இளஞ்செழியன் தீர்ப்பிற்கு ஹுசைனின் அறிக்கையில் முக்கிய இடம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நடந்து முடிந்துள்ள 32வது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுசைன் வெளியிட்ட வாய்மொழி மூல அறிக்கையில் யாழ் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றிற்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 10ம் திகதி கிளிநொச்சி…

சிங்கள, முஸ்லிம் மக்களை வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கை தீவிரம்!

போரின்போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அரசு ஆரம்பித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கைத்தொழில் அமைச்சு, மாகாண அமைச்சுஆகியவற்றின் இணைத்தலைமையில் செயலணியொன்று அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்வழங்கியுள்ளது. "வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களில் 21 ஆயிரத்து 663 குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன.…

தனியார் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…

பாலியல் வதை, போதைப் பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை குற்றம் சாட்டப்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும்.அந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தகைய வழக்கு விசாரணைகள் முடியும்…

அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும்! கூட்டமைப்பு கோரிக்கை

நீண்ட காலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்று…

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 10204 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்!

வடக்கின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட 10204 குடும்பங்கள் இருப்பதாக மாவட்ட புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம், 41465 குடும்பங்களை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 4396 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன. 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்களின் படி ஆறு பிரதேச…

தமிழனுக்கு சிங்கள தலமைகள் தான் எதிரியா? இல்லை தமிழ்த் தலமைகளா?

எங்கள் தமிழ் அரசியல் தலமைகளைப் பார்த்து தென்னிலங்கை சிங்கள அரசியல் தலமைகள் கை கொட்டி சிரிக்கும் நகைப்பிற்குரிய செயற்பாடுகளாக தமிழ் அரசியல் தலமைகளின் செயற்பாடுகள் அமைந்திருப்பது வேதனைக்குரிய செயற்பாடாக அமைந்திருக்கிறது. ஒருகாலகட்டத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களின் அரசியல், அபிவிருத்தி, மற்றும் தேவைகள் குறித்து அக்கறை கொண்டிருந்தனர்…

கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமில்லை!

2010ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை படையினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமானது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம இதனை தெரிவித்துள்ளார் ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. கொத்துக்குண்டுகள் தொடர்பான மாநாட்டின் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தக்கூடாது என்ற நியதி 2010ஆம் ஆண்டு…

போர்க்குற்றம் தொடர்பான உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் சாத்தியமா?

போர்க்குற்றம் தொடர்பான உள்ளக விசாரணைகளில், சர்வதேச நீதிபதிகள் பங்கேற்க இலங்கையின் சட்டவாட்சியில் அதிகாரம் உள்ளதா இல்லையா என்பதை சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா விளக்கம் அளித்துள்ளார். லங்காசிறி வட்டமேசை அரசியல் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் கருத்து வெளியிட்டார். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிலவும்…

விடுதலைப் புலிகளின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர் விடுதலை

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டரை அவருக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை வழக்கறிஞரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேலதிக நீதவான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.…

விக்கினேஸ்வரன் புலியா? இதற்கு சர்வதேசம் தான் பதில் வழங்க வேண்டும்..!

தமிழர்கள் பற்றியும், தமிழர்களின் அரசியல் விவகாரங்கள் பற்றியும் எவர் வாய் திறந்தாலும், முதலில் அவர்களை இலங்கையின் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த அரசியல்வாதிகள் அடையாளப்படுத்துவது புலிப்பயங்கரவாதிகள் என்று தான். இந்த அடையாளப்படுத்தல் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரனையும் விட்டுவைக்கவில்லை. இலங்கையில் இது ஒருவகையான வியாதியாக மாறிப்போயுள்ளது அல்லது மனநோயாக…

தமிழரை பற்றி பேசினால் பயங்கரவாதி என்கின்றார்கள் என்னை: விக்கினேஸ்வரன்

தமிழரை பற்றி என்னதான் பேசினாலும் பயங்கரவாதியை போல் தன்னை கொழும்பில் சித்தரிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியுள்ளார். கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த 60வது வருடம் தமிழருக்கு மற்றவரை முன்னேற விடக் கூடாது என்ற…

முன்னாள் போராளிகளின் மர்மமான மரணம் குறித்து கண்டறிய நான் மருத்துவனல்ல!

