இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
திறன்மிக்க ஆயுதப் போராட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் தம்மை நிரூபித்திருந்தனர்!…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 37வது நினைவுப் பேருரை இன்று, கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தலைமையில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன்…
2014 – 2017 வரையுள்ள நான்கு ஆண்டுகளும் இலங்கையை கண்காணிக்கும்…
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை உட்பட்ட நாடுகள் தொடர்பில் சமர்ப்பித்துள்ள நான்கு வருட திட்டம், 2017ம் ஆண்டு வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப் பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை உட்பட்ட நாடுகள் தொடர்பில் சர்வதேசத்துடன் இணைந்து…
பொதுபல சேனா புலிகளை விட மோசமான அமைப்பு! அமைச்சர் ரிஷாத்…
பொது பல சேனா அமைப்பினர் விடுதலைப் புலிகளை விடவும் மோசமான ஒரு நிலைமையை இந்த நாட்டில் கொண்டுவர முயற்சிக்கின்றனர் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 30 வருட கால யுத்தத்தின் பின்னர் நிம்மதியான சூழ்நிலை ஏற்படுமென்றும், அச்சமின்றி தொழில் செய்யலாம், பிள்ளைகளுக்கு கல்வி புகட்டலாம் என்றும்…
தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள்: இலங்கை மறுப்பு
இலங்கையின் போரின் போதும், பின்னரும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வா இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார். பெண்கள் மற்றும் சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்ற விடயம் தொடர்பில் நியூயோக்கில் இடம்பெற்ற…
பொருளாதார தடை குறித்த பிரித்தானியா தீர்மானிக்கவில்லை!
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதிப்பது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்க பிரித்தானியா பூரண ஆதரவை வழங்கி இருந்தது. பொருளாதார தடை விதிப்பது ஒரு…
தேசத்துரோகக் குற்றச்சாட்டை மன்னார் ஆயர் நிராகரிப்பு
மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்கள் இருவரும் தேசத்துரோகக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள பொதுபலசேனா அமைப்பு, அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி, காவல்துறையினரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருக்கின்றது. இது குறித்து கருத்து வெளியிட்ட மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், அவர்களுடைய…
புலிகள் மீண்டெழ முயன்றதற்கு ராஜபக்ச அரசே பொறுப்பு – சரத்…
விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்கு முறைப்படி புனர்வாழ்வு வழங்கப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். “இதன் விளைவாகத் தான், அவர்களில் சிலர் ஈழப் போராட்டத்தில் மீண்டும் இறங்கினர். புனர்வாழ்வுத் திட்டங்களுக்காக பெறப்பட்ட வெளிநாட்டு நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ராஜபக்ச அரசாங்கத்தின்…
போரின் போது தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறை! இலங்கை…
இலங்கையில் இறுதிப் போரின் போது தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தீவிரமான அவதானத்தை செலுத்தி வருகிறது. இந்த விடயத்தில் இலங்கை தமது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை எதிர்ப்பார்ப்பதாக போரின் போது பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும்…
வடக்கில் புலிகளை உயிர்ப்பிக்க சந்தோசம் மாஸ்டர் என்பவர் முயற்சி!
வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்க சந்தோசம் மாஸ்டர் என்பவர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தோசம் மாஸ்டர் எனப்படும் பரமநாதன் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னர் சந்தோசம் மாஸ்டர் சுவிட்சர்லாந்து சென்று தஞ்சமடைந்துள்ளார். சுவிட்சர்லாந்தின் இரண்டு வங்கிகளில் வங்கிக்…
யாழ். சிறைச்சாலையில் தொடரும் மர்மமான மரணங்கள் – கேட்பாரின்றி மரணமடையும்…
யாழ். சிறைச்சாலையில் தொடரும் மர்ம மரணங்களால் அங்கு அச்சமானதொரு சூழல் காணப்படுகின்றது. சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையசிறைச்சாலை உத்தியோகத்தரை கைது செய்ய நீதிமன்று உத்தரவிட்டிருந்த நிலையில் அவர்;…
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விக்னேஸ்வரனுடன் இந்தியா பேச்சுவார்த்தை!
