத்தவன் காசில் தான் பட்டமும், பகட்டும் , ஐந்து விரல்களில் நவரத்தினம் பதித்த மோதிரங்களும் போட்டு விலை உயர்ந்த வாகனத்தில் உலா வருகிறான். ஏமாந்த சோணகிரி இருக்கும் வரையில் இவங்கள் காசில நல்ல தின்னுட்டு ஏப்பம் விடுவாங்க. இந்த கலி உலகத்தில் நம் இந்துகளுக்கு வந்த சோதனை பாருங்கள்.