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பலர் மர்மமான முறையில் அண்மைய காலமாக உயிரிழந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தம்மிடம் கேள்வி கேட்பதில் எவ்வித பயனும் கிடையாது என மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுக்கு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யாழப்பாணத்திற்கு இன்று விஜயம்…

ஐ.நா ஆணையாளரின் அறிக்கையினை வரவேற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் வாய் மூல அறிக்கையினை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில், முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கவனம் செலுத்துவதாகவும் அக்கட்டி குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு…

விடுதலைப்புலிகள் பொது மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினர்! அமெரிக்க பேராசிரியர்

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு பொறுப்பான தூதுவரின் சிரேஷ்ட ஆலோசகராக இருக்கும் பேராசிரியர் மைக்கல் நியூட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று…

கூட்டமைப்பின் நிதானமே வெற்றிக்குக் காரணம்!- ஜெனிவா அமர்வு குறித்து சம்பந்தன்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புநிதானமாகக் கையாண்டது. அதனூடாகவே திருப்திகரமான வெற்றி எமக்குக்கிடைக்கப் பெற்றிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் உறுப்பு நாடுகளும்வலியுறுத்திய விடயங்களை இலங்கை அரசு கவனத்தில் எடுத்துச் செயற்படவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமானஇரா.சம்பந்தன் தெரிவித்தார்.…

அனைத்துலக விசாரணையே தமிழர்களுக்கு நம்பிக்கை! ஐ.நா சபையில் தெரிவிப்பு

இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறந்த வரலாற்றுக்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. ஆகையினால், அனைத்துலக விசாரணை பொறிமுறையையே, தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும்’ என ஈழத் தமிழ் மக்கள் சர்வதேசப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. ஈழத் தமிழ் மக்கள் சர்வதேசப் பேரவையின் வெளிவிவகார அலுவலர் டி. திருக்குலசிங்கம் இந்த கோரிக்கையினை…

மனிதக்கடத்தல்களில் இலங்கைக்கு நான்காவது இடம்! அமெரிக்கா அறிவிப்பு

தொழில்களுக்காக மனிதக்கடத்தல் அமெரிக்கப்பட்டியலில் இலங்கை, நான்காவது ஆண்டாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு மனித கடத்தலை மேற்கொள்ளும் நாடுகளில் இலங்கையையும் கண்காணிப்பு பட்டியலில் அமெரிக்கா உட்படுத்தியுள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம்உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இலங்கையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலாளர்களாக பலவந்தமாக…

இலங்கை தமிழர் விடயத்தில் இந்தியா நேரடியாக தலையிடாது!

இலங்கை வியத்தில் இந்தியா நேரடியாக தலையிடாது என புதுடெல்லியில் உள்ள இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் குழுவொன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்கள், 1987ம் ஆண்டு…

விலைமதிப்பில்லா தெய்வ சிலைகளுடன் சீன பிரஜைகள் கைது

விலை மதிக்க முடியாத 3 பழைமையான தெய்வ சிலைகளை சீனாவுக்கு கொண்டு செல்ல முனைந்த சீனவை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை சீனா நோக்கி புறப்பட்டுச் செல்ல தயாராக இருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். பிள்ளையார்…

லிந்துலை தோட்ட மக்களின் அவலக்குரல் யாருக்கும் கேட்காதோ!

லிந்துலை வலஹா தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் 33 வீடுகளை கொண்ட லயன் பகுதிகளில் வாழும் 150 இற்கு மேற்பட்ட மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அதிகமான குடும்பங்கள் வீடு வசதிகள் இல்லாமல் இவர்களால் அமைக்கப்பட்ட தற்காலிகமான வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த வீடுகளில்…

இன்றைய சர்வதேச அரசியல் பொருளாதார அதிர்வுகளை 1986 இலேயே எதிர்வு…

1986ம் ஆண்டு இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் - அது பனிப்போர் காலம் - முதலாளிய சனநாயகம் என்று மேற்குலகமும் சோசலிசம் என்று சோவித் யூனியன் தலைமையில் கிழக்குலகமும் பொருதிக கொண்டிருந்த காலம். தம் இறைமைக்காக போராடியவர்கள் பலரும் சோசலிசவாதிகள் என அடையாளம் காணப்பட்டதும் இரு பகுதியில் ஒருவரின்…

மூதூர் படுகொலை விசாரணை:20 ஆண்டுகளின் பின்னர் மீண்டும்!

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள குமாரபுரம் கிராமத்தில் நடைபெற்ற படுகொலை தொடர்பான நீதிமன்ற விசாரணை பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தற்போது ஜுரி சபை முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது. 20 வருடங்களுக்கு முன்பு யுத்த காலத்தில் குமாரபுரம் கிராமத்தில் நடந்த இந்த…

மூன்று தடவைகள் கொல்லப்பட்ட பிரபாகரன்! மரபணு பரிசோதனை நடத்த கோரிக்கை

இறுதிப் போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என்று இராணுவத்தினரால் காண்பிக்கப்பட்ட உடல் அவருடையது இல்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் என காண்பிக்கப்பட்ட உடலை மரபணு பரிசோதனைக்குட்படுத்த அரசு விரும்பினால் கனடா மற்றும் டென்மாக்கில் உள்ள…