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளது. காங்கிரஸ் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல்கள் நிறைவடைவதற்கு முன்னதாக இந்த சந்திப்பு அழைப்பட உள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைத்து இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. விக்னேஸ்வரனின் இந்திய விஜயம்…
இனி என்ன நடக்கும் இலங்கையில்?- விளக்குகிறார் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்…
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிவிட்ட சூழலில், உலகெங்கிலும் உள்ள முக்கியமான 16 தமிழ் அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து, உலக நாடுகளிடம் அவை மீதான தடையையும் கோரியிருக்கிறது இலங்கை அரசாங்கம்! அத்துடன், இலங்கைக்குள் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றதாக நெடுங்கேணி…
ராஜபக்ஷக்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் –…
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.பிடகோட்டே பிரதேசத்தில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத்…
விக்னேஸ்வரனுக்கு நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை அனுப்ப வேண்டும்!- மனோ…
13ம் திருத்தச் சட்டத்தின் மீதே இந்த சபை நடைபெறுகிறது. தேசிய இனப்பிரச்சினை தீர்வின் முதற்புள்ளியாக, மாகாணசபை முறைமையின் மீது நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை, வடமாகாணசபை முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்ப வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பத்தரமுல்லை மேல்மாகாணசபை மண்டபத்தில் நேற்று…
ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்று
ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் இராணுவத்தினரின் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது இன்றைய தினத்திலாகும். சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே…
வறணி படைத்தளத்திலிருந்த பாரிய மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக அகற்றப்பட்டனவா?
இலங்கை இராணுவத்தின் தென்மராட்சியின் முக்கிய படைத்தளமாகவும், முன்னைய முன்னரங்க நிலையான முகமாலைக்கான விநியோக தளமாகவும் இருந்த வறணி படைத்தளத்திலிருந்த பாரிய மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக அகற்றப்பட்டமை தொடர்பான முக்கிய தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக 1996ம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்ட வேளையில் பருத்தித்துறை – கொடிகாமம் வீதியில்…
தொடர்ந்தும், நீதி மறுக்கப்பட்டால், தமிழர்களுக்கான போர்க் களம் மீண்டும் திறக்கப்படும்!
பாண்டவர்களுக்கு ஆட்சி உரிமை கிடையாது என்றார்கள் கௌரவர்கள். நூற்றுவர்களான தங்களுக்கு அடிபணிந்து வாழ்வதே அவர்களது விதி என்றுரைத்தார்கள். கௌரவர்களது ராஜ்ஜியம் பெரியது, அதன் சேனை பெரியது. எனவே, கௌரவர்களுடன் மோதி, பாண்டவர்களால் வெற்றி பெற முடியாது என்றார்கள். நாடு கேட்டு முழக்கமிட்ட பாண்டவர்கள், தமக்கான நிலத்தையாவது தரும்படி கேட்டார்கள்.…
இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
இந்தியாவில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2009ஆம் ஆண்டில் நடைபெற்றபோது, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் உச்சகட்டத்தில் இருந்தது. பல தமிழ் தேசிய அமைப்புகள், ஈழ ஆதரவு அமைப்புகள் மிகத் தீவிரமாக இது குறித்த பிரச்சாரங்களை முன்வைத்தனர். காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள்கூட நிறுத்தப்பட்டனர். அந்தத்…
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசுக்கு காலஅவகாசம் உள்ளது!-…
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண அரசாங்கத்திற்கு மேலும் காலஅவகாசம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கியமான நாட்டிற்குள் பிரச்சினைக்கு தீர்வுகாண தாம் இணங்குவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். அரசாங்கத்திடம் அதற்கான விரிவான வேலைத்திட்டங்கள் இல்லாததன் காரணமாக பிரச்சினை சர்வதேசம் வரை சென்றுள்ளது எனவும்…
ஐ.நா விசாரணைக் குழுவை நியமிக்க முன்னர் நவிபிள்ளை, பான் கீ…
இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா விசாரணைக் குழுவின் நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று…
விசாரணைகளைக் குழப்பும் முயற்சிகள் பலிக்குமா?
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் மேற்கொண்டுள்ளது. இதற்கென துறைசார் நிபுணர்களைத் தெரிவு செய்யும், அவர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்கும், ஏனைய விசாரணை நெறிமுறைகளை வகுக்கும் பணிகளில் நவநீதம்பிள்ளையின் பணியகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அடுத்த மாதம்…
ஈழ மக்களுக்குப் படிப்படியாகவே நீதி கிடைக்கும்! மர்சூக்கி தருமான்
ஈழ மக்களுக்கு படிப்படியாக நீதி கிடைக்கும் என்று, இறுதி யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளருக்காக விசாரணை நடத்திய நிபுணர்கள் குழுவின் தலைவர் மர்சூக்கி தருமான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் - நியுயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தருஸ்மன்…
பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்!- தமிழ்…
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் இராணுவ…


